Header Ads



முடக்கப்பட்ட 'முசலி மக்கள் பாராளுமன்றம்'

பகுதி - 1 

அண்மையில் முகநூல் வாயிலாக முசலி பாராளுமன்றம் தொடர்பான பதிவுகளைக் காண  முடிந்தது. பதிவின் உண்மைத் தன்மையும் கூறப்பட்ட விடயங்களும் முசலி மக்களால் குறிப்பாக மண் வாசனை உள்ள இளைஜர்களால் கூர்ந்து ஆராயப்பட வேண்டும்.

25 ஆண்டுகால இடப்பெயர்வின் இன்னல்களை அனுபவித்து, தாம் பிறந்த மண்ணில் தலை நிமிர்ந்து வாழ வேண்டும் என எம் மக்கள் நினைத்ததில் எந்த தவறும் இல்லை. 

மீள் குடியேற நினைத்தவர்கள் மண் வாசனை கொண்ட ஒரு கூட்டமே தவிர, அம் மண்ணிலே பிறந்த அனைத்து உள்ளங்களுமல்ல. ஏனெனில்  குபேரன் கூலித் தொழிலாளி ஆனதும், குண்டூசி விற்றவர்கள் கோடீஸ்வரர்கள் ஆனதும் இடம் பெயர்ந்து சென்ற பின்னர் என்பதை இங்கே குறிப்பிட விரும்புகிறேன். இருப்பினும் மீள் குடியேற நினைத்தவர்கள் மண் வாசனை உள்ள மனிதர்களே. இதில் வியாபாரிகள்,  ஏச்சு பிழைக்கும் கூட்டத்தினர், அரசியல்வாதிகள், அவர்களை அண்டிப் பிழைக்கும் கூட்டத்தினர் இவர்களை நாம் இந்த மண்வாசனை கொண்ட பிரிவினரோடு சேர்க்க முடியாது. ஏனென்றால் இந்த பதிவின் வில்லன்களே அவர்கள்தான்.

விடயத்திற்கு வருவோம்,,,

பிறந்த மண்ணைவிட்டு வெளியேறும்போது 10 தொடக்கம் 15 வயது கொண்ட பிரிவினரே மீண்டும் தாய்மண் திரும்புகையில் பண்புள்ள படித்த பட்டதாரிகளாக, அனுபமுள்ள நல்ல அறிஜர்களாக, துடிப்புள்ள இளைஜர்களாக எம் மண்ணுக்கு மகத்துவம் சேர்க்க வேண்டும் என்று  தம்மை தயார்படுத்தினர். குறிப்பாக மண்வாசனை  கொண்ட ஒரு சமூகம் என்றால் இந்த குறிப்பிட்ட குழுவையே நிச்சயமாக கூறலாம். 

ஏனெனில், இளைஜர்களாக வெளியேறியவர்கள் தங்களது 25ஆண்டுகால வாழ்க்கையை புகுந்த மண்ணிலே கஷ்டத்துடனும், நஷ்டத்துடனும் வாழ்ந்து கழித்துவிட்டு, தற்பொழுது அவர்களுக்கு கிடைக்கும் அரச அரசசார்பற்ற உதவிகளை மட்டும் நாடி வாழ்பவர்களாக தங்கள் வாழ்க்கையை கழிக்க விரும்புகின்றனர். 

இவர்கள் எமது மண்ணின் பெருமையை தங்கள் பிள்ளைகளிடம் வளர்க்காது குடும்ப பெருமையினை வளர்த்துக் கொண்டிருப்பவர்கள். இவர்களை தவிர்த்து தற்பொழுது 25வயதுக்கு உட்பட்ட பெரும்பான்மையான இளைசர்கள், புகுந்த மண்ணிலே பிறந்து புதிய கோணத்தில் தங்களது சிந்தனைகளை சிறகடித்து, எம் மண்ணுக்கு எது பொருத்தம் எது பொருத்தமில்லை என்பதை உணராது, கண் மூடித்தனமாக அரசியல்வாதிகளின் கைப்பிடிக்குள் முடங்கி கிடக்கும்  மண் வாசனையே இல்லாதவர்கள். இவர்களையும்   இப்படியே விட்டுவிட்டு விடயத்துக்குள் நுழைவோம். 

முசலி மக்கள் பாராளுமன்றம் மகத்தான ஒரு ஆரம்பம். முசலி மண்ணின் அனைத்து கிராமங்களிலும் உள்ள பல்துறை சார்ந்த விற்பன்னர்கள் சேர்ந்து உருவாக்கிய மன்றம். இங்கே பல விடயங்கள் நல்ல எண்ணங்கள் கருத்துகள் வாயிலாக, எம் மண்ணிலே கல்வி கலாச்சாரம், மீள் குடியேற்றம், அரசியல் இஸ்திரம், எம் மண்ணின் தனித்தன்மை பாதுகாக்கப்பட வேண்டும் என்ற உன்னத இலட்சியத்தோடு பலபேரின் உழைப்பில் நம்பிக்கையில் உருவாக்கப்பட்டது. பல ஒன்று கூடல்கள், கருத்து பரிமாற்றங்கள், செயத் திட்ட அறிக்கைகள், மக்களின் அடிப்படைத் தேவைக்கான வேலைத் திட்டங்கள் என்பன கலந்துரையாடப்பட்டன.

இதன் அதிசூர குறுகிய கால வளர்ச்சி ஏன் அதிவேகமாக அழிக்கப்பட்டது..?

இது சம்மந்தமாக ஏன் முசலி மக்கள் மத்தியில் கேள்விகள் எழுப்பப்படவில்லை..?

இதன் அதி வேக வீழ்ச்சி ஏன் ஆராயப்படவில்லை???

பல்துறை சார்ந்த விற்பன்னர்கள் கூடிய களம் இடம் தெரியாமல் போனதன் சூட்சுமம் என்ன...?

இவ்வாறான கேள்விகளுக்கு முசலி மக்கள் பாராளுமன்றத்தை சேர்ந்தவர்கள் இன்னும் மௌனம் காக்காது உண்மைகளை வெளியே கூறும் வேளை இது. இது சம்மந்தமாக தெரிந்தவர்கள் உங்களது கருத்துக்களை இங்கே பரிமாறுங்கள்..!

உண்மை உறங்குவதில் உடன்பாடு வேண்டாம்.

உண்மையை எதிர் பார்க்கும் உங்கள் சகோ..! அரபாத் காசிம்.

No comments

Powered by Blogger.