Header Ads



கண்டி மாவட்ட முஸ்லிம் வேட்பாளர்களின் (உத்தியோகபூர்வமற்ற) விபரம்..!

-ஜஹங்கீர்-

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி சார்பில் போட்டியிடுகின்ற கண்டி மாவட்ட வேட்பாளர்களுக்கான நேர்முகப் பரீட்சை இன்று (02.07.2015) கொழும்பில் சுதந்திரக் கட்சித் தலைமையகத்தில் நடைபெற்றது.

இந்த நேர்முகப் பரீட்சையில்  கண்டியைச் சேர்ந்த பிரபல சட்டத்தரணி பஸ்லின் வாஹிட், தென்னேக்கும்புறை நசார் ஹாஜியார், மடவளை சபான் ஆகியோர் நேர்முகப் பரீட்சைக்கு முகம் கொடுத்தார்கள் என்று சுதந்திரக் கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

புத்திஜீவிகளைத் தேர்தலில் களமிறக்க வேண்டும் என்ற கோஷம் மேலோங்கி இருப்பதால் சட்டத்தரணி பஸ்லின் வஹிட் அவர்களுக்கு அதிக வாய்ப்பு இருப்பதாக அரசியல் வட்டாரங்களிலிருந்து கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டு வருகின்றது.

இவர் முன்னாள் ஸ்ரீ.ல.மு.காங்கிரஸ் மத்திய குழு உறுப்பினராகவும் முன்னாள் யடிநுவர பிரதேச சபை உறுப்பினராகவும் இருந்து வந்திருக்கின்றார். பல சமூக நல இயக்கங்களில் இவர் ஈடுபாடுகொண்டவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

அதேநேரம் ஐக்கிய தேசியக் கட்சி பட்டியலில் ஹலீம், மு.கா.சார்பில் ஹக்கீம். ஆகிய இருவருக்கு மட்டுமே வாய்ப்பு என்று தெரிய வருகின்றது. பெரும் எதிர்பார்ப்பில் இருந்த ஜனரஞ்சக அரசியல்வாதி லாபீர் ஹஜியாருக்கு ஏமாற்றம் என்று தெரிகின்றது.

அசாட் சாலியைத் தேசிய பட்டியலில் ஏதோ ஒருவகையில் உள்வாங்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. http://www.jaffnamuslim.com/2015/07/blog-post_8.html

ஐ.தே.க வேட்பு மனுவில் நுழைந்து கொள்ள  சாலி ஆர்வமாக இருந்தாலும் அந்த வாய்ப்புக் கிடைக்குமா என்பது தெளிவில்லாமல் இருக்கின்றது.

ஜேவிபிலிருந்து மாவில்மடையிலிருந்து ஒருவர் களமிறக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

காதர் ஹாஜியார் நிலைப்பாடு என்ன என்று தெரியவில்லை. ஓரிரு தினங்களுக்கு முன்னர் கண்டிக்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த வந்தபோது அவர் பின்னால் காதர்; ஹாஜியார் சுற்றித்திரிந்ததைப் பார்க்க முடிந்தது.

சில வாரங்களுக்கு முன்னர்  தினக்குரல் வார ஏட்டிற்குப் பேட்டி கொடுத்திருந்த காதர் தான் இன்னும் ஐக்கிய தேசியக் கட்சியில்தான் இருக்கின்றேன் என்று உறுதிபடக் கூறி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

சுதந்திரக் கட்சியில் கடந்த தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்ற பைசர் முஸ்தபா கண்டிய மக்களை நடு ஆற்றில் விட்டு விட்டு கொழும்பில் அரசியல் செய்யப்புறப்பட்டதால் அவர் நிலை என்ன என்று புரியவில்லை. அவரும் தேசியப் பட்டியல் எதிர்பார்ப்பதாகத்தான் தகவல்.

1 comment:

  1. நல்ல முடிவுதான்.ஆனால் நுஆ கட்சியை கையில் வைத்துக்கொண்டு ஏன் சுயேட்சையில் களமிறங்க வேண்டும்

    ReplyDelete

Powered by Blogger.