Header Ads



நிந்தவூரின் கொல்களம் மூடப்பட்டது - டாக்டர் பாரூசாவின் அதிரடி நடவடிக்கை.

கிட்டத்தட்ட  31000 மக்களைக் கொண்டுள்ள  நிந்தவூர் பிரதேசத்தில்  உள்ள ஐந்து இறைச்சிக்கடைகளிலும் தினமும் ஒன்பது அல்லது பத்து மாடுகளும் வெள்ளிக்கிழமைகளில்  அதனை விட அதிகமான மாடுக்களும் இறைச்சிக்காக அறுக்கப்படுவது வழமையாகும்.‘பரவட்டப்புட்டி” எனும்  பிரதேசத்தில்  சுனாமியின் பின்னர் அமைக்கப்பட்ட விலங்குகள்  கொல்களம்(slaughter House) ஆடு மாடுகளை  அறுப்பதற்கு உகந்ததல்லாத நிலையில் இருப்பதனால் இந்த கொல்களம்  மூடப்பட்டுள்ளது. இந்தப்பிரதேசத்திலே நிந்தவூரின் திண்மக்கழிவுகளும் கொட்டப்பட்டு வருகின்றன.

பொதுமக்களது முறைப்பாட்டினைத் தொடர்ந்து இவ்வாரம்  திடீர் பரிசோதனையை நடாத்திய  சுகாதார வைத்திய அதிகாரி அடங்கலான குழுவினர்  இந்த கொல்களத்தின்  கள நிலவரத்தை  கண்ணுற்றதன் பயனாக  உடனடியாக  இந்த  உத்தரவு  பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இக்குழுவினரி  அவதானக்குறிப்பின்படி  பின்வரும்   பிரதானமானதும் உடன் தீர்வு காணப்படவேண்டியதுமான குறைபாடுகள் சுட்டிகாட்டப்பட்டுள்ளன.

1.    நிந்தவூர் பிரதேசத்தின் திண்மக்கழிவுகள் கொட்டப்ப்படுமிடம் இந்த கொல்களத்தை சூழ்ந்திருக்கின்றது. இரண்டும்  ஒரே இடத்தில் அமைந்திருத்தல் கூடாது,இரண்டில் ஒன்றே இருக்க வேண்டும்.
2.    கொல்களத்தின் கூரை  வேயப்பட வேண்டும்.
3.    கொல்களத்தின்  தரை  உரிய முறைப்படி  செப்பனிடப்பட வேண்டும்.
4.    கொள்கலத்தின்  கழிவுகள் சேகரிக்கப்படும்  குழி உரிய முறைப்படி அமைக்கப்பட வேண்டும்.
5.    கொல்களத்தின்  முன்பக்கமாக  சேகரிக்கப்பட்டிருக்கும்  மாடுகளின்  கழிவுகள் உரியமுறைப்படி அகற்றப்படவேண்டும்.
6.    நீர் வசதி செய்து கொடுக்கப்பட வேண்டும்.

இன்னும் பல..

இவ்வளவு குறைகளும் நிவர்த்திசெய்யப்பட்ட பின்னரே  இந்த இடத்தில் விலங்குகளை அறுப்பதற்கு  தம்மால் அனுமதி வழங்க முடியும் என்று குறிப்பிட்ட டாக்டர் பரூசா அவர்கள்,தேவை ஏற்படின்  அயல் கிராமங்களில் உள்ள கொல்களங்களை பயன்படுத்தி அறுத்து பின்னர் கொண்டுவந்து விற்பனை செய்வதால் இறைச்சித்தேவையை நிவர்த்தி செய்து கொள்ளலாம் என்றும் குறிப்பிட்டார்.

கிட்டத்தட்ட நான்கு  வருடங்களுக்கு முன்னர் வீசிய ஒரு சுழிக்காற்றினால்  கொல்களத்தின் கூரைக்கு சேதம் ஏற்பட்டது,இந்த கூரையின் இடைவெளிகளினால்தான்   காகங்கள் பறந்து வந்து விட்டங்களிலும்,முகட்டிலும் அமர்ந்து தரையில் எச்சங்களை பீச்சுகின்றன.தரையும் சேதமுற்று சிதைந்து காணப்படுகின்றது,இந்த எச்சங்கள் நன்கு  கழுவிச்சுத்தம் செய்யப்படுவதற்கு போதியளவு  நீர்வசதியும்கொள்கலன்களும்  ஏற்பாடு செய்து கொடுக்கப்படவில்லை.

தினமுமொரு  பொது சுகாதாரப்பரிசோதகர் மாடறுக்கும் மடுவத்திற்கு சென்று தனது கடமையினை மேற்கொள்ளுவதாக  அலுவலக  பத்திரங்களில் குறிப்பிடப்படுள்ளது.குறிப்பிட்ட PHI பொது சுகாதார பரிசோதகர்  இதனை  பிரதேச சபையினரின் கவனத்திற்கு  கொண்டுவரத்தவறினாரா? அல்லது அவரது கோரிக்கைகள் செவிசாய்க்கப்படவில்லையா?

மாட்டிறைச்சிக்கடைகளை  நிந்தவூர் பிரதேச சபை குத்தகைக்கு விட்டு  பெருமளவிலான பணத்தினை வருமானமாகப் பெறுவது குறிப்பிடத்தக்கது.எனவே  மக்களை நெருக்கடிக்கு உள்ளாக்காமல் நிந்தவோர் பிரதேச சபை நிருவாகம் இக்குறைகளை தீர்த்துவைக்க  உரிய  நடவடிக்கைகளைஉடனடியாக  எடுக்க வேண்டும்.

No comments

Powered by Blogger.