Header Ads



ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரம் நடாத்தும், மாபெரும் பரிசுப் போட்டிகள்

ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரம் தனது 20ஆவது ஆண்டு பூர்த்தியை முன்னிட்டு தேசிய ரீதியில் மாபெரும் பரிசுப் போட்டிகளை நடாத்துவதற்கு திட்டமிட்டுள்ளது. தமிழ் மொழி மூலம் நடைபெறும் இப்போட்டிகள் பாடசாலை மாணவர்கள், அரபுக் கல்லூரிகள், திறந்த போட்டியாளர்கள் மற்றும் மீடியா போரம் அங்கத்தவர்கள் என பல பிரிவுகளாக நடாத்தப்படுகின்றன.

போட்டியில் கலந்துகொள்ள விரும்புவர்கள் தங்களுடைய ஆக்கங்களை Sri Lanka Muslim Media Forum, K.G. 7, Elwitigala Flats, Elwitigala Mawatha, Colombo 08 எனும் முகவரிக்கு ஜூன் 15ஆம் திகதிக்கு முன்னர் கிடைக்கக்கூடியதாக அனுப்பிவைக்கவும்.

போட்டி நிபந்தனைகள்:

* நாடளாவிய ரீதியில் சகல பாடசாலைகளும் இப்போட்டிகளில் பங்குபற்ற முடியும்.
* 10,11,12,13 ஆகிய தரங்களில் கல்வி பயிலும் மாணவ, மாணவிகள் மாத்திரமே பாடசாலை சார்பாக பங்குபற்ற முடியும்.
* பாடசாலை மற்றும் அரபுக் கல்லூரி மாணவர்கள் தங்களது ஆக்கங்களை அதிபரின் உறுதிப்படுத்தலுடன் சுயவிபரங்களை ஆங்கிலத்தில் குறிப்பிட்டு அனுப்ப @வண்டும்.
* திறந்த போட்டியாளர்கள் தங்களது முழுப்பெயர், முகவரி, தேசிய அடையாள அட்டை இலக்கம், மின்னஞ்சல் மற்றும் தொலைபேசி இலக்கம் போன்றவற்றை ஆங்கிலத்தில் குறிப்பிட்டு அனுப்பவேண்டும்.
* ஓவியங்கள் A3 தாளிலும் ஏனைய ஆக்கங்கள் A4 தாளில் ஒரு பக்கத்தில் மாத்திரம் இருக்கவேண்டும்.
* குறும்படங்களை இறுவட்டில் (CD/ DVD) பதிவுசெய்து தபால் மூலம் அனுப்பவேண்டும்.
* போட்டிகளில் ஆறுதல் பரிசுபெறும் 10 பேருக்கு பெறுமதிமிக்க சான்றிதழ் வழங்கப்படும்
* பங்குபற்றும் போட்டிப் பிரிவுகளை கடித உறையின் இடதுபக்க மேல்மூலையில் குறிப்பிடவும்.
* ஒருவர் ஒரு ஆக்கத்தை மாத்திரமே அனுப்ப முடியும்.
* போட்டி முடிவுத்திகதி: 15.06.2015

01. கட்டுரைப் போட்டி (பாடசாலைகள் மாத்திரம்)
- பாடசாலை மாணவர்கள் மாத்திரம்
- தலைப்பு: இன நல்லுறவைக் கட்டியெழுப்புவதில் ஊடகங்களின் பங்கு
- 1200 சொற்களுக்குள் இருத்தல் வேண்டும்
● முதலாம் பரிசு - 15,000 ரூபா
● இரண்டாம் பரிசு - 10,000 ரூபா
● மூன்றாம் பரிசு - 5,000 ரூபா

02. கட்டுரைப் போட்டி (திறந்த பிரிவு)
- சகலரும் பங்குபற்றலாம்
- தலைப்பு: தேசத்தைக் கட்டியெழுப்புவதில் ஊடகங்களின் பங்கு
- 2000 சொற்களுக்குள் இருத்தல் வேண்டும்
● முதலாம் பரிசு - 25,000 ரூபா
● இரண்டாம் பரிசு - 15,000 ரூபா
● மூன்றாம் பரிசு - 10,000 ரூபா

03. கையெழுத்து சஞ்சிகை
- அரபுக் கல்லூரிகள் மாத்திரம்
- தலைப்பு: விரும்பும் பெயரை வைக்கலாம்
- ஒரு கல்லூரி ஒன்றை மாத்திரமே அனுப்பமுடியும்
- A4 அளவுள்ள தாளில் 36 பக்கங்களில் எழுதப்பட வேண்டும்
● முதலாம் பரிசு - 20,000 ரூபா
● இரண்டாம் பரிசு - 15,000 ரூபா
● மூன்றாம் பரிசு - 10,000 ரூபா

04. ஓவியப் போட்டி
- பாடசாலை மாணவர்கள் மாத்திரம்
- தலைப்பு: இன நல்லுறவு
- A3 அளவுள்ள தாளில் வரையப்பட வேண்டும்
- விரும்பிய வர்ணங்களைப் பயன்படுத்தலாம்
● முதலாம் பரிசு - 15,000 ரூபா
● இரண்டாம் பரிசு - 10,000 ரூபா
● மூன்றாம் பரிசு - 5,000 ரூபா

05. குறும்படம் தயாரித்தல்
- சகலரும் பங்குபற்றலாம்
- தலைப்பு: இன நல்லுறவு
- 1 தொடக்கம் 3 நிமிடங்களுக்குள் இருக்கவேண்டும்
- இறுவட்டில் (CD/ DVD) பதிவுசெய்து அனுப்பவேண்டும்
● முதலாம் பரிசு - 50,000 ரூபா
● இரண்டாம் பரிசு - 30,000 ரூபா
● மூன்றாம் பரிசு - 20,000 ரூபா

06. விவரணக் கட்டுரை
- முஸ்லிம் மீடியா போரம் அங்கத்தவர்கள் மாத்திரம்
- தலைப்பு: தங்களது மாவட்டத்தில் மக்கள் எதிர்நோக்கும் ஏதாவதொரு பிரச்சினை
- 1500 சொற்களுக்குள் இருக்கவேண்டும்
● முதலாம் பரிசு - LAPTOP
● இரண்டாம் பரிசு - DIGITAL CAMERA
● மூன்றாம் பரிசு - ANDROID TAB

மேலதிக விபரங்களைப் பெற்றுக்கொள்ள விரும்புவோர் muslimmediaforum@gmail.com எனும் மின்னஞ்சல் முகவரியுடன் தொடர்புகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

Sri Lanka Muslim Media Forum
A3-1/1, Manning Town Flats
Elvitigala Mawatha
Colombo 8, Sri Lanka
Tel: 0112 688 293
Facebook: https://www.facebook.com/SriLankaMuslimMediaForum
Twitter: https://twitter.com/SLMMediaF
Website: www.slmmf.org 

1 comment:

  1. ஸ்ரீ லங்கா முஸ்லிம் மீடியா போரம் தன்னார்வ/ சமூக ஊடக ஊடகவியலாளர் களுக்கான கருத்தரங்கை நடத்துவதாக சில மாதங்களுக்கு முன்னர் அறிவித்து இருந்தது, எனினும் குறித்த நிகழ்வு நடைபெறாமலேயே போனமையை இங்கே சுட்டிக் காட்ட விரும்புகின்றேன்.

    ReplyDelete

Powered by Blogger.