Header Ads



வடக்கு முஸ்லிம்களின் வாக்குரிமையை, உறுதிப்படுத்த வேண்டும்

-ரஸீன் ரஸ்மின்-

மே மாதம் 15 ஆம் திகதி முதல் ஜூன் மாதம் 15ஆமு; திகதி 2015ஆம் ஆண்டுக்குரிய வாக்காளர்களை பதிவு செய்துகொள்ளும் நடவடிக்கைக் தற்போது கிராம உத்தியோகத்தர்கள் ஊடாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

வாக்களிப்பது சகல மக்களின் உரிமையாகும். இதனை தடுப்பதற்கு எவருக்கும் உரிமை கிடையாது. நடைபெறும் தேர்தல்களில் தாம் நினைக்கின்ற ஒருவரை தெரிவு செய்வது மக்களின் உரிமையாகும்.

எனவே, வருடம் தோரும் நடைபெறும் வாக்குப்பதிவை தவறாமல் ஒவ்வொருவரும் பதிவு செய்துகொள்ள வேண்டும் என ஒவ்வொரு வருடமும் சமூக மட்ட அமைப்புக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றன. எனினும் மக்களின் அசமந்தப் போக்கு காரணமாக பதிவு செய்யும் காலத்தில் வாக்குப்பதிவை மேற்கொள்ளாமல் பின்னர் அதுபற்;றி கவலையடைவதில் என்ன பயன் உள்ளது.

வாக்குப் பதிவென்பது ஒருமுறை மாத்திரம் பதிவு செய்தால் போதும் தொடர்ச்சியாக தமது பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இடம்பெறும் என nரும்பாலான மக்கள் நினைத்துக் கொண்டே பெரும்பாலான முஸ்லிம்கள் வருடந்தோரும் நடக்கும் வாக்குப் பதிவை மேற்கொள்வதிலிருந்து தவிர்ந்து கொள்கின்றனர். ஆனால் நிலமை அவ்வாறில்லை என்பது அந்த மக்களுக்கு தெளிவுபடுத்தப்பட வேண்டும்.

1989ஆம் ஆண்டு வாக்காளர்களை பதிவு செய்யும் சட்டத்தின்படி ஒருவர் எங்கு நிரந்தர வதிவிடத்தைக் கொண்டிருக்கிறாரோ அவர் அந்த பிரதேசத்தில்தான் வாக்காளர்காக பதிவு செய்துகொள்ள வேண்டும் எனக் குறிப்பிடுவதாக தெரிவிக்கப்படுகிறது.

ஆத்துடன் யுத்தத்தின் போது தமது சொந்த மாவட்டத்தை விட்டு வெளியேறி வேறு மாவட்டங்களில் வாழும் மக்கள் நவம்பர் மாதமளவில் குறைநிரப்பு வாக்காளர்களாக பதிவு செய்துகொள்ளும் வகையில் 2013ஆம் ஆண்டு விஷேட வர்த்தமானி மூலம் கொண்டுவரப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

குறைநிரப்பு வாக்காளர்களாக பதிவு செய்துகொள்ள இருப்பவர்கள் முன்கூட்டியே இதுதொடர்பில் தமது விண்ணப்பங்களை தமது மாவட்ட தேர்தல் திணைக்களத்திடம் ஒப்படைக்க வேண்டும். ஆதன்பின்னர் நவம்பர் மாதமளவில் குறைநிறைப்பு வாக்காளர் பதிவில் விண்ணப்பிததவர்கள் இணைத்துக்கொள்ளப்படுவர்.

ஒருவர் ஒரு இடத்தில் நிரந்தரமாக வசிப்பதாயின் அவருக்கு சொந்தமாக காணி, வீடு உள்ளிட்ட வாழக்கூடிய அடிப்படை வதிகள் இருக்க வேண்டும். ஆப்போதுதான் அவர் நிரந்தரமாக இருப்பதற்கு ஒரு இடத்தை தெரிவு செய்வார். இவ்வாறு நிரந்தரமாக ஒரு பிரதேசத்தில் வதிவிடத்தைக் கொண்டிருக்கும் ஒருவருக்கே வாக்காளர் பதிவை மேற்கொள்ளுவதற்கு விண்ணப்பங்களை விநியோகிக்குமாறு மாவட்ட தேர்தல் அலுவலகங்களினால் கிராம அலுவலர்களுக்கு பணிப்புரை வழங்கப்பட்டுள்ளது. அதன்படியே குறித்த கிராம அலுவலர்கள் வாக்காளர் பதிவுக்குரிய விண்ணப்;பங்களை தற்போது விநியோகித்து வருகின்றனர்.

இது ஒரு பொதுவான சட்டமாகும். எனவே, இந்த சட்டமானது வடபுல முஸ்லிம் மக்களின் எவ்வாறு ஆதிக்கத்தை செலுத்துகிறது என்பது பற்றி அலசுவதுதான் இந்தக் கட்டுரையின் பிரதான நோக்கமாகும்.

தேர்தல் திணைக்களத்தினால் பணிக்கப்பட்ட விடயமானது பெரும்பாலான இடங்;களில் மக்கள் மத்தியில் செல்வாக்கை செலுத்தாது  என்பது எனது கருத்தாகும்.

ஆனால் வடபுல முஸ்லிம் மக்களை இது நேரடியாகவே பாதித்து வருவதொன்றாகும். இது இன்று நேற்றில் இருந்து பாதிப்பது கிடையாது. ஓவ்வொரு வருடமும் வடபுல முஸ்லிம்கள் தமது வாக்காளர் பதிவை மேற்கொள்வதில் பெரும் சவாலுக்கு முகம்கொடுத்து வருகின்றனர்.

இதற்கு என்ன காரணம் என்பது நான் இங்கு புதிதாக ஒன்றும் சொல்ல வேண்டியதில்லை. நீங்களே அணுமானித்திருப்பீர்கள். குடந்த 5 வருடஙகளாக பக்கம் பக்கமாக மறுக்கப்படும் வடபுல முஸ்லிம்களின் மீள்குடியேற்றம் எனும் தலைப்பில் ஏராளமான கட்டுரைகள் எழுதப்பட்டுள்ளன. எனினும் மீள்குடியேற்ற உரிமை மாத்திரமின்றி, அந்த மக்களின் வாக்கு உரிமையும் பறிக்கப்பட்டுள்ளது என்பதை மிகவும் வேதனையுடன் சொல்லியே ஆக வேண்டும்.

வுhக்காளர்களை பதிவு செய்யும் சட்டத்திற்கமைய வடபுல முஸ்லிம்கள் அவர்கள் தற்போது வாழும் வடபுலத்தில் பதிவு செய்யப்படுகிறார்கள். ஆனால் வடக்கை நிரந்தரமாகக் கொண்டு காணி, வீடு உள்ளிட்ட வசதிகள் இல்லாமையால் வடக்கை விட்டு புத்தளம் போன்ற மாவட்டங்களில் வாழும் முஸ்லிம்களின் நிலைதான் மிகவும் பரிதாபமானதாகும்.

இவர்களுக்கு வடக்கில் சொந்த மாவட்டத்திலும் வாக்குப் பதிவில்லை. அவர்கள் இடம்பெயர்ந்து வாழும் மாவட்டங்களிலும் வாக்குப் பதிவு செய்யப்படவில்லை. 1989ஆம் ஆண்டு வாக்காளர்களைப் பதிவு செய்யும் சட்டத்தின்படி ஒரு மாவட்டத்தில் நிரந்தரமாக வாழும் ஒருவருக்கு அங்கு வாக்குப்பதிவு செய்துகொள்ள வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. அப்படியென்றால் இடம்பெயர்ந்து தமது சொந்த மண்ணில் மீள்குடியேறுவதற்கு காணி, வீடு இல்லாமல் தாம் இடம்பெயர்ந்து புத்தளம் போன்ற ஏனைய மாவட்டங்களில் தற்போது  வாழும் வடபுல முஸ்லிம்களின் நிலை என்ன? அவர்கள் தமது வாக்குரிமையை எப்படி பதிவு செய்து கொள்வார்கள் என்ற கேள்விக்கு அவர்களால் எந்த பதிலும்  சொல்ல முடியாது.

இதற்கிடையில் வடபுல முஸ்லிம்கள் பலர் தற்போது புத்தளம் போன்ற மாவட்டங்களில் நிரந்தர வாக்காளர்களாக தங்களை பதிவு செய்து கொண்டுள்ளனர். இன்னும் சிலர் அதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

முப்பது வருடங்களாக நாட்டில் இடம்பெற்ற யுத்தத்தின் பின்னர் நாட்டில் சமாதான சூழ்நிலை ஏற்பட்டுள்ளதுடன், சமாதானம் ஏற்பட்டு ஐந்து வருடங்கள் கடந்துள்ள நிலையில் இன்னமும் வடபுல முஸ்லிம்களின் காணி, வீடு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் பெற்றுக்கொடுக்கப்படாமையினால் விரக்த்தியடைந்தவர்களாக இவர்கள் தாம் இடம்பெயர்ந்து வாழ்ந்த மாவட்டங்களில் நிரந்தர வாக்காளர்களாக பதிவு செய்துகொண்டுள்ளனர்.

இவ்வாறு வடபுல முஸ்லிம்கள் தாம் இடம்பெயர்ந்து வாழ்ந்த மாவட்டங்களில் வாக்காளர்களாக பதிவு செய்துகொள்வதால் பாதிப்பு வடபுலத்திற்கே என்பதை யாராலும் மறுக்க முடியாது என நினைக்கிறேன். குறிப்பாக இது அரசியல் பிரதிநிதித்துவத்தை பெற்றுக்கொள்வதில் பாரிய பிரச்சினைகளுக்கு வடபுல முஸ்லிம்கள் முகம்கொடுக்க நேரிடும் என்பது உண்மையாகும்.

எனவே, இதுவிடயத்தில் அரசியல்வாதிகள் கவனத்தில் எடுத்துச் செயற்பட வேண்டியது அவர்களின் பொறுப்பாகும். ஆரசியல் செய்ய ணே;டும் என்றால் அதற்கு வாக்கு என்பது அத்தியாவசியமாகும். தேர்தல் காலங்களில் ஒவ்வொரு கிராமங்களுக்கும் விஜயம் செய்து தேர்தலில் வெற்றி பெறுவதற்கான வியூகங்களை அமைக்கின்ற அரசியல்வாதிகள் இடம்பெயர்ந்து புத்தளம் போன்ற மாவட்டங்களில் வாழும் வடக்கு முஸ்லிம்களின் வாக்காளர் பதிவை மேற்கொள்வது தொடர்பில் ஆக்கபூர்வமான முயற்சிகள் எடுத்திருப்பது குறைவாகவே இருக்கிறது.

வுhக்காளர்களைப் பதிவு செய்யும் போது கடைப்பிடிக்கப்பட வேண்டிய சட்டதிட்டங்கள் இலங்கையில் உள்ள சகல மாவட்டங்களிலும் வாழும் மக்களுக்கு பொதுவானவையே. ஆனாலும் விஷேட அமைச்சரவைப் பத்திரம் சமர்ப்பித்து இதனை ஓரளவுக்கு மாற்ற முடியும் என நினைக்கிறேன்.

குறிப்பாக வடக்கில் தமது சொந்த மாவட்டங்களில் காணி, வீடு இருந்து வேறு காரணங்களுக்காக வெளிமாவட்டங்களில் வாழும் முஸ்லிம் குடும்பத்திற்கு வாக்குப் பதிவை செய்வதற்குரிய விண்ணப்பப் படிவத்தை கொடுப்பதற்கு மறுப்பு தெரிவிப்பதை ஓரளவுக்கு ஏற்றுக்கொண்டாலும், வடக்கில் தமது சொந்த மண்ணில் வாழ்வதற்கு ஆசை இருந்தும் அற்கு வாழ்வதற்காக காணி, வீடு இல்லாமல் வெளிமாவட்டங்களில் வாழும் முஸ்லிம்களுக்கு சந்தர்ப்பம் வழங்கப்பட வேண்டும் என்பது அம் மக்களின் எதிர்பார்ப்பாகும்.

எனவே, இடம்பெயர்ந்த காலத்திலிருந்தே பல கஷ்டங்களை அனுபவித்து வந்த வடபுல முஸ்லிம்கள் அவர்களது சொந்த மண்ணில் வாழுவதற்கு போராட்டங்களை நடத்திக்கொண்டிருக்கிறார்கள். அதுபோல தமது வாக்குறிமைக்கும் போராட்டங்களை நடத்திக்கொண்டிருக்கிறார்கள். ஏராளமான வடக்கு முஸ்லிம்கள் தமது சொந்த மாவட்டங்களுக்கு சென்று வாக்காளர் விண்ணப்பங்களை பெற்றுக்கொள்ள முடியாமல் சென்ற மறுகனமே தாம் வாழும் மாவட்டங்களுக்கு திரும்பிச் சென்று விடுகிறார்கள்.

வாக்காளர்களாக பதிவு செய்யும் விண்ணப்பத்தை பெற்றுக்கொள்ளாது வெறுங்கையுடன் விரக்த்தியுடன் திரும்பிச் செல்லும் மக்கள் தாம் வாழும் மாவட்டங்களிலேயே பதிவு நிரந்த வாக்காளர்களாக செய்துகொள்வோம் என்ற ஒரு ஆத்திர உணர்வுடன் செல்கிறார்கள்.

இதன் பாரதூரத்தை உணர்ந்து அரசியல்வாதிகள் செயற்படவேண்டிது காலத்தின் தேவையாகும். இன்று இலங்கையில் முஸ்லிம்கள் திட்டமிட்டு புறக்கணிக்கப்பட்டு வருகிறார்கள். குழந்தை பெறுவதை மூன்றுடன் நிறுத்திக்கொள்ள வேண்டும் என்று ஒரு சட்டத்தைக் கொண்டு வருமாறு பொதுபலசேனா அமைப்பு குறிப்பிட்டுள்ளது. இதுகூட ஒட்டுமொத்த முஸ்லிம்;களை குறிவைத்தே வெளியிடப்பட்டுள்ள கருத்தாகும்.

ஒரு மாவட்டத்தில் முஸ்லிம்கள் எத்தனை வீதம் வாழ்கிறார்கள் என்று கணிப்பிடுவது வாக்காளர் எண்ணிக்கையை வைத்தே ஆகும். இதன் அடிப்படையில் தமது சொந்த மண்ணில் வாழுவதற்காக காணி,வீடு இல்லாமல் புத்தளம் போன்ற மாவட்டங்களில் வாழும் யாழ். கிளிநொச்சி, மன்னார், வவுனியா, முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்கிலுள்ள முஸ்லிம்கள் தமது சொந்த மண்ணில் கௌரவமாக மீள்குடியேற்றம் செய்யப்பட வேண்டும்.

அத்துடன், அம்மக்களின் பூர்வீக மாவட்டங்களிலேயே நிரந்தர வாக்காளர்களாக பதிவு செய்துகொள்வதற்கு அரசியல்வாதிகள் கூட்டாக ஒன்றைந்து ஜனாதிபதி மற்றும் தேர்தல் ஆணையாளர் ஆகியோருடன் பேசி நல்ல தீர்வைப் பெற்றுக்கொடுப்பதன் மூலமே தமது அரசியல் பிரதிநிதிகளின் இருப்பை உறுதிப்படுத்த முடியும்.

இதுவிடயத்தில் உமாக்கள், புத்திஜீவிகள், சமூக மட்ட அமைப்புக்கள் ஆகியோர் ஒன்றினைந்து அரசியல்வாதிகளை ஒன்றினைத்து செயற்படுவது காலத்திற்கு பொறுத்தமானதாக இருக்கும். இ;ல்லையெனில் மிக விரைவில் வடக்கு முஸ்லிம்கள் நீதிகேட்டு வீதிக்கு இறங்குவதை தவிர வேறு எதனையும் அந்த மக்களினால் செய்ய முடியாது.

No comments

Powered by Blogger.