Header Ads



இரவு வேளையில், அல­ரி­ மா­ளி­கையில்...!

முன்னாள் பொரு­ளா­தார அபி­வி­ருத்தி அமைச்சர் பஷில் ராஜபக் ஷ கைது­செய்­யப்­பட்­டுள்ள நிலையில் இன்றும் நாளை வெள்­ளிக்­கி­ழ­மையும் ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­ன­ணியைச் சேர்ந்த முக்­கி­யஸ்­தர்கள் இரு­வரை கைது­செய்­வ­தற்­கான நட­வ­டிக்­கைகள் துரி­தப்­ப­டுத்­தப்­பட்­டி­ருப்­ப­தா­கவும் தெரி­ய­வந்­துள்­ளது. மேலும் பஷில் ராஜபக் ஷ கைது செய்­யப்­பட்­டி­ருப்­ப­தை­ய­டுத்து அவ­ரது ஆத­ர­வா­ளர்­களால் ஆர்ப்­பாட்ட நட­வ­டிக்­கைகள் அல்­லது எதிர்ப்பு நட­வ­டிக்­கைகள் மேற்­கொள்­ளப்­ப­டலாம் என்றும் அவ்­வா­றான அதா­வது பொது நட­வ­டிக்­கை­க­ளுக்கு எதி­ரான எத்­த­கைய செயற்­பா­டு­க­ளுக்கும் இட­ம­ளிக்க வேண்டாம் என அர­சாங்கம் பொலி­ஸாரை அறி­வு­றுத்­தி­யி­ருப்­ப­தா­கவும் தெரி­ய­வந்­துள்­ளது.

இதே­வேளை  பாரா­ளு­மன்­றத்தை மே மாதம் ஐந்தாம் திகதி கலைத்து விடு­வ­தற்கும் அதன் பின்னர் பொதுத் தேர்­த­லுக்கு செல்­வ­தற்கும் அர­சாங்கம் தீர்­மா­னித்­தி­ருப்­ப­தாக நம்­ப­க­ர­மாக தெரி­ய­வந்­துள்­ளது. இது தொடர்பில் நேற்று புதன்­கி­ழமை இரவு அல­ரி­மா­ளி­கையில் கலந்­து­ரை­யா­டப்­பட்­ட­தா­கவும் கூறப்­ப­டு­கி­றது.

ஏற்­க­னவே குற்­றச்­சாட்­டுக்கள் முன்­வைக்­கப்­பட்­டுள்ள ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­ன­ணியைச் சேர்ந்த இரு­வர் இன்றும் நாளையும் கைது­செய்­யப்­ப­ட­வுள்­ள­தாக கூறப்­ப­டு­கி­றது.

அல­ரி­மா­ளி­கையில் நேற்று மாலை இடம்­பெற்ற ஆளும் கட்­சியைச் சேர்ந்த முக்­கிஸ்­தர்­களின் கலந்­து­ரை­யாடல் ஒன்­றின்­போது மேற்­கண்ட தக­வல்கள் பரி­மா­றப்­பட்­டி­ருப்­ப­தாக கூறப்படுகிறது. அத்துடன் புதிய தேர்தல் முறையில் அல்லாது பழைய முறைமையிலேயே பாராளுமன்றத் தேர் தலை நடத்துவது தொடர்பிலும் இங்கு கலந்துரை யாடப்பட்டுள்ளது.

No comments

Powered by Blogger.