Header Ads



2 கொலைகளை செய்த மஹிந்த, என்னையும் படுகொலை செய்ய முயற்சி, மைத்திரி சொன்ன அதிர்ச்சித் தகவல்

-gtn-

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச இரண்டு பேரை சுட்டுக் கொலை செய்துள்ளதாக ஊடகமொன்றுக்கு பரபரப்பு தகவல் வெளியிட்டுள்ளது.

தற்போதைய ஜனாதிபதி, மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க ஆகியோரை ஆதாரம் காட்டி இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

மக்கள் வாக்குகளினால் தோற்கடிக்கப்பட்டு ஆத்திரமுற்றிருக்கும் மஹிந்த ராஜபக்ஸவை பிரதமராக்கினால், அவர் ஜனாதிபதியாக பதவி வகிப்பதற்கு அரசியல் சாசனமோ அல்லது நீதியோ அவசியமில்லை என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

'ஜனாதிபதியாவதற்கு தேவை என்மீது ஒர் துப்பாக்கிச் சூடு நடத்துவது மட்டுமே என்பதனை நான் நன்றாக புரிந்து வைத்துள்ளேன்.'

'அரசியல் சாசனத்தின் ஊடாகவும் நாட்டின் சட்டத்தின் ஊடாகவும் செய்ய முடியாதவற்றை துப்பாக்கித் தோட்டா ஊடாக செய்து கொள்ள முயற்சிக்கும் ஒருவரை பிரதமராக்குமாறு என்னை ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் தலைவர்கள் வற்புறுத்தக் கூடாது.'

'மஹிந்த ராஜபக்ஸ பிரதமராகினால், நான் வெளிநாட்டு விஜயமொன்றை மேற்கொண்ட சந்தர்ப்பத்தில் இந்த நாட்டு மக்கைளயும் கொன்று  நாடு திரும்பும்போது என்னையும் கொன்று அவர் ஜனாதிபதியாகிவிடுவார்.'

'நான் அவ்வாறான ஓர் நிலைமைக்கு இடமளிக்க மாட்டேன். நான் அவ்வளவு முட்டாளும் இல்லை. நான் எனது கரங்களைப் இறுக்கிப் பிடித்துக் கொண்டுள்ளேன். எனது கையை தளரவிட்டால் ராஜபக்ஸவிற்கு நேருவதனை பார்த்துக்கொள்ள முடியும். எனது கை தளர்வடையும் வகையில் நடந்து கொள்ள வேண்டாம்'

அண்மையில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் தலைவர்களை சந்தித்த போது ஜனாதிபதி மைத்திரிபால இந்தக் கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.

'ஜனவரி மாதம் 8ம் திகதி, ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டதன் அடுத்த வாரத்தில் அரசாங்கத்தை கலைத்திருந்தால், உங்களுக்கு என்ன நேர்ந்திருக்கும் என்பதனை பார்த்திருக்கலாம்' என பாராளுமன்ற உறுப்பினர் டியூ.குணசேகர தெரிவித்துள்ளார்.

இந்தக் கூட்டத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் சார்பில் டியூ மட்டுமே கருத்து வெளியிட்டிருந்தார்.

'ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நடவடிக்கைகளில் வேறும் தரப்பினரின் தலையீடு அவசியமற்றது. வாசுதேவ, விமல் வீரவன்ச, தினேஸ் குணவர்தன, உதய கம்மன்பில போன்றவர்களின் அழுத்தங்களுக்கு அடி பணியாது சுயாதீனமாக தீர்மானம் எடுக்கும் புத்திசாதூரியம் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு உண்டு என்பதனை வெளிநபர்கள் புரிந்து கொள்ள வேண்டும்' என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

'ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஆகியனவற்றின் ஊடாக போட்டியிடுபவர்கள் தொடர்பில் கட்சித் தலைமை தீர்மானிக்கும். நாட்டுக்கும் நாட்டு மக்களுக்கும் பொய்யான மக்கள் சக்தியை காட்டி ஊடக கண்காட்சிகளின் மூலம் மக்களை ஏமாற்றும் சதித் திட்டங்கள் தொடர்ந்தும் பலிக்காது. ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் ஏனைய கட்சித் தலைவர்களும் இதனை புரிந்து கொள்ள வேண்டும். மஹிந்த ராஜபக்ச ஆட்சியின் போது அடிமைகளாக இருந்தவர்கள், அந்த அடிமைத்தன்மையை எழில் மிக்கதாக்க விரும்புவோர் பற்றி கவலையடைகின்றேன்.' என தெரிவித்துள்ளார்.

இந்த சந்திப்பின் பின்னர் ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க, ஜனாதிபதியை சந்தித்துள்ளார்.

'மஹிந்த உங்களைக் கொலை செய்வார் என நீங்கள் எவ்வாறு உறுதியாகக் கூறுகின்றீர்கள்' என ஜனாதிபதியிடம் ரஞ்சன் ராமநாயக்க கேள்வி எழுப்பியுள்ளார்.

அதற்கு பதிலளித்த ஜனாதிபதி

'மஹிந்த ராஜபக்ஸ முல்கிரிகல இடைத்தேர்தலின் போது ஒரு கையில் துப்பாக்கி ஏந்தி நபர் ஒருவரை சுட்டார். அந்த சந்தர்ப்பத்தில் இரண்டு பேர் கொல்லப்பட்டனர். நான் அப்போது சம்பவம் இடம்பெற்ற இடத்திற்கு சற்றே தொலைவில் இருந்தேன். இவர் கொலை செய்த விதம் தெரிந்த காரணத்தினால்தான் நான் அவ்வாறு கூறுகின்றேன்.' என ஜனாதிபதி குறிப்பிட்டார்.

'அப்போது மஹிந்த எவ்வாறு தப்பித்தார்' என ரஞ்சன் வினவியதற்கு..

'சாட்சியாளர்களையும் கொல்வதாக மிரட்டினார். மேலும் உங்களுடைய ஜோன் அமரதுங்க தான் அவரை காப்பாற்றினார். மரத்தின் மேல் ஏறி சுட்டதாக சாட்சியமளிக்கப்பட்டது. முன்னுக்கு பின் முரணான சாட்சியமளித்த அளித்த காரணத்தினால் வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது. வழக்கில் வெற்றியீட்ட அப்போது மஹிந்த ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்து கொள்ளவும் தயாராகவே இருந்தார். இதன் காரணமாகவே இன்னும் மஹிந்தவும் ஜோனும் நண்பர்களாக இருக்கின்றார்கள்.' என மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

'சேர் இந்த தகவலை ஊடகங்களுக்கு சொல்ல வேண்டாம்' என ரஞ்சன் தெரிவித்தார்.

'ஊடகங்களுக்கு சொல்லத்தான் இந்தக் கதையை நான் ரஞ்சனிடம் கூறினேன். ஜனவரி மாதம் 8ம் திகதி என்னையும் எனது குடும்பத்தாரையும் ஆறு அடி குழியில் தள்ளவே ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்கள் மஹிந்தவிற்கு வாக்களித்தார்கள் என்பதனை மறக்க முடியாது' என ஜனாதிபதி மேலும் குறிப்பிட்டார்.

4 comments:

  1. அப்படியென்றால் இந்தக் கொலைகாரனையா மீண்டும் பிரதமராகக் கொண்டு வர முயற்சிக்கின்றனர் சில முட்டாள்கள். ஜனாதிபதி மைத்திரி அவர்களே! நேர்மை என்றும் வெல்லும். அதுவே உங்கள் இலட்சிணை. நீங்கள் நல்ல மனிதர். உங்கள் பயணம் தொடரட்டும். மகிந்தவும் அவனின் அடிவருடிகளும் அழியட்டும்.

    ReplyDelete
  2. may almighty protect you!

    ReplyDelete
  3. அட கொலை பாதகா! உம்மை வீட்டுக்கு அனுப்பியதில் தப்பேயில்லை.

    இனி மாமியார் வீட்டுக்கும் அனுப்பி வைப்பதிலும் தவறில்லை.

    ReplyDelete
  4. kolaiyum panni irikkiyada p

    ReplyDelete

Powered by Blogger.