Header Ads



ஜனாதிபதி மைத்திரிக்கு எதிரான, நம்பிக்கை இல்லாப் பிரேரனை..!

-நஜீப் பின் கபூர்-

தற்போது ஜனாதிபதி மைத்திரிக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரனை என்ற ஒரு விடயத்தை கடும் போக்கு ராஜபக்ஷ விசுவாசிகள் முன்னெடுத்து வருகின்றனர் என்று தெரியவருகின்றது. 

அந்தச் செய்தியை பிரபல அரசியல் வார இதழான ராவயவும் இந்த வாரம் தலைப்புச் செய்தியாகச் சொல்லி, மேலும்  உறுதிப்படுத்தி இருக்கின்றது.  

மாலைதீவு முன்னாள் ஜனாதிபதி நஷீடின் நிலை மைத்திரிக்கும் ஏற்பட இடமிருக்கின்றது என்று பல இடங்களில் சொல்லி வந்ததும் குறிப்பிடத்தக்கது.

தற்போது கள நிலவரம் ரஜபக்ஷக்களுக்கு வாய்ப்பாக மாறிவருகின்ற உற்சாகத்தில் ராஜபக்ஷ விசுவாசிகள் மைத்திரிக்கு எதிராக ஒரு நம்பிக்கையில்லாப் பிரேரனையை கொண்டு வருகின்ற முற்யசியில் இறங்குவதற்கு உத்வேகத்தைக் கொடுத்திருக்கின்றது என்று கருத இடமிருக்கின்றது. 

இந்த நம்பிக்கையில்லாப் பிரேரனையைக் கொண்டு வருவதில் மிகவும் வேகமாகச் செயல்படுகின்றவர்கள் பல்வேறு குற்றச்சாட்டுக்களுக்கு இலக்காகி சட்டத்தின் முன் நிறுத்தப்பட இருக்கின்றவர்கள் என்று தெரிகின்றது. இதற்குக் காரணம் ராஜபக்ஷக்களைப் போன்று தமது பாதுகாப்பும் மைத்திரியைப் பலயீனப்படுத்துவதில் தங்கி இருக்கின்றது என்ற இவர்களது எதிர்பார்ப்பு என்பது மிகவும் தெளிவான விடயம்.

நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டு வந்து அதனை சாபாநாயகர் ஏற்றுக் கொண்டால் பாராளுமன்றத்தைக் கலைக்க வாயப்பில்லை. 75 உறுப்பினர்கள் இந்த நம்பிக்கையில்லாப் பிரேரனையில் கையொப்பமிட்டால் அதனை சபாநாயகருக்கும் நிராகரிக்க முடியாது. மேலும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை விசாரனைக்கு அழைத்தது தவறு என்று 116 உறுப்பினர்கள் கையொப்பமிட்டது அவர்களுக்கு இது விடயத்தில் மேலும் நம்பிக்கையைத் தற்போது கொடுத்திருக்கின்றது என்று நம்பப்படுகின்றது. பாராளுமன்றத் தேர்தலுக்கு முன்னர் பாராளுமன்றத்தைக் கைப்பற்றுவது மஹிந்த விசுவாசிகளின்  நோக்கமாக இருக்கின்றது.

இந்த நம்பிக்கையில்லாப் பிரேரனை வெற்றி பெற்றால் அடுத்து மைத்திரிக்கு எதிராக மக்களை வீதியில் இறக்கி அவரைப் பதவியில் இருந்து துரத்தவும் இடமிருக்கின்றது என்பது எமது கணிப்பு.  
   

4 comments:

  1. பிரேரணை வெற்றிபெறுவது சாத்தியமில்லை, ஆனால் சிலரது அரசியல் வாழ்வு அஸ்தமனமாகும், அத்துடன் இலங்கை அரசியலில் ஒரு பலமான தற்காலிக மூன்றாம் அணி உருவாகும், பிரேமதாசவிற்கு எதிராக லலித், காமினி, ஜீ.எம்.பிரேமச்சந்திர, ரவி கருணாநாயக்க தலைமையில் DNLF உருவானது போன்று.

    ReplyDelete
  2. Why always so happy if Maithree facing difficulties.. from mahinda troops. (For writer)

    ReplyDelete
  3. சும்மா இருக்கும் சங்கை ஊதிக் கெடுக்கப் போகிறார்கள் ...அதுவும் நல்லதுக்குதான் ...சீக்கரமாக., உள்ளுக்குள் இருக்க துடிக்கிறார்கள் போலும், நிறைவேற்று அதிகாரம் என்றால் என்னவென்று மறந்தது விட்டது போலும் ...ஓர் மஹிந்த ஐயாவின் மாயையில் இன்னும் மிதக்கினம் போலும்

    ReplyDelete
  4. லலித் அத்துலத், காமினி திசநாயக்க போன்றோர் இணைந்து முதலி ஆரம்பித்த கட்சியின் பெயர் DUNF - Democratic United National Front ( ஜனநாயக ஐக்கிய தேசிய முன்னணி ) என்பதாகும்.

    தவறுக்கு வருந்துகின்றேன். தனிப்பட்ட ரீதியில் தொலைபேசியில் சுட்டிக் காட்டிய நண்பர் சஹீம் அவர்களுக்கு நன்றி.

    ReplyDelete

Powered by Blogger.