Header Ads



தனி தனியாக போட்டியிடுவோம், ஒருவரை ஒருவர் தாக்கிக்கொள்ள மாட்டோம் - சந்திரிக்கா

அரசியலில் நாட்டை குறித்து சிந்திக்கும் நபர்களையும் கட்சி குறித்து சிந்திக்கும் நபர்களையும் அடையாளப்படுத்திக் கொள்ளும் சந்தர்ப்பம் உருவாகியுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க தெரிவித்துள்ளார்.

மாத்தளையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

கட்சி, கட்சி என கூறிக்கொண்டு பல்வேறு அழுக்கான விலங்குகள் நாட்டை சீரழிக்கின்றது. எங்களுக்கு தற்பொழுது அவசியமாக இருப்பது கட்சியை குறித்து சிந்திப்பதல்ல நாட்டை குறித்து சிந்திப்பது மாத்திரமே.

மீண்டும் அதிகாரத்திற்கு வரவேண்டும், பிரதமர் பதவி வேண்டும், ஜனாதிபதி பதவி வேண்டும் என தற்போது ஒருவர் பின் ஒருவராக போராடுகின்றார்கள். நான் இவர்களை போல் தோல்வி அடைந்ததில்லை.

துறையின் முக்கியத்துவத்திற்கமைய இரண்டு முறை அரசாங்கத்தில் ஆட்சி செய்து விட்டு 09 வருடங்கள் வீட்டோடு இருந்து விட்டேன். நானும் பஸ்களில் மக்களை அழைத்து வந்திருக்கலாம், எனினும் நான் அப்படி செய்யவில்லை.

இந்நாட்டில் மிக பழைமையான கட்சி இரண்டு உண்டு. ஒன்று எங்கள் கட்சியும், மற்றையது ஐக்கிய தேசிய கட்சியுமே. வரலாற்றில் வேறு எந்த ஒரு கட்சியும் அதிகாரத்திற்கு வரவில்லை, இனிமேலும் வரப்போவதில்லை.

எங்கள் பிரதான கட்சிகள் இரண்டும் தனி தனியாக போட்டியிடுவோம், ஒருவரை ஒருவர் தாக்கிக்கொள்ள மாட்டோம். எனினும் தேர்தலின் பின்னர் நான் ஒன்றிணைந்து செயற்படுவோம்.

நாட்டில் அமைதியான அரசாங்க யுகம் ஒன்றை ஏற்படுத்துதலே அவசியம் என முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க மேலும் குறிப்பிட்டுள்ளார்.

1 comment:

Powered by Blogger.