Header Ads



முகமட் வசீம் தாஜுதீன் கொலை செய்யப்பட்டது உறுதியானது - யோசித்த ராஜபக்ச கைது செய்யப்படுவார்

ரகர் விளையாட்டு வீரர் முகமட் வசீம் தாஜுதீன் கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபரான யோசித்த ராஜபக்ச, எதிர்வரும் வாரங்களில் கைது செய்யப்படுவார் என நம்பத் தகுந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

2012ஆம் ஆண்டு மே மாதம் 17ஆம் திகதி ரகர் விளையாட்டு வீரர் முகமட் வசீம் தாஜுதீன் தனது கார் எரிந்து உயிரிழந்துள்ளதாக கூறப்படுவது இயற்கையான மரணம் இல்லை எனவும் இது ஒரு கொலை எனவும் உறுதியாகியுள்ளது.

பல்வேறு நபர்கள் மூலம் பெற்றுக்கொள்ளப்பட்ட தகவல் மற்றும் சாட்சியங்களுக்கமைய இக்கொலைக்கான பிரதான சந்தேக நபராக யோசித்த ராஜபக்ச இனங்காணப்பட்டுள்ளார்.

எப்படியிருப்பினும் கடந்த காலங்களில் இது தொடர்பான விசாரணைகள் குற்றப்புலனாய்வு பிரிவினராலே மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதேவேளை விளையாட்டு வீரரின் உடலில் காபன் மொனக்ஸைட் செலுத்தப்பட்டு அவர் கொலை செய்யப்பட்டுள்ளார் என பிரேத பரிசோதனை தொடர்பாக நீதிமன்ற வைத்தியர் வழங்கிய அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இது தொடர்பில் இரகசிய புலனாய்வு பிரிவை சேர்ந்த ஒருவரின் அறிக்கை நீண்ட காலங்கள் செல்லும் வரை வழங்கப்படவில்லை. ஆனால் கடந்த பெப்ரவரி மாதம் 12ஆம் திகதி அதன் அறிக்கை வழங்கப்பட்ட போதிலும் அதில் உள்ளடக்கப்பட்டுள்ள விடயங்கள் தொடர்பில் இறுதி தீர்மானம் வழங்க முடியாமல் உள்ளது.

எப்படியிருப்பினும் எதிர்வரும் வாரங்களில் இக்கொலையுடன் தொடர்புடைய யோசித்த ராஜபக்ச உட்பட பலர் கைது செய்யப்படுவார்கள் என நம்பத் தகுந்த தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

2 comments:

  1. அவனை கைது செய்து தூக்கிலிடுங்கள்

    ReplyDelete
  2. மாஷா அல்லாஹ்.
    அரசன் அன்று கொல்வான், தெய்வம் நின்று கொல்லும்.

    ReplyDelete

Powered by Blogger.