Header Ads



முஸ்லிம் பிரதேசத்தில், முதலாவது தேர்தல் வன்முறை...!

-மு.இ.உமர் அலி-

நிந்தவூர் ஐக்கிய தேசியக்கட்சியின் அமைப்பாளர் MM ரிபாக் அவர்களும் நிந்தவூர் பிரதேச சபை சாரதியும் வாக்குவதத்திலீடுபட்ட சம்பவம்  கடைசியில்  கைகலப்பில் முடிவுற்றது.

கடமை நிமித்தம் அதிகாரிகளை  நிந்தவூர் பிரதேச செயலாளர் காரியாலயத்திற்கு ஏற்றிச்சென்று அவர்கள் திரும்பி வரும்வரை காத்திருந்த  மேற்படி சாரதியும்,நிந்தவூர் பிரதேச  ஐக்கிய தேசியக் கட்சியின் அமைப்பாளரும்  தத்தம்  கட்சிகள் பற்றி பேசிக்கொண்டிருக்கும்போது.சாரதி ஐக்கியதேசியக்கட்சியின் தலைவரையும் தேசிய அமைப்பாளர் தயா கமகேயையும்  தகாதவார்த்தைகளால்  திட்டி இருக்கின்றார். இதனைத்தொடர்ந்து வாய்த்தர்க்கம் முற்றியுள்ளது. அத்துடன் “நிந்தவூரில் எங்களை மீறி யாரும்செயற்பட முடியாது” என்று கூறிய சாரதி  இணைப்பாளரையும் அவருடன் வந்த நண்பரையும் தாக்கியிருக்கிறார்.அவர்களும் எதிர்த்துத்தாக்கியிருக்கின்றார்கள்.மேலும் சாரதியின்  உறவினர்கள்  இருவரும் அவருடன் சேர்ந்து கொன்டு தங்களை  தாக்கியதாக இணைப்பாளர்  றிபாக் அவர்களை தொலைபேசியில் தொடர்பு கொண்டபோது  கூறினார்,

இறுதியில்  பொதுமக்கள் இரு பிரிவினரையும்பிரித்துவிட முகத்திலும் கடைவாயிலும் காயங்களுக்குள்ளானசாரதி நிந்தவூர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.

ஏனைய நபர்களிருவரும்  அஷ்ரப் ஞாபகார்த்த  வைத்தியசாலையின்  எட்டாமிலக்க விடுதியில்  சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இன்று நண்பகல் நடைபெற்ற இச்சம்பவத்தினை சம்மாந்துறைப் போலீசார்  மேலதிக விசாரணைகளை  மேற்கொண்டு வருகின்றனர்.

No comments

Powered by Blogger.