Header Ads



முஸ்லிம் சகோதரத்துவ அமைப்பு, எழுச்சி போராட்டத்திற்கு அழைப்பு

எகிப்து பொலிஸாரினால் முஸ்லிம் சகோதரத்துவ அமைப்பின் உறுப்பினர்கள் பலரும் கொல்லப்பட்ட நிலையில், 'பயங்கர விளைவை சந்திக்க வேண்டிவரும்" என்று எச்சரித்திருக்கும் அந்த அமைப்பு 'கிளர்ச்சி போராட்டம்" ஒன்றுக்கும் ஆதரவாளர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளது.

கெய்ரோ புறநகர் பகுதியில் கடந்த புதன் கிழமை சுற்றிவளைப்பு தேடுதலில் ஈடுபட்டிருக்கும் பொலிஸார் தடைசெய்யப்பட்ட முஸ்லிம் சகோதரத்துவ அமைப்பின் ஒன்பது உறுப்பினர்களை சுட்டுக்கொன்றுள்ளனர்.

இதில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரான நாஸர் அல் ஹப்பியும் இருப்பதாக பாதுகாப்பு வட்டாரங்களை மேற்கோள் காட்டி செய்தி வெளியாகியுள்ளது.

கைதுசெய்யப்பட்டிருக்கும் சகோதரத்துவ உறுப் பினர்களின் குடும்பத்தினருக்கான உதவிகளை வழங்குவது குறித்து அந்த அமைப்பின் உறுப்பினர்கள் கலந்துரையாடிக்கொண்டிருந்த போதே அந்த கட்டடத்தை சுற்றிவளைத்து பொலிஸார் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

எனினும் தப்பியோடிய சகோதரத்துவ உறுப்பி னர்கள் மீதே தாக்குதல் நடத்தியதாக, எகிப்து உள்துறை அமைச்சு குறிப்பிடும் தகவலை சகோ தரத்துவ அமைப்பினர் மறுத்துள்ளனர். கொல்லப் பட்டவர்களில் மரண தண்டனை விதிக்கப்பட்டவர்கள் இருவரும் இருப்பதாக உள்துறை அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

இதன்போது ஆயுதங்கள், 43,000 எகிப்து பௌன்கள், ஆவணங்கள் மற்றும் மெமரி காட் கள் கைப்பற்றப்பட்டதாகவும் இந்த குழு இராணு வம், பொலிஸார், நீதித்துறை மற்றும் ஊடகங்கள் மீது தாக்குதல் நடத்த சதி செய்ததாகவும் உள்துறை அமைச்சின் அறிக்கையில் குறிப்பிடப் பட்டுள்ளது.

முஸ்லிம் சகோதரத்துவ அமைப்பிற்கு ஆதரவான மெகாமலீன் தொலைக்காட்சி வெளியிட்ட பிந்திய செய்தியில், கொல்லப்பட்டோர் எண்ணி க்கை 13 ஆக உயர்ந்திருப்பதாக குறிப்பிடப்பட் டுள்ளது. இதன்போது சகோதரத்துவ தலைவர்கள் வீட்டிற்குள் சிறைப்பிடிக்கப்பட்டு, எந்தவொரு விசாரணை அல்லது குற்றச்சாட்டும் இன்றி பழி தீர்க்கும் வகையில் கொல்லப்பட்டுள்ளனர் என்று அந்த செய்தி குறிப்பிட்டுள்ளது.

பலி எண்ணிக்கை உயர்ந்திருப்பதை எகிப்து நிர்வாகம் உறுதிசெய்ய வில்லை.

இந்த கொலை சம்பவத்திற்கு பின்னர் சகோதரத்துவ அமைப்பு வெளி யிட்டிருக்கும் அறிவிப்பில், இந்த கொலைகள் பாரிய விளைவை ஏற் படுத்தும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. 'குற்றவாளியான (எகிப்து ஜனாதிபதி) அப்துல் பத் தாஹ் அல் சிசி மற்றும் அவரது குண்டர்களே இந்த குற்றச்செயல் மற்றும் அதன் விளைவுகளுக்கு பொறுப்பேற்க வேண்டும்" என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

'உங்களது தேசம், உங்களது உயிர் மற்றும் உங்களது குழந்தைகளை பாதுகாக்க கிளர்ச்சி போராட்டம் எழுச்சி பெறும்" என்றும் அந்த அறிக்கையில் குறிப் பிடப்பட்டுள்ளது. எமது தாய்நாட்டிற்கு எதிராக இந்த கொலையாளிகள் தற்போது மிகப்பெரிய மற்றும் பயங்கர படுகொலைகளை நிகழ்த்தியுள் ளனர் என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த படுகொலை சம்பவம் நிலைமையை மேலும் அபாயகரமான சூழலுக்கு கொண்டுவந் திருப்பதாகவும் மிகப்பெரிய கொந்தளிப்பை ஏற் படுத்தும் என்றும் முஸ்லிம் சகோதரத்துவ அமை ப்பு எச்சரித்துள்ளது.

சினாயில் இருக்கும் எகிப்து பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் மீது ஆயுததாரிகள் பாரிய தாக்குதல் நடத்திய தினத்திலேயே சகோதரத்துவ உறுப்பினர்களும் கொல்லப்பட்டுள்ளனர்.

சுமார் 100 போராளிகள் இராணுவ சோதனைச்சாவடிகள் மற்றும் பொலிஸ் நிலையங்கள் மீது நடத்திய ஒருங்கிணைந்த தாக்குதலில் 17 இராணுவத்தினர் கொல்லப்பட்டதாக எகிப்து அரசு குறிப்பிட்டுள்ள து. எனினும் இந்த தாக்குதலில் கொல்லப்பட்ட இராணுவம் மற்றும் பொலிஸாரின் எண்ணிக்கை குறிப்பிடப்பட்டதை விடவும் மிக அதிகம் என்று பாதுகாப்பு வட்டாரங்கள் குறிப்பிட்டுள்ளன.

எகிப்தில் சினாயில் இயங்கும் அன்சார் பைத் அல் மக்திசி என்ற ஆயுதக் குழு கடந்த நவம்பரில் இஸ்லாமிய தேசம் குழுவுடன் இணையும் அறிவிப்பை வெளியிட்டமை குறிப்பிடத்தக் கது.

முன்னதாக எகிப்து தலைமை வழக்குத்தொடுனர் கடந்த திங்கட்கிழமை கார் குண்டு தாக்குதலில் கொல்லப்பட்டார். இதனையடுத்து தீவிரவாதிகள் என்று குறிப்பிடுபவர்களை தடுப்பதற்கு கடுமையான சட்டங்களை கொண்டுவருமாறு அமைச் சரவைக்கு சிசி உத்தரவிட்டார்.

மறுபுறத்தில் எகிப்தின் அல் அஸ்ஹர் பல்கலை க்கழகத்தைச் சேர்ந்த 75 மாணவியர் இடைநிறுத்தப்பட்டுள்ளனர்.

இவர்கள் பல்கலைக்கழகத்திற்கு எதிராக வன்முறை மற்றும் சதி வேலைகளில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

முஸ்லிம் சகோதரத்துவ அமைப்பின் முன்னணி உறுப்பினராக முன்னாள் ஜனாதிபதி மொஹமட் முர்சி 2013 ஆம் ஆண்டு இராணுவ சதிப்புரட்சி மூலம் பதவி கவிழ்க்கப்பட்ட பின்னர் சகோதரத் துவ அமைப்புடன் தொடர்புபட்டவர்கள் என்று குற் றம்சாட்டி நூற்றுக்கணக்கான மாணவர்கள் நீக்கப் பட்டுள்ளனர்.

2 comments:

  1. How long this Neo Firhoun El Sisi criminal gang hyenas dancing on the graves of Brotherhood Shaheeds .
    Wont b long to join Mubarak gang !

    ReplyDelete

Powered by Blogger.