Header Ads



இஸ்லாத்தில் நடுநிலைக் கொள்கை - பகுதி 04

-நாகூர் ழரீஃப்-

(முன்னையத் தொடர்...)

இக்கொள்ளை வழியலகுகளையும் சிறப்பிபல்புகளையும் கொண்டது. இதன் பிரதானமான நிலைப்பாடு, அதன் சமநிலை பற்றிய பார்வை முழுமையானதும் ஆழமானதுமாக அமைதல் வேண்டும். 

குறைமதிப்பீடும் மிகைமதிப்பீடும் இல்லாத நடைமுறைபற்றிய தெளிவு இருத்தல் வேண்டும். ஷரீஆவின் குறிக்கோள்களைப் புரிதல், அல்குர்ஆன் அஸ்ஸுன்னா அடியில் பிறந்த மூலாதாரங்களைப் புரிதல், மனித சமூக விழுமியங்களைப் பலப்படுத்தல், வஹ்யைப் போன்றே வரையறைகளுக்குட்பட்ட பகுத்தறிவிவை மதித்தல், 

பிரபஞ்ச நியதிகள் பற்றிய ஒரு புதிய ஃபிக்ஹின் அவசியத்தை உணர்தல், பெண்கள் நியாயம், அவர்களின் தனித்துவம் பேணப்பட்டு ஆணாதிக்கமாக்கலில் இருந்து விடுதலை பெறும் வாய்ப்புக்களைச் செய்தல் வேண்டும் என இக்கோட்பாடு வலியுறுத்துகின்றது.
பிற தரப்பினர், அணியினரை வழிகேடர்கள், பாவிகள், காஃபிர்கள் எனச் சமூகத்தைத் துண்டாக்காகுகின்றமையில் மிகுந்து அவதாணம் முதிர்வும் தேவைப்படுகின்றது.

பண்மைத்துவம் தாராளத்தன்மையை சமூகத்தினுள் அங்கீகரித்தல் இதற்குப் பெரிதும் துணைநிற்கும் எனலாம். 

ஈமானையும் அறிவையும் அடிப்படையாகக் கொண்ட நாகரிகத்தை கட்டியெழுப்புதல். இஸ்லாத்தின் மூலத்தத்துவத்தின் முதல் வசனமே இதனையே சுட்டுகின்றது. ஈமானுடன் அறிவினையும் கருவியல் விஞ்ஞானத்தையும் எடுத்தியம்பியுள்ளமை இதன் முக்கியத்துவத்திற்குச் சான்றகும்.

பூமியை வலப்படுத்தல், அபிவிரித்தி செய்தல், சூலழைப் பாதுகாத்தல், சமாதானவிரும்பிகளுடன் சுமுக உறவைப் பேணல், சிறுபான்மை முஸ்லிம்களின் விவகாரத்தில் கரிசணைகொள்ளல் போன்றவையும் இதன் வழியலகுகளில் உள்ளவையேயாகும்.

ஃபத்வாக்களில் இலகுபடுத்தலைக் கையாள்வதுடன், தஃவாவை சுமையும் கடுமையும் இல்லாதமைத்தல் வேண்டும். ஸுன்னாவில் பல ஆயிரம் உதாரணங்களை இவற்றிற்குக் காண்பிக்கலாம்.

படிமுறை ஒழுங்கினையும் ஏனைய இறை நியதிகளையும் நிதானமாக பேணல் வேண்டும். இதனை இஸ்லாம் பல்வேறு கட்டங்களில் அமுல்படுத்தியுள்ளமை எமக்குப் போதிய வழிகாட்டல் நிறைந்ததாகக் கொள்ளலாம்.

வளம் நிறைந்த பாரம்பரியம், கருவூலத்திலிருந்து உச்ச பயன் பெறல் வேண்டும்.  

மேற்சொல்லப்பட்ட ஒவ்வொரு அலகும் மிகவிசாலமான விளக்கங்களையும் தெளிவுகளையும் தாங்கி நிற்பவை. மிகவும் சுருக்கமாகவே இங்கு பார்க்கப்பட்டுள்ளன. இவற்றை ஒவ்வொரு தாஇயும் முஸ்லிம் அங்கமும் ஆராய்தலும் தேடலும் அவசியமாகும். இத்தகைய இலகுகளைப் புரிகின்ற போது எமக்கு வஸத்திய்யாவின் அவசியமும் தேவையும் விளங்கலாம்

No comments

Powered by Blogger.