Header Ads



ஹம்பாந்தோட்டை கடலில் கால்கழுவ, சென்றபோதே நால்வரும் வபாத்தாகினர்..!

(எம். இர்பான் ஷகரிய்யா)

கடலில் கால் கழுவுவதற்காக சென்ற ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் உயிரிழந்ததுடன் மூவரின் சடலம் கைப்பற்றப்பட்ட போதும் ஒருவரின் சடலத்தை தேடும் பணி தொடர்கிறது.

இந்தச் சம்பவம் நேற்றுக் காலை 9.30 மணியளவில் ஹம்பாந்தோட்டை கடலில் இடம்பெற்றதுடன் உயிரிழந்தவர்கள் கொழும்பு புதுக்கடையைச் சேர்ந்தவர்கள் என்று ஹம்பாந்தோட்டை பொலிஸார் தெரிவித்தனர்.

நேற்று அதிகாலை (25) காலை 1.30 மணியளவில் கொழும்பில் இருந்து திருமண வீட்டுக்கு வருகை தந்த மேற்படி குடும்பத்தினர் காலை வேளையில் வீட்டின் பின்புறத்தில் அமைந்துள்ள ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை பார்வையிடுவதற்காக கடல் ஓரமாகச் சென்றுள்ளனர்.

எனினும் மனைவி பிள்ளைகளுடன் செல்லும் போது கடலில் கால்களை கழுவுவதற்காகச் சென்ற தாய், இரு மகன் உட்பட 6 வயது சிறுமியையும் கடல் இழுத்துக் கொண்டு சென்றுள்ளது. தெய்வாதீனமாக கணவர் மாத்திரம் உயிர் தப்பினார். பெரிய தந்தையினது மகனின் திருமணத்துக்காக கொழும்பில் இருந்து வந்த மேற்படி தம்பதியினர் வீட்டாரிடம் சொல்லாமலே கடலுக்குச் சென்றதுடன் அந்த கடல் பகுதியில் எவரும் குளிப்பதற்காக செல்வதில்லை என்று ஊர் மக்கள் தெரிவிக்கின்றனர்.

உயிரிழந்தவர்களில் 31 வயதுடைய பாத்திமா சித்தாரா, மொஹமட் சியாத் (10), பாத்திமா திக்ரா (06), மொஹமட் சகி (இரண்டரை வயது) ஆகியோரில் பாத்திமா திக்ராவின் சடலத்தை தவிர ஏனையவர்களின் சடலங்களை பொது மக்கள் மீட்டுள்ளனர்.

36 வயதுடைய மொஹமட் சவாஹிர் கொழும்பில் முச்சக்கர வண்டி சாரதியாக தொழில் புரிந்து வருவதுடன், பெரியப்பாவின் மகனின் திருமணத்துக்காக மனைவி பிள்ளைகளுடன் நேற்று அதிகாலை ஹம்பாந்தோட்டை வந்ததாக தெரிவித்தார்.

10 வயது மொஹமட் சியாத் கொழும்பு புனித செபஸ்தியன் கல்லூரியில் தரம் 5 இல் கல்வி கற்று வருவதுடன் பாத்திமா திக்ரா (06) கொழும்பு பாத்திமா மகளிர் கல்லூரியில் தரம் இரண்டில் கல்வி கற்று வந்தமை குறிப்பிடத்தக்கது.

4 comments:

  1. நீர் நிலைகளைப் பொறுத்தவரை விபரம் தெரிந்த உள்ளூர் நபர் ஒருவரின் உதவி/ ஆலோசனை இன்றி அவற்றை அணுகுவதை தவிர்த்துக் கொள்ள வேண்டும்.

    நீர்நிலைகளில் ஏற்படும் பெரும்பாலான மரணங்கள் பெரும்பாலும் வெளியூர்களில் இருந்து செல்பவர்களாகவே இருப்பது குறிப்பிடத் தக்கது.

    ReplyDelete
  2. Innalillahi Waina ilaihi rajeoun .....

    ReplyDelete
  3. inna lillahi wa inna illaihi rajuoon

    ReplyDelete
  4. انا لله وانا اليه راجعون

    ReplyDelete

Powered by Blogger.