Header Ads



சுவிஸர்லாந்தில் இலங்கை, முஸ்லிம்களின் விளையாட்டு போட்டி


ஐரோப்பிய இஸ்லாமிய தகவல் நிலையம் ஏற்படு செய்துள்ள சுவிஸ் வாழ் இலங்கை முஸ்லிம்களுக்கான, 2015 ஆம் ஆண்டுக்கான விளையாட்டு போட்டி எதிர்வரும் 6 ஆம் திகதி, சனிக்கிழமை At Munot Sports Platz Munotstrasse 50, 8200 Schaffhausen என்ற முகவரியில்அமைந்துள்ள விளையாட்டு மைதானத்தில், காலை 9.30 மணிமுதல், மாலை 7 மணிவரை இன்ஷா அல்லாஹ் நடைபெறவுள்ளது.

பங்குகொள்வதற்கான கட்டணம் 30 சுவிஸ் பிராங் (Participating Charge 30 Sfr)

இந்த விளையாட்டு போட்டிகளின் ஒரு அங்கமாக பெண்களுக்கும், இளம் பெண்களுக்குமான  விளையாட்டுக்கள் ( Indoor)  உள்ளக விளையாட்டரங்கில் நடைபெறவுள்ளமை கவனிக்கத்தக்கது.

விளையாட்டுப் போட்டிகளில் பங்குகொள்ளவுள்ள இலங்கையைச் சேர்ந்த சுவிஸ் வாழ் முஸ்லிம்கள் eimf@outlook.com  என்ற ஈமெயில் முகவரிக்கு அல்லது 0786331335 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு தமது வரவை உடனடியாக உறுதிப்படுத்துமாறு போட்டி ஏற்பாட்டாளர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

விளையாட்டு போட்டி நடைபெறும் நேரத்தில் ஐரோப்பிய இஸ்லாமிய தகவல் நிலையம் சார்பிலான சிற்றூண்டிச்சாலையும் இயங்கும். இதிலிருந்து பகல் சாப்பாட்டையும் பெற்றுக்கொள்ள முடியும்.

அதேவேளை இந்த விளையாட்டுப் போட்டிகளுக்கு ஏதேனும் உதவிகளை, எவரேனும் வழங்க முன்வந்தால் அதனை தாம் வரவேற்பதாக போட்டி ஏற்பாட்டாளர்கள் அறிவித்துள்ளனர்.

எதிர்வரும் புனித ரமளான் மாதத்திற்கு முன்னர் ஐரோப்பிய இஸ்லாமிய தகவல் நிலையம் ஏற்பாடு செய்துள்ள பிரதான நிகழ்வு இதுவென்பது குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.