Header Ads



பல்டி அடிப்பவர்களுக்கு ஆப்பு..! மைத்திரியும், ரணிலும் இணக்கம் கண்டனர்..?

தேர்தலில் போட்டியிடும் நோக்கில் இரண்டு பிரதான அரசியல் கட்சிகளில் இருந்து அணி மாறும் எந்த அரசியல்வாதிக்கும் எதிர்வரும் பொதுத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்குவதில்லை என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும், பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும் இணக்கப்பாட்டுக்கு வந்துள்ளனர்.

நாட்டில் புதிய அரசியல் கலாசாரம் ஒன்றை ஆரம்பிக்கும் நோக்கில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவரான ஜனாதிபதியும், ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரான பிரதமரும் இ்நத இணக்கத்தை ஏற்படுத்திக் கொண்டுள்ளனர்.

ஐக்கிய தேசியக் கட்சியும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் நாட்டின் வரலாற்றில் முதல் முறையாக இணைந்து அமைத்த அரசாங்கத்தின் மூலம் மக்களுக்கு பாரிய பணிகளை செய்ய முடிந்துள்ளதாக இரண்டு கட்சிகளின் பேச்சாளர்கள் சிலர் கூறியுள்ளனர்.

இதனால், அணி மாறுவதற்கு இடமளித்தால், இந்த ஒத்துழைப்புக்கு பங்கம் ஏற்படும் எனவும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இரண்டு பிரதான அரசியல் கட்சிகளை சேர்ந்த பலர் கட்சி மாறுவதற்கு தயாராக இருக்கின்றனர். அவர்களில் பெரும்பாலானவர்கள் தற்போது நாடாளுமன்றத்தில் அங்கம் வகித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த கட்சி தாவும் விடயம் தொடர்பில் அறிந்து கொண்டதை அடுத்து இரு கட்சிகளின் தலைவர்களும் இது குறித்து விரிவாக கலந்துரையாடிய பின்னர் மேற்படி இணக்கத்திற்கு வந்துள்ளனர்.

No comments

Powered by Blogger.