Header Ads



எப்படி கழிவறையை உபயோகிக்க வேண்டும்..? சுவிஸில் நூதன விளம்பரம்


சுவிட்சர்லாந்து நாட்டிற்கு வரும் சுற்றுலா பயணிகள் கழிவறைகளை சரியாக பயன்படுத்தாமல் அசுத்தம் செய்துவருவதை தவிர்க்கும் வகையில் அந்நாட்டு சுற்றுலா துறை அலுவலகம் நூதன விளம்பரத்தை வெளியிட்டுள்ளது.

சுவிஸில் உள்ள சுற்றுலா தளங்கலுக்கு வரும் வெளிநாட்டினர்கள் அங்குள்ள பொது கழிப்பிடங்களை முறையாக பயன்படுத்தாதது சுவிஸ் துப்புரவு பணியாளர்களுக்கு பெரும் சிரமத்தை ஏற்படுத்தி வருகிறது.

குறிப்பாக, மத்திய சுவிட்சர்லாந்தில் உள்ள Mount Rigi ரயில் நிலையத்திற்கு வரும் சுற்றுலா பயணிகள் அங்குள்ள கழிப்பறைகளை முறையாக பயன்படுத்துவது இல்லை.

இது குறித்து பேசிய ரயில் நிலைய அதிகாரியான Roger Joss, பெரும்பாலான சுற்றுலா பயணிகள் இயற்கை உபாதைகளை போக்கிக்கொள்ள கழிவறை முழுவதும் அசுத்தம் ஏற்படுத்தும் வகையில் தவறாக பயன்படுத்துகின்றனர் என்றார்.

மேலும், இயற்கை உபாதைகளை போக்கி விட்டு, துப்புரவு காகிதங்களை உரிய தொட்டியில் போடாமல் அறையிலேயே வீசிவிட்டு செல்வதால், பிற மக்கள் கழிவறைக்கு செல்வதையே அருவெறுப்பாக பார்ப்பதாக அவர் கவலை தெரிவித்துள்ளார்.

சுற்றுலா பயணிகளின் ஆரோக்கியமற்ற போக்கை அவர்களுக்கு புரிய வைக்கின்ற வகையில், சுவிஸ் சுற்றுலா துறை அலுவலகங்கள் சில நூதன விளம்பர அட்டைகளை பிரசுரித்து வருகின்றன.

இது தொடர்பாக பேசிய சுற்றுலா துறை அதிகாரியான Marcel Fure, தென்கிழக்கு ஆசிய மற்றும் மத்திய கிழக்கு நாடுகளிலிருந்து வரும் சுற்றுலா பயணிகளுக்கு கழிவறையை சரிவர பயன்படுத்த தெரிவதில்லை என்றார்.

சில நேரங்களில், இயற்கை உபாதைகளை கழிவறையில் போக்கிக்கொள்ளாமல், குளிக்கும் அறைகளில் போக்கிக்கொள்ளும் கொடுமையான சம்பவங்களும் இங்கு நடைப்பெற்று வருவதாக தெரிவித்துள்ளார்.

எனவே, சுவிஸிற்கு வரும் சுற்றுலா பயணிகளிடம் பொது இடங்களில் உள்ள கழிப்பறைகளை எவ்வாறு உபயோகிக்க வேண்டும் என விழிப்புணர்வு ஏற்படுத்தி வருவதாக Marcel Fure கூறியுள்ளார்.

No comments

Powered by Blogger.