Header Ads



ஐ.தே.க. யில் போட்டியிட 16,000 விண்ணப்பங்கள் - 3 நாட்களில் 10.000 விண்ணப்பங்கள் வந்து குவிந்தன

ஐக்கிய தேசியக் கட்சியின் கீழ் போட்டியிடுவதற்காக 16 ஆயிரம் விண்ணப்பங்கள் சிறிகொத்தாவில் வந்து குவிந்திருப்பதாக அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்தார். இவர்களுள் காலத்திற்கு ஏற்ற வகையில் மக்களின் தேவைகளை நிறைவு செய்யக் கூடிய திறமைசாலிகளை தெரிவு செய்வதற்காக ஐ.தே.க தவிசாளர் மலிக் சமரவிக்கிரம தலைமையில் விசேட குழுவொன்று நியமிக்கப்பட்டிருப்பதாகவும் அவர் கூறினார்.

ஊழல், மோசடிக்காரர்களுக்கு இடமில்லை - பிரதமர் ரணில்

பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்காக ஐக்கிய தேசியக் கட்சியிடம் பெரும் எண்ணிக்கையானோர் விண்ணப்பங்களைச் சமர்ப்பித்திருப்பதாகவும் இவர்களில் இளைஞர், யுவதிகளுக்கு முன்னுரிமையளித்து திறமைசாலிகள் களமிறக்கப்படுவார்கள் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்திருக்கிறார்.

கடந்த மூன்று தினங்களுக்கிடையில் எதிர்பாராத விதமாக 10 ஆயிரத்துக்கும் அதிகமான விண்ணப்பங்கள் கிடைத் திருப்பதாகவும் அவற்றை வேட்புமனுக்குழு விரிவாக ஆராய்ந்து வருவதாகவும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

பொதுத் தேர்தலில் களமிறக்கப்படவிருக்கும் வேட்பாளர்கள் தொடர்பாக பிரதமரிடம் கேட்டபோதே அவர் மேற் கண்டவாறு தெரிவித்தார். வேட்பாளர் தெரிவு மிக ஆழமாக ஆராயப்பட்டு வருகின்றது. ஊழல், மோசடிகளில் சம்பந்தப்பட்டோர் மக்களின் நம்பிக்கையை இழந்த எவருக்கும் இம்முறை வாய்ப் பளிக்கப்பட மாட்டாது. நேர்மையானவர் களுக்கும் இளைஞர்களுக்கும் முன்னுரிமை வழங்கப்படும்.

மாவட்ட மட்டத்தில் வெற்றி வாய்ப்பை உறுதிசெய்யக்கக்கூடிய விதத்தில் திறமைசாலிகளுக்கும் மக்கள் அபிமானத்தைப் பெற்றவர்களுக்குமே வாய்ப்பளிக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இன்று வெள்ளிக்கிழமை முதல் ஞாயிற்றுக்கிழமை வரை விண்ணப்பங்கள் ஆராயப்பட்டு 6 ஆம் திகதி திங்கட்கிழமை இறுதி முடிவெடுக்கப்படும். அதன்பின்னர் வேட்புமனுக்களை தயாரிக்கும் பணிகள் முன்னெடுக்கப்படும்.

வேட்புமனுக்கள் தொடர்பில் இறுதி முடிவெடுக்கப்பட்டதன் பின்னர் மாவட்ட மட்டத்தில் வேட்புமனுக்களை தயாரிக்கும் வேலை ஆரம்பிக்கப்படும். அதன் பின்னர் 13 ஆம் திகதிக்கிடையில் வசதிக்கேற்ப ஒவ்வொரு மாவட்டத்திலும் வேட்புமனு தாக்கல் இடம்பெறும் எனவும் பிரதமர் தெரிவித்தார்.

இத்தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி பெரும்பான்மையான ஆசனங்களை கைப்பற்றுமெனவும் எமது கட்சி பெரும்பான்மை பலத்தைப் பெற்றுக் கொண்டாலும் தேசிய அரசை அமைத்துச் செயற்படுவதே எமது இலக்காகும்.

புதிய அரசாங்கம் அமைக்கப்பட்டதும் நாட்டுக்குப் பொருத்தமான தேசியக் கொள்கைத் திட்டம் அறிமுகப்படுத்தப்படும். இந்த தேசியக் கொள்கை எக்காலத்துக்கும் பொருத்தமானதாகவும், எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும் மாற்றப்பட முடியாத வகையிலும் அமையும்.

நாட்டை முன்னேற்றப் பாதையில் இட்டுச் செல்லப் பொருத்தமான திட்டங்களை அறிமுகப்படுத்தும் விதத்தில் அரசின் தேசியக் கொள்கைத் திட்டம் அமையும் எனவும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

1 comment:

  1. We dont need muslims party anymore in our country.even north east also.we should stay with majourity parties in the future.this kind of decision may recism can avoid aginst mionirity people in our whole country.better muslim politicians joint with UNP andSLFP.this is my opinion.we have to long time plan in the future.this is can be success for our muslim community.

    ReplyDelete

Powered by Blogger.