Header Ads



மஹிந்தவின் கனவு தகர்ந்ததால், 3 ஆவது அணி களமிறங்குகிறது..!

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பிரதமர் வேட்பாளராகப் போட்டியிடுவதற்கு முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுக்கு அனுமதியளிக்கப்படாவிட்டால் அவரை வேறு அணியில் களமிறக்குவதற்கு அவர் தரப்பு எம்.பி. க்களும் ஆதரவாளர்களும் முயற்சித்து வருவதாகத் தெரியவருகின்றது. 

இதன்படி ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பங்காளிக் கட்சிகள் மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மகிந்த தரப்புக் குழுவினர் ஆகியோர் ஒன்றிணைந்து ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி மற்றும் ஐக்கிய தேசியக் கட்சிக்கு அடுத்தபடியாக மூன்றாவதாக புதிய அணியொன்றை உருவாக்குவது தொடர்பாகக் கலந்துரையாடல்கள் மேற்கொண்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது. 

அண்மையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பங்காளிக் கட்சிகளின் பிரதிநிதிகளுக்குமிடையே நடைபெற்ற கலந்துரையாடலின்போது, சிலர் முன்னாள் ஜனாதிபதியை ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பிரதமர் வேட்பாளராகக் களமிறக்க வேண்டுமென யோசனையொன்றை முன்வைத்துள்ள நிலையில் அதனை நிராகரித்துள்ள ஜனாதிபதி அதற்கு இடமளிக்கமுடியாதெனவும் கூறியுள்ளார்.  

இந்நிலையில், மகிந்தவை எப்படியாவது பிரதமர் வேட்பாளராகக் களமிறக்க வேண்டுமென்ற நிலைப்பாட்டில் தொடர்ந்து இருந்து வரும் தினேஷ் குணவர்தன, வாசுதேவ நாணயக்கார, விமல் வீரவன்ச ஆகியோரின் கட்சிகளும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மகிந்த தரப்பு எம்.பி.க்களும் அவரை வேறு அணியில் களமிறக்குவது தொடர்பாக ஆராய்ந்து வருகின்றனர். அந்த வகையில் நேற்று முன்தினம் அவர்கள் கூடி இது தொடர்பாகக் கலந்துரையாடியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. 

3 comments:

  1. மைதிரிக்கு மனமார்த நன்றிகள்

    ReplyDelete
  2. அல்லாஹ் போதுமானவன்

    ReplyDelete
  3. நரிகளின் வால்களை நம்பி
    களத்தில் இறங்கப்போகும் கிழட்டுச்சிங்கம்
    நின்றுபிடித்தால் ஓகே.. -ஆனால்
    மீண்டும் தோற்று வெருண்டோடும் நிலைவந்தால்
    இந்த நரிகளின் நிலை என்னவாகும்..?

    ஹா..ஹா.. நினைக்கும்போதே நகைச்சுவையாகவுள்ளது

    ReplyDelete

Powered by Blogger.