Header Ads



"ஜனாதிபதி மரணித்தால், பிரதமராக பதவி வகிப்பவர் ஜனாதிபதியாகலாம்"

முன்னாள் ஜனாதிபதிகள் தேர்தலில் போட்டியிட்டு நாடாளுமன்றத்திற்கு தெரிவானால், முன்னாள் ஜனாதிபதிக்கு உரிய சலுகைகளும் நாடாளுமன்ற உறுப்பினருக்கு உரிய சலுகைகளும் வழங்கப்பட வேண்டும் என சிரேஷ்ட சட்டத்தரணி சந்திரபால குமாரகே தெரிவித்துள்ளார்.

இரண்டு பதவிகளுக்கு உரிய சலுகைகள் இவருக்கும் வழங்கப்படுதன் மூலம் மக்களின் அபிலாஷைகள் நிறைவேற்றப்படுமா என்பது சந்தேகத்திற்குரியது எனவும் அவர் கூறியுள்ளார்.

இலங்கையின் ஜனாதிபதிகளாக பதவி வகித்த எவரும் மீண்டும் நாடாளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்படவில்லை.

இப்படியான அனுபவங்கள் இல்லாத காரணத்தினால், அது பற்றி விவாதம் ஒன்றை ஏற்படுத்த வேண்டும். அரசியலமைப்புச் சட்டத்தில் திருத்தங்களை செய்யும் போது சட்டத்தரணிகளிடம் மாத்திரமல்ல பொதுமக்களிடம் இருந்தும் கருத்துக்களை பெற வேண்டும்.

முன்னாள் ஜனாதிபதி ஒருவர் நாடாளுமன்ற உறுப்பினராக தெரிவாகி பிரதமராக பதவியேற்று, திடீரென ஜனாதிபதி இறக்கும் சந்தர்ப்பத்தல், பிரதமராக பதவி வகிக்கும் முன்னாள் ஜனாதிபதி மீண்டும் ஜனாதிபதி பதவிக்கு வர முடியும் இது சிக்கலான நிலைமை எனவும் சந்திரபால குமாரகே மேலும் தெரிவித்துள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச பிரதமர் பதவிக்கு போட்டியிட்டால், தானும் பிரதமர் பதவிக்காக போட்டியிட போவதாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார்.

இவர்கள் இருவரும் தேர்தலில் போட்டியிட்டு நாடாளுமன்றத்திற்கு தெரிவானால், பெரும் அரசியல் சிக்கல் நிலைமை ஏற்படும் என சுட்டிக்காட்டப்படுகிறது.

1 comment:

  1. 100% இவர் சொல்லுவது சரியானது இந்த விடயத்தை ஜனாதிபதியும் அரசாங்கமும் உடனடியாக கவனத்தில் எடுக்க வேண்டும். யாராவது புத்தி ஜீவிகள் நீதிமன்றில் வாலக்கொன்ரை தொடர வேண்டும். கூடிய விரைவில்.

    ReplyDelete

Powered by Blogger.