Header Ads



அறைந்த மைத்திரியும், மன்றாடிய ஹக்கீமும்..!

-நஜீப் பின் கபூர்-

ஒரேயடியாக ஹக்கீமின் கன்னத்தில் மைத்திரி அறைந்தார் என்று தலைப்பைப் போடாமல் சற்று மென்மைப்படுத்தி தலைப்பைக் கொடுத்திருக்கின்றோம். ஆனால் உண்மையில் ஹக்கீமின் கன்னத்தில் அறைந்தார் மைத்திரி. ஹக்கீம் மன்னிப்புக் கேட்டார் என்று தான் இந்தக் கதையை சொல்லி இருக்கவேண்டும். அப்படிப்பட்ட ஒரு கதைதான் இது.

மைத்திரி மென்மையான ஒரு மனிதனாகத்தான் இதுவரை பொதுவாகப் பார்க்கப்படுகின்றார். ஆனால் இந்த மைத்திரி பேயாக  மாறி நின்ற ஒரு சம்பவம்தான் நாங்கள் சொல்கின்ற அறையும் மன்னிப்பும் என்ற விவகாரம்-கதை.

மஹிந்த ராஜபக்ஷ காலத்தில் நகர அபிருத்தி அமைச்சின் ஏக அதிகாரங்களுக்கும் கோத்தாபே ராஜபக்ஷவே பொறுப்பாக இருந்தார். அவர் காலத்தில் பல சட்டச்சிக்கள் பிரச்சினைகள் இருந்தாலும் கொழும்பு நகர் நவீனமயப்படுத்தப்பட்டு அது கவர்ச்சிகரமாக உருமாற்றம் செய்யப்பட்டு பலரது பாராட்டுக்களையும் பெற்றிருந்தது.

அப்போது பாதுகாப்புப் படைத்தரப்பினர் நகரைச் சுத்தம் பண்ணுக்கின்ற பொறுப்புகள் ஒப்படைக்கப்பட்டிருந்தது. கடந்த ஜனவரி 8ம் திகதிக்குப் பின்னர் இந்தப் பொறுப்புக்களில் இருந்து இராணுவம் வாபஸ் வாங்கப்பட்டதுடன் அது நகர அபிவிருத்தி அமைச்சின் கீழ் கொண்டு வரப்பட்டு அதற்கு தேவையான அமைச்சர் அமைச்சு அதிகாரிகள் ஆளணியும் கூட நியமனம் செய்யப்பட்டிருந்தார்கள்.

ஆனால் ஹக்கீம் பொறுப்புக்கு வந்த  இந்த அமைச்சு, கொழும்பு நகர் அழகுபடுத்துகின்ற திட்டம் கொழும்பை பழைய நகரமாக திரும்பவும் மாற்றி வருகின்ற வகையில் முன்னெடுக்கப்பட்டு கண்ட, கண்ட இடங்களில் குப்பைகள் குவியத் துவங்கியது. இது பற்றி பல முறைப்பாடுகள் ஜனாதிபதி மைத்திரிக்கு கொடுக்கப்பட்டு வந்தது. பலமுறை இது பற்றி மைத்திரி எடுத்துக் கூறியும் உறுப்படியாக எதுவும் நடக்க வில்லை.

எனவே நாங்கள் முன்பு கூறிய படி அமைச்சர் ஹக்கீமையும் அதிகாரிகளையும் ஜனாதிபதி தனது செயலகத்திற்கு அழைத்து. அங்கு ஒரு பேயைப் போன்று தனது கோபத்தை வெளிப்படுத்தி இருக்கின்றார் ஜனாதிபதி மைத்திரி.

தனது அரசியல் முரண்பாட்டாளர் கோத்தபே ராஜபக்ஷவை அவர் அங்கு வெகுவாகப் பாரட்டி இருப்பதுடன் இந்த விடயத்தில் அவருக்கு நன்றியும் தெரிவித்திருக்கின்றார். அதே நேரம் ஹக்கீமின் இயலாமைக்கு அவர் போடு போடு என்று அங்கு சாத்தி இருக்கின்றார்.

எனவே இது பளார் பளார் என்று கன்னத்தில் அறைவது போல் இருந்தது என்று அந்த இடத்தில் நின்றவர் ஒருவர்  தகவல்களை வெளியில் சொல்லி இருக்கின்றார்.  உங்களுக்கு இந்தப் பொறுப்புக்களை உரிய முறையில் செய்ய முடியாவிட்டால் போய் விடுங்கள் நான் வேறு ஆட்களைப் போட்டு இதனைப் பார்த்துக் கொள்கின்றேன் என்று மைத்திரி அங்கு கொதிப்பாகப் பேசி இருக்கின்றார்.

இன்னும் இரண்டு வாரங்களுக்குள் நான் எதிர் பார்க்கின்ற மாற்றங்கள் பழைய படி நடக்காவிட்டால் பொறுப்பிலிருப்பவர்களை நான் என்ன செய்கின்றேன் பார் என்ற ரீதியில் அங்கு நேரடியாகவே கூறி இருக்கின்றார் ஜனாதிபதி மைத்திரி.

இங்கு ஐ வில் டூவிட் என்று கூறி சமாளிக்கும் நிலை இல்லை என்று புரிந்து கொண்ட ஹக்கீம் ஜனாதிபதியிடத்தில் மன்னிப்புக் கேட்டது மட்டுமல்லாமல் இதன் பின்னர் இப்படி நடக்காதிருக்க பார்த்துக் கொள்வதாகவும் அங்கு உறுதி மொழி வழங்கி இருக்கின்றார் ஹக்கீம். பொறுத்திருந்து பார்ப்போம் நடக்கின்றதா என்று! மைத்திரி இது போன்று நடந்ததை நாங்கள் எப்போதும் பார்த்ததில்லை என்று அங்கிருந்தவர்கள் கருத்து. எனவே ஒரு அமைச்சின் இயலாமை ஒரு மென்மையான மனிதனை அங்கு பேயாக மாற்றி இருக்கின்றது!

10 comments:

  1. Good job president ! Honestly Gota did a good job in Colombo! Muslimkal suttamaha irukka vendiyavarhal anaal avarhal thaan indru suttamillamal irukkirarhal.
    Kanda idangalil kuppai kottuvathu, veethihalai , purachulalai suttapaduthuvathillai, melum palliyil kooda olungaha toilet ai upayahikka theriyathavarhalaha irukkirarhal!
    On this subject I agree with president ! Well done once again sir ! Don't let the ministers to relax in their job. Specially Muslim ministers. Most of them are very lazy.

    ReplyDelete
  2. When a job is given, it should be performed perfectly. Especially, as a Muslim, he needs to perform it well. This would be exemplary to other communities.

    ReplyDelete
  3. Minister Hakeem is not a Mayor of the Colombo Municipality. He is the Minister of urban Development. Mr Najeeb is should understand about this fact. This message is not a true. Don't write like this without valuable evidence. ok

    ReplyDelete
  4. Mr.Hakeem has never worked in any of his Ministries all throughout his life as Minister and how can the President expect him to work in future. He is a good talking machine and poorest achiever. Let President handover Urban Development to Mr. Fouzie and see his progress within days.

    ReplyDelete
  5. i agree with my3... ,இரண்டு வாரத்துக்குள் சரியாய் செய்யா விடின் அமைச்சர் பதவி பறந்து விடும் அல்லவா ஆதலால் தலையங்கதில் [கன்னத்தில் அறைந்தார் சாட்டை அடியும் குடுத்தார் மைத்திரி] என்று சேர்த்துக் கொள்ள வேண்டும்

    ReplyDelete
  6. Intha suyanalak kullanariyai pathaviyil irunthu vilakki veettukku anuppividungal...
    ivar arasiyalil angam vagippathum.. vilagiyiruppathum muslimgal engalukku samame. ..
    ivar illaavittaalum muslimgal engalin votes nallaatchikke...

    ReplyDelete
  7. City beautification is a concept. Gota lived in the US and have experience with
    beautiful cities and he wanted the capital of his country to be clean and good
    looking. He even used the army for the job. We Muslims are interested only in the
    beauty of the world hereafter but we must not forget that other communities want
    to live a beautiful life in this world . Hakeem needs to do more than Gota .

    ReplyDelete
  8. இது ஹக்கீமின் தவறு மட்டுமல்ல. அவரது மரபணுக்களின் வரலாற்றுத் தவறும் கூட.

    பொதுவாக சுத்தம் என்பதை தமது உடற்சுத்தம் என்று மாத்திரமே புரிந்துகொள்கின்ற அல்லது பழகிப்போன மரபணுக்கூறுகளைக் கொண்டவர்களின் குணம்தான் தமது சூழலை சுத்தமாக வைத்திருப்பதில் அக்கறை காட்டாமை ஆகும்.

    அழகான வீடுகட்டி அதில் சேரும் குப்பைகளைக் கொண்டுபோய் வாசலின் முன்னுள்ள வீதியில் கொட்டும் ரசனையில்லாத ஜென்மங்கள் இதுபற்றியெல்லாம் ஒருபோதும் கவலையடைய மாட்டார்கள்.

    ReplyDelete
  9. There is a need to produce A real Muslim Leader & chase this lazy fellows ..

    ReplyDelete
  10. Muzammil suttam imanin paathi ena nabiyavarhal koori irukkirarhal. Suttam enabthu udat suttam mattiramalla purachuttamume! So just because we want to live for here after we can't just leave our environment dirty and unclean.
    Islam is a religion of intellectuals not idiots!

    ReplyDelete

Powered by Blogger.