Header Ads



மகிந்த ஜனாதிபதியாக இருந்துவிட்டு, பிரதமராக இருப்பது வெட்கக்கேடானது - பௌசி

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்குள் வேறு சில கட்சிகளை சேர்ந்த நபர்களை நெருக்கடிகளை ஏற்படுத்த முயற்சிப்பதாக இடர் முகாமைத்துவ அமைச்சர் ஏ.எச்.எம்.பௌசி தெரிவித்துள்ளார்.

ஊடகம் ஒன்றுக்கு கருத்து வெளியிடும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

அரசியல் ரீதியான அகதிகளாக மாறப்போகிறோம் என்று அறிந்து கொண்ட சிலர் யாருடைய தோளில் ஏறியாவது நாடாளுமன்றத்திற்குள் வரும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை சேர்ந்த சிலரும் இதற்கு ஏமார்ந்து போயுள்ளனர். முன்னாள் ஜனாதிபதி பிரதமர் வேட்பாளராக போட்டியிட சந்தர்ப்பம் கோருகிறாராம்.

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக இருந்து விட்டு பிரதமராக இருப்பது மிகவும் வெட்கக்கேடானது. மகிந்த ராஜபக்ச பிரதமரானார் என்று வைத்து கொள்வோம். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாடாளுமன்றத்திற்கு வரும் போது பிரதமர் என்ற வகையில் மகிந்த ராஜபக்ச எழுந்து ஜனாதிபதிக்கு மரியாதை செலுத்த வேண்டும்.

மகிந்த ராஜபக்ச அதற்கு தயாரா எனவும் அமைச்சர் பௌசி கேள்வி எழுப்பியுள்ளார்.

3 comments:

  1. பிரதமர் பதவி தருவதானால் மைத்திரிக்கு கால்பிடிக்கவும் தயார் என்று கூறிவிடப்போகின்றார் கவனம்

    ReplyDelete
  2. Mahinda is not longing to become prime minister to serve the nation. He wants
    some kind of power to escape embarrassment of loss of power he held four
    months ago. What a greedy man ! Why can't he try to become the leader of the
    BBS ? They need a leader , Kirama jothi resigned .

    ReplyDelete
  3. இதைப் பார்க்க வெட்கக் கேடான செயல்களை பௌசி செய்திருக்கிறார். அவர் மறந்து இருக்கலாம், ஆனால் சமுகம் மறக்காது .

    ReplyDelete

Powered by Blogger.