Header Ads



ஈமானிய சிந்தனையை அதிகரிக்கும் நோக்குடன் 'இஜ்திமா'

அல்லாஹ்வின் உதவியால் இலங்கையில் உள்ள அனைத்து உயர் கல்வி பயிலும் மாணவர்களுக்கான இஸ்லாமிய ஆன்மீக ஒன்று கூடல்  வருடா வருடம் தப்லீக் ஜமாஅதினால் எந்த இயக்க வேறுபாடுகளும் இன்றி மாணவர்களின் ஈமானிய சிந்தனையை அதிகரிக்கும் நோக்குடனும், தான் கற்க கூடிய காலத்திலும், எந்த சூழலிலும்  ஒவ்வொரு மாணவர்களும் அல்லாஹ்வின் கட்டளைகளை பேணி, தன்னை சுவனதுக்காக தயார் படுத்த வேண்டும் என்ற கவலையிலும், அனைத்து கலிமா சொன்ன மாணவர்களும் தங்களுக்குள்ளும், மாற்று மதத்தவர்களுடனும் ஒற்றுமையாக நல்லுறவுடன் வாழ வேண்டும்  என்ற பல இன்னும் பல கருத்துக்களை உள்வாங்கி   ஈமானிய ஆன்மீக ஒன்று கூடல் நிகழ்வுகள் நடைபெற்று வருகின்றன.

முழு இலங்கையையும் குறிப்பிட்ட  பல்கலைக்கழகங்களை  மையப்படுத்தி   5 பிரிவுகளாக  பிரிக்கப்பட்டு வருடந்தோறும் பல பிரிவுகளாக இந்த ஒன்று கூடல் இஜ்திமாக்கள் நடைபெற்று வருகின்றன.

அந்த வகையில் இன்ஷா அல்லாஹ் கிழக்கு பல்கலைகழகத்தை மையப்படுத்தி பொலனறுவை இருந்து காத்தான்குடி வரை உள்ள பகுதியை உள்ளடக்கிய பல்கலைக் கழக மற்றும் தனியார், அரச நிறுவனங்களில் உயர் கல்வி கற்க கூடிய மாணவர்களை மையப் படுத்தி ,

இன்ஷா அல்லாஹ் வரும் செவ்வாய்க் கிழமை (02-06-2015) காலை  8 மணி முதல் லுஹர் வரை இவ் ஒன்று கூடல் ஏற்பாடு செய்ய பட்டுள்ளது . (பகல் போசனதுக்கான ஏற்பாடுகளும், வாகன வசதிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது)

எனவே அனைவரும் கலந்து பயன் பெறுமாறு அன்புடன் அழைக்கின்றோம்.
(பல்கலைக் கழக மாணவர்கள்)


No comments

Powered by Blogger.