Header Ads



"தேர்தலில் மகிந்த போட்டியிட்டு, நாட்டுக்கு ஏற்படப்போகும் பாதிப்பை தடுக்கவே சந்திரிகா களமிறங்குகிறார்"

முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க எதிர்வரும் பொதுத் தேர்தலில் போட்டியிடவுள்ளதாக அவரது செயலாளரான பீ. திசாநாயக்க தெரிவித்தார்.  

நாட்டுக்காகவும் மக்களுக்காகவும் செயற்படுவேனே தவிர அரசியலுக்கு மீண்டும் பிரவேசிக்கும் நோக்கம் தமக்குக் கிடையாதென சந்திரிகா குமாரதுங்க தெரிவித்திருந்த போதிலும், கடந்த ஜனாதிபதித் தேர்தலில் தோல்வியுற்ற முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ  எதிர்வரும் பொதுத்தேர்தலில் போட்டியிடுவாரென்றால், இதனால் நாட்டுக்கு ஏற்படப்போகும் பாதிப்பைத் தடுக்க சந்திரிகா குமாரதுங்கவும் எதிர்வரும் தேர்தலில் களமிறங்குவார் என்றும் அவருக்கு அந்த உரிமை இருப்பதாகவும் திசாநாயக்க கூறினார்.  

2010 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் மகிந்த ராஜபக்ஷ 58 சதவீத வாக்குகளைப் பெற்றதை பெரிதாக பேசுவார்கள் எனில், 1994 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் சந்திரிகா குமாரதுங்க 63 சதவீத வாக்குகளைப் பெற்றிருந்ததாகவும் அவர் தேர்தலில் ஒருபோதும் தோற்றதில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.  

ஆகவே, கடந்த ஜனாதிபதித் தேர்தலில் தோல்வியுற்ற மகிந்த ராஜபக்ஷ எதிர்வரும் பொதுத்தேர்தலில் போட்டியிடவுள்ள நிலையில், சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவும் தேர்தலில் போட்டியிடுவார் என்றும் பிரதமராவதற்கான தகுதி மகிந்த ராஜபக்ஷவை விடவும் சந்திரிகா குமாரதுங்கவிற்கு அதிகமாகவே இருப்பதாகவும் திசாநாயக்க மேலும் கூறினார்.  

முன்னாள் ஜனாதிபதி சந்திரகா பண்டாரநாயக்க குமாரணதுங்க எதிர்வம் நாடாளுமன்றத் தேர்த்லில் ஐக்கிய மக்கள் மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் சார்பில் போட்டியிடுகிறார். இவரது பெயர் ஐக்கிய மக்கள் மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் கம்பஹா மாவட்ட வேட்பாளர் பட்டியலில் இடம்பெற்றுள்ளது.

No comments

Powered by Blogger.