Header Ads



சர்வதேச போதைப்பொருள் கடத்தல் புள்ளி, மொஹமட் முஜாஹித்தை சந்தித்தது உண்மையே - கோத்தபாய

இலங்கை அரசாங்கத்தினால் சர்வதேச போதைப்பொருள் கடத்தல் புள்ளி என வர்ணிக்கப்படும் நபரை தான் சந்தித்தது உண்மை என முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது

இலங்கை அரசாங்கத்தினால் சர்வதேச போதைப்பொருள் கடத்தல் புள்ளி என வர்ணிக்கப்படும், நபரை 2011 ம் ஆண்டு நவம்பர் 25 ம் திகதி சந்தித்தேன்,

குறிப்பிட்ட செல்வம் திரைப்படத்தை இயக்கியவரின் அழைப்பின்பேரில் அந்த நிகழ்வில் நான் கலந்துகொண்டிருந்தேன், முப்படை தளபதிகள், பொலிஸ்மா அதிபர் உட்பட முக்கிய அதிகாரிகள் அந்தநிகழ்வில் கலந்துகொண்டனர்.குறிப்பிட்ட படம் யுத்தத்திற்கு பிந்திய சூழலை காண்பித்தது,

இயக்குநர் லீலரட்ணவே எனக்கு அவரை அறிமுகப்படுத்தி வைத்ததால் குறிப்பிட்ட படத்தயாரிப்பு குறித்து பொலிஸார் அவரிடமே விசாரணை செய்யவேண்டும்,முன்னாள் விடுதலைபபுலிகள் இயக்க உறுப்பினர் சாந்தலிங்கம் கோகுல்ராஜ் என்பவரை இயக்குநர் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவைத்ததால் பாதுகாப்பு அமைச்சு அந்த படத்தை ஊக்குவித்தது.

குறிப்பிட்ட நபர் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளப்பட்ட வேளை அவர் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டுள்ளவர் என்பது குறித்து பொலிஸார், பாதுகாப்பு அமைச்சிற்கோ அல்லது பொலிஸ் தலைமையகத்திற்கோ எச்சரித்திருந்தனரா என்பதை தெரிவிக்கவேண்டும், அந்த நபருடன் நான் காணப்படும் புகைப்படம் கூட பாதுகாப்பு அமைச்சின் வெப்தளத்திலிருந்து எடுக்கப்பட்டது.

குறிப்பிட்ட நபர் மலேசியா அரசாங்கத்தினாலோ அல்லது வேறு எந்த நாட்டினாலோ போதைப்பொருள் குற்றச்சாட்டகளிற்காக தேடப்படுகின்றாரா என்பதை பொலிஸார் தெளிவுபடுத்தவேண்டும் என கோத்தபாய தெரிவித்துள்ளார்.

1 comment:

  1. What about your wife swimming in his swimming pool at Malaysia??

    ReplyDelete

Powered by Blogger.