Header Ads

"நான் ஒரு ரோஹிங்கிய இனத்தவராக இருந்திருந்தால்"

பல ஆண்டுகளாக ராணுவத்தின் பிடியிலிருந்து ஜனநாயக ஆட்சிக்கு முன்னேறிச் செல்லும் மியான்மர், சிறுபான்மையின ரோஹிங்கிய முஸ்லிம்களுக்கு எதிரான போக்கை மாற்றிக் கொள்ள வேண்டும் என்று அமெரிக்க அதிபர் ஒபாமா தெரிவித்துள்ளார்.

ராணுவ அடக்குமுறையால பல ஆண்டுகளாக ஆட்சி செய்யப்பட்டு வந்த மியான்மரில், 2011-ம் ஆண்டு நிகழ்ந்த மாற்றத்திலும் ஜனநாயக போக்குக்கும் அமெரிக்க அதிபர் ஒபாமா ஆதரவு அளித்து வந்தார்.

இந்த நிலையில் தற்போது ஜனநாயகத்துக்கு எதிராக ரோஹிங்கிய முஸ்லிம் மக்களிடம் மியான்மர் அரசு காட்டும் போக்கை அமெரிக்க அதிபர் ஒபாமா கடுமையாக கண்டித்துள்ளார்.

தென்கிழக்கு ஆசிய நாடுகளின் தலைவர்கள் வாஷிங்டனில் ஒபாமாவை சந்தித்து இது குறித்து பேசினார்.

அப்போது இது குறித்து பேசிய ஒபாமா, " ஜனநாயக கொள்கையில் மியான்மர் வெற்றி பெற வேண்டுமானால், ரோஹிங்கிய மக்கள்மீது பாரபட்சம் காட்டும் போக்கை அவர்கள் மாற்றிக் கொள்ள வேண்டும்.

நான் ஒரு ரோஹிங்கிய இனத்தவராக இருந்திருந்தால், நான் பிறந்த இடத்தில் வாழ்வதையே விரும்புவேன். ஆனால் எனது அரசு என்னை பாதுகாக்கவும் எனது மக்கள் என்னை சகோதரத்துவத்தோடு நடத்தவில்லை என்றால் அது எனது வாழ்வாதாரத்தை பாதிக்க செய்யும்.

ரோஹிங்கிய மக்களின் பிரச்சினையும் இதுதான்.

இது ஏன் முக்கியம் என்றால், ஜனநாயக பாதைக்கு திரும்புவதற்கு, ரோஹிங்கிய மக்கள் எப்படி நடத்தப்படுகிறார்கள் என்பது கவனத்தில் கொள்ளப்படவேண்டியது" என்றார்.

2 comments:

  1. இது உங்கள் உள்ளத்திலிருந்து வரும் வார்த்தைகளா அல்லது வழமை போன்று அமெரிக்கச் சாத்தான் ஓதும் வேதமா என்பது நீங்கள் அடுத்து எடுக்கப்போகும் நடவடிக்கைகளிலிருந்து அறிந்தகொள்ளலாம்.

    ஏதாவது செய்யுங்கள் திரு. ஒபாமா.. ஆனால் அதை உடனடியாகச் செய்யுங்கள்!

    ReplyDelete
  2. வெறுமனே அறிக்கையை விடாமல் காரியத்தில் இறங்குலாமே? நீங்கள் இப்படி அறிக்கை விடலாமே பர்மாவில் பெற்றோல் வளம் இருந்திருந்தால் எப்போதோ ரெஹிங்கியா முஸ்லிம்களை பாது காத்திருப்போம்.வெறும் 130 குர்திஸ் காரர்களை கொலை செய்த என்னும் குற்றச்சாட்டில் முழு ஈராக்கையும் கொலைக்களமாக்கினவர்களல்லவா நீங்கள்

    ReplyDelete

Powered by Blogger.