Header Ads



எனக்கெதிராக நம்பிக்கையில்லா பிரேரணை, கொண்டுவந்தால் பயனில்லை - மைத்திரியிடம் சொன்ன ரணில்

20 வது அரசியலமைப்பு திருத்த சட்டமூலமா அல்லது தமக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையா முதலில் கொண்டு வரப்படும் என்பது குறித்து தீர்மானிக்க வேண்டும் என கோரப்பட்டுள்ளது.

நேற்று இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தின் போது பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் இவ்வாறு கோரியதாக அமைச்சரவை பேச்சாளர் இன்று தெரிவித்தார்.

தமக்கெதிராக நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டு வரப்படும் பட்சத்தில் 20 வது அரசியலமைப்பு திருத்த சட்டமூலம் தொடர்பாக கலந்துரையாடுவதில் பயனில்லை என பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் 15 கருத்துக்கள் அடங்கிய 20 வது அரசியலமைப்பு திருத்த சட்டமூலம் தொடர்பான அமைச்சரவை பத்திரம் நேற்று இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தின் போது முன்வைக்கப்பட்டது.

நாடாளுமன்றத்தின் ஆசன எண்ணிக்கையை 255 ஆக அதிகரித்தல், வாக்காளர்களுக்கு இரண்டு வாக்காளர் அட்டைகளை விநியோகித்தல், எல்லை நிர்ணய ஆணைக்குழுவை நியமித்தல், நாடாளுமன்றத்தில் பெண்களின் பிரதிநிதித்துவத்தை அதிகரித்தல் உள்ளிட்ட விடயங்கள் இதில் உள்ளடக்கப்பட்டுள்ளன.

இந்தநிலையில், ஜனாதிபதி, பிரதமர், சிறிய கட்சிகளின் பிரதிநிதிகள் தொடர்ந்தும் இதுபற்றி கலந்துரையாடல் மேற்கொண்டு 20 வது திருத்தம் தொடர்பாக இறுதி தீர்மானத்தை எட்ட நேற்று இணக்கம் காணப்பட்டுள்ளது.

No comments

Powered by Blogger.