Header Ads



மஹிந்தவை எதிர்கொள்ள, மந்திராலோசனையை ஆரம்பித்த சந்திரிக்கா

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுக்கு ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டணியில் வேட்புரிமை வழங்கப்பட்டால் பொதுத் தேர்தலின் போது மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கை தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா கலந்துரையாடல்களை ஆரம்பித்துள்ளார்.

மஹிந்த ராஜபக்ச தேர்தலில் களமிறங்குவதாக அறிவித்ததை தொடர்ந்து, ஐக்கிய தேசிய கட்சி, பிரபல அரசியல் கட்சிகள் மற்றும் அமைப்புகளின் உறுப்பினர்களுடன் இக்கலந்துரையாடல்களை ஆரம்பித்துள்ளார்.

கடந்த ஜனாதிபதி தேர்தலின்போது மஹிந்த ராஜபக்சவை தோற்கடிக்கும் நோக்கில் ஐக்கிய தேசிய கட்சி மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் ஆதரவை பெற்றுக்கொள்வதற்கு முன் நின்றவரும், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை ஜனாதிபதி வேட்பாளராக தீர்மானித்ததும் சந்திரிக்கா குமாரதுங்க என்பது குறிப்பிடத்தக்கது.

மைத்திரிபால சிறிசேனவை ஜனாதிபதியாக்குவதற்கு ஆதரவு வழங்கிய ஐக்கிய தேசிய கட்சி மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் அதிகாரத்தை கொண்ட கூட்டணி ஒன்றை உருவாக்குவதற்கு ஜாதிக ஹெல உறுமய இணக்கம் வெளியிட்டிருந்தது.

எப்படியிருப்பினும் ஐக்கிய தேசிய கட்சி தனியாக தேர்தலில் போட்டியிடுவதற்கே இதுவரையில் தீர்மானித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

1 comment:

  1. மைத்திரி சந்திரிக்கா ரணில் கூட்டனியை விட மைத்திரி சந்திரிக்கா கூட்டனியும் ரணில் கூட்டனியும் வேறு வேறாக தேர்தலில் போட்டி இடுவதே மகிந்தவை படுதோல்வியடைய செய்யும்.

    ReplyDelete

Powered by Blogger.