Header Ads



10 மாவட்டங்களில் UNP டன் இணைந்து SLMC போட்டி - புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடவும் ஏற்பாடு

ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து பத்து மாவட்டங்களில் போட்டியிடவிருப்பதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக ஐ.தே.க தலைவர் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையிலான குழுவினருக்கும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீமுக்குமிடையிலான சந்திப்பு நடைபெற்றது.

ஐ.தே.க தலைமையகத்தில் நடைபெற்ற இப்பேச்சு வார்த்தையில் தேர்தல் கூட்டணி தொடர்பில் விரிவாகக் கலந்துரையாடப்பட்டுள்ளது. பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுடன், ஐ.தே.கவின் தவிசாளர் மலிக் சமரவிக்ரம மற்றும் அக்கட்சியின் செயலாளர் நாயகமும் அமைச்சருமான கபீர் காசிம் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர். 

வடக்கு, கிழக்கில் நான்கு மாவட்டங்கள் உட்பட 10 மாவட்டங்களில் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து போட்டியிடவிருப்பதாக சந்திப்பின் பின்னர் தினகரனுக்குக் கருத்துத் தெரிவித்த அமைச்சர் ரவூப் ஹக்கீம் கூறினார். இது தொடர்பில் விரைவில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடப்படும் என்றும், ஐ.தே.க வேட்புமனு வழங்காத இடங்களில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தனித்துப் போட்டியிடும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

2 comments:

  1. intha visayathike villankuthu thanda suyanalam

    ReplyDelete
    Replies
    1. பேருவலை பற்றி எரிந்த போது மஹிந்தவின் சால்வைக்குள் இருந்தவர் தான் ஹக்கீம். அம்மக்களுக்காக எந்த உதவியும் செய்யவில்லை. ஆக குறைந்தது எந்த பாராளுமன்ற அமைச்சரோ, மாகாண அமைச்சரோ ராஜினாமா செய்யவில்லை. அரசாங்கத்துக்கு தர்ம சங்கடத்தை ஏற்படுத்த விரும்பவில்லை என அறிக்கை விட்டார் ஹக்கீம். இத்தகைய போலி கட்சிகளை இன்னமுமா முஸ்லிம் சமூகம் நம்பும்..?

      Delete

Powered by Blogger.