Header Ads



"டாக்டர் அமானுல்லாஹ் இஸ்மாயீல்" கத்தார் சிப்பிக்குள், ஓர் இலங்கை முத்து

கத்தார் ஹமத் வைத்தியசாலையில் (HMC Qatar) வைத்திய ஆராய்ச்சித் துறையில் பணிபுரிந்து கொண்டிருக்கும் இலங்கையை சேர்ந்த டாக்டர் அமானுல்லாஹ் இஸ்மாயீல் அவர்களுடனான ஓர் கலந்துரையாடலின் போது கிடைக்கப்பெற்ற அவர் தொடர்பான தகவல்களை இங்கு பகிர்ந்து கொள்ள விரும்புகின்றோம் 

டாக்டர் அமானுல்லாஹ் இஸ்மாயீல் அவர்கள்  இலங்கையின் கல்ஹின்னவை பிறப்பிடமாகக் கொண்டவராவார். இவர்    கல்ஹின்ன அல் மனா மத்திய கல்லூரியில் தனது வாழ்வின் முதல் கட்டக் கல்வியை ஆரம்பித்து தனது சாதாரண தரக் கல்வியை  குருநாகல் கெகுனுகொல்ல மத்திய கல்லூரியில் கற்று சிறப்புத் தேர்ச்சி பெற்றார். அதன் பின்னர் அவர் தனது வாழ்வின் எதிர் காலத்தை முடிவு செய்யக் கூடிய  உயர் கல்வியை மடவளை மதீனாக் கல்லூரியில் விஞ்ஞானப் பிரிவில் சேர்ந்து சிறப்புறக் கற்று  யூனானி வைத்திய துறையில் பட்டப்படிப்பை  மேற்கொள்ளக் கூடிய வகையில் சிறப்புத் தேர்ச்சி பெற்றார்.  
அவர் தனது உயர் கல்வியை  கொழும்பு ராஜகிரிய பல்கலைக்கழகத்தில் யூனானி வைத்தியத் துறையில் ஆரம்பித்து உக்ரைன்(Ukraine) நாட்டில் தனது வைத்திய துறை பட்டப்படிப்பை பூரணப்படுத்தியதும் தாய் நாட்டில்  தனது சேவையைஆரம்பித்தார். 

முதன் முதலாக அகுரண Royal Care (ISS) வைத்தியசாலையில் வைத்திய சேவையை ஆரம்பித்த டாக்டர் அமானுல்லாஹ் கத்தார் நாட்டில் ஹமத் வைத்தியசாலையில் இணைந்து வைத்திய ஆராய்ச்சித் துறையில் தனது பயணத்தை தொடர்ந்துகொண்டிருக்கின்றார். 
 
கடந்த இரு வருட காலமாக இவ்வைத்தியசாலையில் ஆராய்ச்சித் துறையில் அயராது பணிபுரியும் இவர் முதல் 18 மாத காலமாக HMC இன்   Artheritis Rheumetic Desease துறையில் (வெளிவாரி External)  கடும் உழைப்பும்  முயற்சியும் செய்து நேர்மையாய் பணி புரிந்ததன் காரணமாக தற்போது கடந்த 6 மாத காலமாக  Internal Medicine unit இல் Stroke துறையில் தனது ஆய்வை  மிகவும் சிறப்பாகவும் உன்னதமாகவும் செய்துகொண்டிருக்கின்றார். 
 
மேலும் இவர் நோய்களை கண்டறிவதில் திறமை வாய்ந்தவர் என வைத்திய சாலையின் முகாமைத்துவத்திடம் பெயர் பெற்றவராவர். 

இவ்வைத்தியசாலையில் ஒரு குறுகிய காலப்பகுதியில் தனக்கென்று ஓர் இடத்தைப் பிடித்துகொண்ட இவர், அவரை விடவும் சில மேலதிகாரிகள் இன்னும் பொதுவான காரியாலயத்தில் பணிபுரியும் அதே வேளை அவருக்கென்று  ஓர் தனிக் காரியாலயம் வைத்தயசாலையின் முகாமைத்துவத்தின் மூலம் வழங்கப்பட்டமை  எமக்கும் எம் தாய் நாட்டிற்கும் பெருமையை சேர்க்கின்றது. இது இவரது திறமைக்கும் பாரிய முயற்சிக்கும் கொடுக்கப்பட்ட பரிசாகும்

இவரது  இம் மகத்தான சேவை  எமது இலங்கை சகோதரர்களுக்கு ஓர் பாரிய உதவியாய் அமைவதை குறிப்பிடுவதில் பெரும்  மகிழ்வடைகின்றோம்.. 

இவரது பிரிவிற்குட்பட்ட மற்றும் உட்படாத பிரிவுகளில் வரும் இலங்கை நோயாளிகளுக்கு  தன்னால் முடியுமான அளவு உதவுவதுடன் இலங்கையர்களின்  ஜனாஸாக்கள் தொடர்பான விடயங்களில்  மற்றும் பொது வேலைகளில் ஸ்ரீ லங்கன் கொமியுநிட்டி வெல்பெயார் போரத்துடன்(Srilankan Community Welfare Forum Qatar) முழுமையாக இணைந்து தனது உதவிகளை சிறப்பாக மேற்கொள்வது குறிப்பிடத்தக்கது.மேலும் இவரது விடா முயற்சி, நேர காலம் பாராது சேவையில் ஈடுபடல் என்பன பாராட்டக்கூடிய சிறப்பம்சங்களாகும் 

இது போன்ற சமூக நோக்குடன் சேவையில் ஈடுபடும் வைத்தியர்களை மேன்மேலும் எம் சமூகத்திற்கு உருவாக்க வல்ல இறைவன் அருள் புரிவானாக 

தகவல் : ஸ்ரீ லங்கன் கொமியுநிட்டி வெல்பெயார் போரம் கத்தார் 
Srilankan Community Welfare Forum Qatar
 
 

1 comment:

  1. " Bane chaahe dushman zamaana humaara -2 Salaamat rahe dostaana humaara "என்ற இந்த பாடலை கெகுனகொல்ல மத்திய கல்லூரியில் என் வகுப்பில் பாடி என்னையும் அதன் ரசனைக்கு உட்படித்தியவர் இவர் தான். காலப்போக்கில் எல்லாம் மறந்து விட்டது .Dr நண்பா நான் நினைப்பது சரியானால் நீங்கள்தான் அந்த அமானுல்லாஹ் ( இது எனது Qatar +974 77183748 )..........பின் jaffna muslim மூலமாக வாசிக்க கிடதமைக்கு மிக நன்றி தெரிவிக்கின்றேன். யா அல்லாஹ் இவரின் மூலமாக நல்ல சேவைகளை மக்களுக்கு கிடைக்க அருள்புரிவானாக.

    ReplyDelete

Powered by Blogger.