Header Ads



கோத்தாபய உள்ளிட்ட 5 பேர் சிக்குவர் - கைது செய்யப்படுவதை தவிர்க்க 5000 மில்லியன் ரூபா பணத்தை செலவிட்டனர்

எவன்கார்ட் சம்பவம் தொடர்பாக நிறுவனத் தலைவர் உட்பட உயர் மட்ட அதிகாரிகள் ஐவரை உடனடியாகக் கைது செய்வதற்குத் தேவையான உத்தரவை சட்ட மா அதிபர் குற்றப்புலனாய்வு திணைக்களத்திக்கு எதிர்வரும் தினங்களில் வழங்குவாரென சட்டமா அதிபர் திணைக்கள வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இச் சம்பவம் தொடர்பாக இதுவரை ஐந்து விசாரணைகள் நடத்தப்பட்டுள்ளன. இதனுடன் தொடர்பான “ஆவண” கோவைகள் தற்போது சட்டமா அதிபர் திணைக்களத்திடம் பெற்றுக் கொடுக்கப்பட்டுள்ளன. இந்த விசாரணைகளின் போது மோசடிகளுக்கு நேரடியாக பொறுப்பு கூறும் ஐவர் அடையாளம் காணப் பட்டுள்ளனர்.

எவன்கார்ட் தலைவர் நிஸ்ஸங்க சேனாதிபதி பணிப்பாளர் மஞ்சுள குமார. முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோதாபய ராஜபக்ஷ, ரக்னா லங்கா பணிப்பாளர் பாலித்த பெர்னாண்டோ, பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் மேலதிக செயலர் டி. எம். எம். ஜயரத்ன ஆகியோரே அந்த ஐவரும் ஆவர். சட்டமா அதிபருக்கு இந்த ஐவர் தொடர்பாக சிபார்சு செய்யப்பட்டும், அவர்களை இதுவரை கைது செய்யாமை தொடர்பாக அரச உயர்மட்ட அமைச்சின் கவனம் திரும்பியுள்ளது.

இந்த நபர்கள் பயங்கரவாத தடுப்பு சட்டத்துக்கு மேலதிகமாக வெடிக்கும் மருந்துகளை வைத்திருந்தமைக்கு எதிராக கைது செய்யப்படலாம் என சட்டவல்லுனர்கள் மத்தியில் பேசப்பட்டு வருகிறது.

இந்த நிலைமையை அறிந்துள்ள எவன்காட் நிறுவனப் பிரதானிகள் உட்பட மற்றோர் தாம் கைது செய்யப்படுவதைத் தவிர்க்கும் நோக்குடன் ஏற்கனவே சகல பிரதான பத்திரிகைகளையும் இலக்கு வைத்து விசேட ஊடக நடவடிக்கைகளையும் சமீபத்தில் ஆரம்பித்திருந்தன.

இதற்காக இவர்கள் 5000 மில்லியன் ரூபாவுக்கும் மேற்பட்ட பணத்தை செலவிட்டுள்ளனர். இதன் மூலம் மக்கள் மத்தியில் பராட்டைப் பெறுவது அவர்களின் இலக்காகி உள்ளது.

1 comment:

  1. நெற்றி வியர்வை நிலத்தில் சிந்த உழைத்திருந்தால் இப்படி எல்லாம் செலவு செய்விங்களா? இது உங்க பணமில்லதானே சார் எங்கள போல ஏழைகளது பணமல்லவா இது. ஏழைகள் என்றால் தெரியமா உங்களுக்கு .இன்ஷாஅல்லாஹ் கைதாகும் போது தெரியவரும்

    ReplyDelete

Powered by Blogger.