Header Ads



சந்திரிக்காவின் மீள் வருகை - மகிந்தவும் பங்காளிகளும் அதிர்ச்சி

பொதுத் தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அல்லது வேறு ஒரு கூட்டணியின் கீழ் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க போட்டியிட்டால், மகிந்த ராஜபக்ச தரப்பு குறிப்பிடத்தக்களவு பின்னடைவை சந்திப்பது நிச்சயம் என தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ஸ தெரிவித்துள்ளார்.

தனக்கு நெருக்கமான ஊடகவியலாளர்கள் சிலரிடம் இன்று காலை கூறியுள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க எதிர்வரும் பொதுத் தேர்தலில் போட்டியிட போவதாக அவரது செயலாளர் பியதாச திஸாநாயக்க நேற்று ஊடக அறிக்கையை வெளியிட்டதை தொடர்ந்து மகிந்த ராஜபக்ச ஆதரவாளர்கள் மத்தியில் அதிர்வு ஏற்பட்டுளளதாக வீரவன்ஸ கூறியுள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்காவின் செயலாளர் நேற்று வெளியிட்ட அறிக்கை, மகிந்த ராஜபக்ச இன்று வெளியிட்ட உத்தியோகபூர்வ அறிக்கையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாக மகிந்த ராஜபக்சவுக்கு நெருக்கமானவர்கள் தெரிவிக்கின்றனர்.

மெதமுலன இல்லத்தில் மகிந்த ராஜபக்ச இன்று விசேட அறிவிப்பை வெளியிட்ட பின்னர், ஊடகவியலாளர்கள் அனைவரையும் வெளியேற்றி விட்டு, மகிந்த ராஜபக்ச ஆதரவாளர்கள் மத்திரம் மூடிய அறைக்குள் கலந்துரையாடல் ஒன்றை நடத்தினர்.

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா தேர்தலில் போட்டியிட்டால், ஏற்படக் கூடிய பாதிப்புகள் மற்றும் அதனை தடுக்க எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து இதன் போது கலந்துரையாடியுள்ளதாக பேசப்படுகிறது.

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்காவின் அரசியல் மீள்வருகை சர்வதேச சதித்திட்டம் என ஊடகங்கள் மூலம் அடுத்த சில தினங்களில் பாரிய பிரசாரங்களை முன்னெடுப்பது என இந்த கலந்துரையாடலில் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

5 comments:

  1. இன வாதிகலிடமிருந்தும், கள்வர் கூட்டத்திடம் இருந்தும் இந்த நாட்டை பாதுகாப்பதற்காக தனது ஓய்வெடுக்கும் காலத்தையும் வயதையும் பொருப்படுத்தாது ஒரு வீரப் பெண்மணியாக களம் இருங்கி இருக்கும் சந்திரிக்கா அம்மையாருக்கு இந்த நாட்டு மக்களும் அதிலும் விசேசமாக முஸ்லிம்களும், இளைஞர் களும் ஆதரவும் ஊக்கமும் உற்சாகமும் கொடுக்க வேண்டும் என வேண்டிக் கொள்கிறோம்.

    ReplyDelete
  2. அப்படிப்போடுங்க மேடம் அரிவாளை!

    இனிமேல் உங்கள் மேல் வண்டி வண்டியாக சேறுபூசினாலும் மகிந்த தாத்தாவால் எதுவும் கிழிக்க முடியாது.

    ReplyDelete
  3. Muslims must do lots of dua for country.allah his the one giving power and non power for person

    ReplyDelete
  4. CBK you want again to this country. please come quick.

    ReplyDelete
  5. We always welcome CBK... Muslims votes for you

    ReplyDelete

Powered by Blogger.