Header Ads



ஐக்கிய தேசிய கட்சியின், அமைப்பாளராக ரவூப் ஹக்கீம்

-நஜீப் பின் கபூர்- 

இந்தச் செய்தி மு.கா.தொண்டர்களுக்கு அதிர்ச்சியான செய்தியாகவும் ஹக்கீம் பக்தர்களுக்கு மகிழ்ச்சியான செய்தியாகவும் இருக்கும். அல்லது பேஸ்புக்கில் ஜப்னா முஸ்லிம் இணையத்தை திட்டடித் தீர்க்கலாம், நாகரீகமற்ற பின்னூட்டங்களை அனுப்பலாம்.

தலைவர் இப்படி ஒரு முடிவை எடுத்தாரா என்பது மு.கா.வினரது அதிர்ச்சிக்குக் காராணமாகவும், தலைவர் நல்ல முடிவைத்தான் எடுத்திருக்கின்றார் என்று ஹக்கீம் விசுவாசிகள் பூரித்துப்போக அவர் ஐ.தே.க. அமைப்பாளரானால்  பிழைத்துக் கொள்ளலாம் என்பது அவர்கள் நோக்கம்!

ஹக்கீம் தொடர்பாக நாம் ஏதும் கருத்துச் சொன்னால் அதற்கு ஆதாரங்கள் எங்கிருந்து கிடைத்தது? யார் இதனை எழுதியது என்றெல்லாம் அடிக்கடி ஊடகம் நடத்துகின்றவர்களிடத்தில் கேள்விகளை எழுப்புவது தொழிலாக இருந்து வருகின்றது. அதுபற்றி விளக்கமாக விரைவில் தகவல்களைச் செல்லலாம் என்று இருக்கின்றேன்.

இப்போது விடயத்திதுக்கு வருவோம். சில தினங்களுக்கு முன்னர் ஹெல உருமய நிசந்த வர்னக்குல சூரிய இப்படி ஒரு செய்தியைச் சொல்லி இருந்தார். 

மு.கா.சார்பில் தேர்தல் சீர்திருத்தக் குழுவில் அங்கம் வகிக்கின்ற நிசாம் காரியப்பர், வடிவமைக்கப்பட்டுள்ள சீர்திருத்தத்தை ஏற்றுக் கொள்வதாக அங்கு கூறுகின்றார்.

ஆனால் ஹக்கீமோ 20 தேர்தல் சீர்திருத்தம்  தொடர்பாக முரண்பாடான கருத்துக் கூறிக் காரியத்தைக் குழப்பிக் கொண்டிருக்கின்றார் அவர் ஏன் இப்படி நடந்து கொள்கின்றார் என்று புரியவில்லை என்பது அவர் கருத்தாக இருந்தது.

நேரடித் தேர்தல் என்றால் ஹக்கீமுக்கு ஒரு தொகுதி தேவை கிழக்கை நம்பி இருப்பது ஆபத்து என்பது அவர் கணிப்பு! எனவே கிழக்கிற்கு வெளியே ஒரு தொகுதியில் ஹக்கீமுக்கு அமைப்பாளர் பதவி வேண்டும். என்பது ஹக்கீமின் அரசியல் வர்த்தகத் தேவை!

எனவேதான் அவர் ஐக்கிய தேசியக் கட்சியில் அமைப்பாளர் பதவியை ரணிலிடம் பெற்றிருக்கின்றார். அமைப்பார் என்ற சொல்லுக்கு இவர்கள் பொறுப்பாளர் என்று ஊடகங்களுக்குக் கதை சொல்ல வருகின்றார்கள்! அதற்கு விளக்கமும் வேறு பிரச்சனைகள் வந்தால் கொடுப்பார்கள்! 

ஆம் அமைப்பாளர் பொறுப்பாளர்...!

புதுக் கதை.!அவர்களது!

வேடிக்கை என்னவென்றால் கண்டியிலுள்ள கலகெதர தேர்தல் தொகுதிக்கு ஐ.தே.க. அமைப்பாளர் ஒருவரை நியமனம் செய்யாதாம்...! அந்த வேலையை ஹக்கீம்தான் பார்ப்பாராம்...! அப்படியானால் ஹக்கீம் எந்தக் கட்சி அமைப்பாளர் என்று  நாம் கேள்வி எழுப்புகின்றோம். மு.கா. அரசியல் உயர்பீடம் இந்த நிலைப்பாட்டுக்கு என்ன பதில் சொல்லப்போகின்றது.

மு.கா. ஆதரவாளர்கள் இதுபற்றி என்ன சொல்லப்போகின்றார்கள். இப்படி மு.காவில் இருந்து கொண்டு ஹக்கீம் ஐ.தே.க அமைப்பாளர் பதவி ஏற்கும் போது தனித்துவம் என்ற மு.காவில் கூப்பாட்டுக்கு என்ன ஆகும்?

மறுபக்கத்தில் மு.கா.தலைவருக்கு ரணில் ஐ.தே.க. கலகெதர அமைப்பாளர் என்ற பதவி கொடுத்திருப்பது பற்றி ஐ.தே.க. முஸ்லிம் தலைவர்களின் நிலைப்பாடு என்ன?  

எமது இந்த விமர்சனத்திற்குப் பின்னர் கிழக்குக் கொந்தளிக்கும் போது நவமணி (05-07.06.2015) செய்தி தவறானது என்று ஹக்கீம் ஊடகப்பிரிவு குறிப்புச் சொல்லவும் நிறையவே வாய்ப்பு இருக்கின்றது?

இந்த கலககெதர என்பது ஹக்கீம் பிறந்த ஊராம்...!  1960 ஏப்ரல் 13ம் திகதி ஹக்கீம் நாவலப்பிடிய வைத்தியசாலையில் (ஊர் ஹபுகஸ்தலாலை- கொத்மலைத் தேர்தல் தொகுதி, நுரரெலிய மாவட்டம்) பிறந்தார் என்பதுதான் உண்மை. அமைப்பாளர் பதவிக்காக பிறப்பிடத்தைக் கூட .....! மாற்றிக் கொள்கின்றார்களே என்ன அரசியல் இது?

இத்தனைக்கும் கலகெதரத் தொகுதியில் உள்ள முஸ்லிம் வாக்குகள் 2000க்கும் குறைவனதே! அங்கு போய் இவர் எப்படி மு.கா.தலைவர் என்று  வேலை பார்க்க முடியும்?

அது அவர் அரசியல். மு.கா இதற்கு என்ன பதில் தர இருக்கின்றது என்று இனி பார்ப்போம். 

இதனால்தான் நாம் பல முறை தொடர்ச்சியாகச் சொல்லி வருகின்றோம். புதிய தேர்தல் திருத்தத்திற்கு அஞ்சுகின்ற முதல் நபர் ஹக்கீம்.  அடுத்தவர் ரணில் என்று!

8 comments:

  1. புதிய தேர்தல் முறை மூலம் குறைவடைய போகும் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களை பற்றி உங்களுக்கு கவலை இல்லை ஹக்கீம் எப்படியாவது பாராளுமன்றம் நுழையப்போகிறார் அதை எவ்வாறு தடுக்கலாம் என்பதுவே கட்டுரை ஆசிரியரின் முழு கவலையும்.
    ஒன்றை புரிந்து கொள்ளுங்கள் ரவுப் ஹக்கீம் இல்லாத பாராளுமன்றம் முஸ்லிம்களின் சூனிய பிரதேசமாகவே இருக்கும்

    ReplyDelete
  2. itha seithi ummaio allathu poio SLMC in thalaimathuwathaik kandipaka maddra wendum, athuwum kilakku makanathai sernthawaraka irrukka wendum. poththi ulla slmc thondarkal ithai seiwarkal.

    ReplyDelete
  3. முதலில் ரிசாத் பதியுதீனை தொலைத்து விட்டு ஹகீமை மாற்ற முயற்சி செய்வோம்

    ReplyDelete
  4. ஹக்கீமின் கடந்த கால வரலாறை பார்க்கும்போது உண்மையில் அவர் ஒரு ஐக்கிய தேசிய கட்சியின் விசுவாசியாகவே காணப்படுகின்றார் .ஏதோ ஒரு சந்தர்ப்ப சூழல் காரணமாகவே இவர் முஸ்லிம் காங்கிரஸ் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார் .எனவே அவர் விரும்பக்கூடிய ஐக்கிய தேசிய கட்சியிடம் அவரை அனுப்பி விட்டு முஸ்லிம் காங்கிரஸ் கட்சிக்கு முஸ்லிம் மக்களின் கல்வி ,பொருளாதாரம் ,மீள் குடியேற்றம் போன்ற விடயங்களில் அக்கறையுடன் செயற்படக்கூடிய ஒரு துடிப்புமிக்க இளம் தலைவர் ஒருவரை நியமனம் செய்வதே இன்ஷா அல்லாஹ் ஒரு சிறந்த தீர்வாக அமைய முடியும் .

    ReplyDelete
  5. jaffnamuslim சிலநாட்களாக ரவூப்ஹக்கீமை சாடியே செய்திகள் வெளீயீடு செய்கின்ரன எது எப்படியிருந்தாலும் ஊடகம் என்ரவகையிலும் அதன் பெயருக்கு ஏற்றவகையிலும் நடுநிலையாக செயற்படுவதே நன்ரு என்பது எனதுகருத்தாகும்

    ReplyDelete
  6. Our late beloved leader marhoom Ashraff was appointed as PA organiser for eastern province by former president Chandrika before the election year 2000. So he was incharge for non muslim majority seats also. So this is not an issue when there is an allaince between two parties.

    ReplyDelete
  7. You are trying to create problem among Muslims communities and trying to promote your own agenda while destroying Muslim unity.

    ReplyDelete

Powered by Blogger.