Header Ads



ஐனாதிபதியின் கட்டளையையும் மதிக்காத 'கிளைபோஸ்ட்'

(பழைய நாடகத்தின் புதிய வடிவம் - இன்றைய திவய்ன சிங்களப் பத்திரிகையின் ஆசிரியர் தலைப்பு

-சிங்களத்தில் இருந்து தமிழ் வடிவம்: ஏ.ஸீ.எம்.இனாயத்துல்லாஹ்-

ஹொலிவூட், பொலிவூட் பழைய படக்கதைகளின் புதிய உற்பத்திகள் வெளிவருவது  இன்று ஒருபெக்ஷனாக மாறிவருகின்றது. இலங்கையிலும் பழைய படங்கள் மட்டுமன்றி  “நாடகங்களும்”   இப்போது புதிய வடிவமைக்கப்பட்டு வெளியிடப்படுகின்றன. ஆனால் புதிய அரசாங்கத்தின் ‘நல்லாட்சியின்’ கீழ் அவற்றை நாம் கண்டுகளிக்கவேண்டிய நிலைமை ஏற்பட்டது  உண்மையில எமது துரதிருக்ஷ்டம் தான். ஆனால் நாடகம் புதிதன்று. கதாபாத்திரங்கள் தான் புதியவை. கதை புதியது. மேடையேற்றம் சா கம்பீரம்! அவை திரைப்படமாக இல்லை என்பதால் விக்ஷேடமான உத்திகள் எதுவும் அவற்றில் காணப்படாத போதிலும் “அதிவிக்ஷேட உத்திகளை” அவை உள்வாங்கி யிருக்கின்றன. 

பழைய நாடகத்தின் மூலம் மேடையேற்றப்பட்ட புதிய உற்பத்திதான் ‘ கிளைபோஸ்ட்” படக்கதையாகும். போதைப்பொருட்கள், எதனோல் பாரியகொள்கலன்களில் வந்து இறக்கப்படும் போதும் நச்சு இரசாயனக் கலவைகள் அடங்கிய விவசாய இரசாயனப்பொருட்கள் வந்து இறங்கும் போதும் பூமி கலங்கிவெடிக்கும் அளவுக்கு சத்தமிட்ட  அரசியல்வாதிகளும் மற்றொரு கூட்டத்தி னரும் ‘கிளைபோஸ்ட்’ 15 பாரியகொள்கலன்கள் துறைமுகத்திலிருந்து அகற்றப்படும்போது வாயில் புட்டை விழுங்கி வாயைத்திறக்க முடியாதுபோயிருந்தார்களா?

ஐனாதிபதி மைத்திரிபால சிரிசேன அவர்கள்  “கிளைபோஸ்ட்” அடங்கிய விவசாய இரசாயனப் பொருட்களை இறக்குமதிசெய்வது, விநியோகிப்பது உடனடியாக அமுல்படுத்தும் வகையில் கடந்த 22 திகதி பூரணமான தடை உத்தரவைப் பிறப்பித்தார்கள். இந்த நாட்டின் விவசாய உற்பத்திப் பிராந்தியங்கள பலவற்றில் வேகமாகப்  பரவிவரும் சிறுநீரக பாதிப்புநோய்களுக்கு அவை பிரதான காரணமாக அமையும் என அடையாளம் காணப்பட்டிருப்பதனால் “கிளைபோஸ்ட்’ கதை மிகப் பழைய கதையாகும். 

ஆனால்,இப்போது இறக்குமதி செய்யப்பட்டிருக்கும்  விவசாய இரசாயனப் பொருட்களின்தொகை முடிவடையும்  மட்டும்  அவற்றை விநியோகிக்க அனுமதியளிக்குமாறு  சிலசெல்வாக்குமிக்க நபர்கள் விடுத்தவேண்டுகோளுக்கு ஐனாதிபதி உடன்படவில்லை. ஆச்சரியம் என்னவென்றால் இந்த உடன்பாட்டுக்கு இணக்கம் காணப்படாத ஒரிரு நாட்களில் அதாவது கடந்த மே 25 திகதி  நாட்டின் ஐனாதிபதி பகிரங்கமாக அறிவித்த உத்தரவுவை அற்ப அளவும் மதிக்காத இந்த நாடகத்தின் புதிய கதாபாத்திரங்களில் சிலர் இந்த நாட்டில் இறக்குமதி செய்யபட்டு சுங்கத் திணைக்களத்தின் கட்டுப்பாட்டில் வைக்கப்பட்டிருந்த விவசாய இரசாயனங்கள் அடங்கிய 15 பாரியகொள்கலன்களை சுங்கத் திணைக்களத்தின் அனுமதியின்றி விடுவித்தனர்.

நல்லாட்சி அரசாங்கத்தில் எவரும் எதிர்பார்க்காத ஒரு நிலைப்பாடு இது. நாடகம் பழையது மிக விசேடமான உத்திகளை அதுகொண்டிருக்கின்றது என நாம் நாம் கூறுவதும் விமர்சித்த காரணமும் இதன் காரணமாகத்தான்.
நெற்செய்கையில் மண்ணை வளப்படுத்தும்போது மிகபொதுவாக பாவிக்கப்படும் ஒரு இரசாயனப் பதார்த்தம் தான் “கிளைபோஸ்ட்”. உவர் நீர் காணப்படும் பகுதிகளில்  அவை பாவிக்கப்படும் வேளையில் சிறுநீரகநோய்கள் ஏற்படும் வாய்ப்பு அதிகமாக் காணப்படுவது ஆய்வுகள் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

2012 ஆண்டில் “கிளைபோஸ்ட்”கொண்ட விவசாய இரசாயனக் கலவைகள் பதிமூன்று இலட்சம் கிலோ இலங்கைக்கு இறக்குமதி செய்யப்ட்டுள்ளதாக அறிக்கைகள் தெரிவிக்கின்றன. “கிளைபோஸ்ட்” சந்தைப்படுத்தல்  கடந்த 1970 ஆண்டுகளில் இருந்து நடைமுறையில இருந்து வருகின்றது. அவை புற்பூண்டுகளை அழிக்கும் கிருமிநாசினியாகவே பெரும்பாலும் பயன்படுத்தப்படுகின்றது. பிரான்ஸ் நாட்டில் புற்றுநோய் ஆய்வுக்கான சர்வதேச நிறுவனம்’ “கிளைபோஸ்ட் புற்று நோய்க்கு காரணமாக அமையலாம் என கருத்து வெளியிட்டுள்ளது. மேற்கு அமெரிக்காவில் ஆண்களை மையமாக வைத்து மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் இக்கருத்து உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 

சுவீடன், எல்சல்வடோர்,இந்தியாவின் ஆந்ரா,ஒரிஸ்ஸா மாகாணங்களில் “கிளைபோஸ்ட்” தடை செய்யப்பட்ட ஒரு விவசாய இரசாயனப்பதார்த்தமாகும்.

நாட்டு மக்களுக்கு விக்ஷத்தைப்பருக்கியாவது தங்கள் பணப்பொதியை நிரப்பிக்கொள்ள எத்தனிக்கும் சில அரசியல்வாதிகளும் மேல்மட்டத்தில் உள்ள நாவிதர்களான உத்தியோகஸ்தர்களும் யார் என்பதை அறிந்துகொள்வது  இப்போது மிக முக்கியமாகத்தெரிகிறது. அதேநேரத்தில் கொலம்பியாவில் சட்டவிரோதமான முறையில்மேற்கொண்ட பயிர்களை அழிக்கவும் “கிளைபோஸ்ட்” பாவிப்பது கூட தடைசெய்யப்பட்டுள்ளது. அழிக்கும் நாசகார பொருளைப் பாவித்து அழிப்பது கூட தடுக்கப்பட்டிருப்பின்,  அதைப் பாவிப்பதன் பாரதூரமான விளைவு எவ்வாறு இருக்கும் என புதிதாக விளக்கவேண்டிய அவசியம் இல்லை.  இந்த “கிளைபோஸ்ட்” கொள்கலன்கள் சென்ற மே மாதம் 09 திகதி, இந்தோனீசியாவில் இருந்து சிங்கப்பூர் துறைமுகம் மூலமாக கொழும்புத் துறைமுகத்துக்கு அண்மித்தது. கொழும்புத் துறைகத்துக்கு அடிக்கடிபொருட்களை ஏற்றி வரும்  ''CAPE MASS" என்ற கப்பல் மூலமாக  “கிளைபோஸ்ட்” இங்கு கொண்டுவரப்பட்டது. அன்றில் இருந்து 15 கொள்கலன்களையும் விடுவிக்கப்படும் வரை கிருமிநாசினி கம்பனி பெரும் தடுமாற்றத்தில் திளைத்திருந்த காரணம்   இந்தோனீசியாவின் நாட்டின்பெரும்பாலான பிரதேசங்களில் “கிளைபோஸ்ட்” தடைசெய்யப்பட்டிருந்ததோடு நிலைமை மிகவும் பாரதூரமானது என்பதை நன்கு அறிந்திருந்துவைத்திருந்ததும்தான்.

அனுராதபும்,பொலன்னருவ,மொனராகல மற்றும் குருநாகல் போன்ற மாவட்டங்களிலும் மஹியங்கன, ரிதீமாலியத்த மற்றும் பதுளை மாவட்டத்தில் உள்ள கந்தகெட்டிய பிரதேச்செயலகப் பிரிவிற்கு உற்பட்ட பகுதிகளிலும் சென்ற 22திகதி டிசம்பர் மாதம் 2014 ஆண்டில் வெளியிடப்பட்ட 1984/4 இலக்க விசேட கெசட் பத்திரிகை மூலமாக கிலைபோஸ்ட் வினியோகிப்பது பூரணமாகத் தடைசெய்யப்பட்டுள்ளது. 

நிலைமை இவ்வாறு இருக்கும்போது  ஐனாதிபதியின் உத்தரவைத் துச்சமாக மதித்து அழிவை ஏற்படுத்தும் இரசாயனப்பொருள்  வெளியில் கொண்டுவர அனுமதிக்கப்பட்டுள்ளது. இது நேர்மையான அதிகாரிகளையும் பதவி இழக்கச்செய்யும் இந்த ஈனச்செயலில் ஈடுபட்ட. செல்வாக்கு மிக்க இந்ந  நாடகத்தின் பிரதான நடிகர்கள் முதல் சிறிய பாத்திரங்களில் நடிக்கும் சாதாரண நடிகர்கள் வரை அவர்களின் வீடுகளுக்குச் சென்று கிளைபோஸ்ட் கலந்த ஒருநேர ஆகாரத்தை அவர்கள் அருந்த ஏற்பாடு செய்யப்படவேண்டும். இல்லாவிட்டால் இந்த காக்காமார்கள் இந்த கிளைபோஸ்ட் உடன் மாத்திரம் நின்றுவிடாது  எதனோல்,மதுபோதைத்தூள் பாரிய கொள்கலன்களுடன் மிகவிரைவில் வெளியில் அனுப்ப ஆரம்பிப்பார்கள் என  நாம் கூறிவைக்க விரும்புகின்றோம்.  

No comments

Powered by Blogger.