Header Ads



கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரியின், அதிபராகக் கடமையாற்றிய நவாஸ் ஓய்வு

(நளீம் லதீப்)

கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரியின் அதிபராகக் கடமையாற்றிய எம்.எச் நவாஸ் அவர்கள் சேவையிலிருந்து இன்று ஓய்வு பெற்றார்.

மூதூரைப் பிறப்பிடமாகவும் கல்முனையை வசிப்பிடமாகவும் கொண்ட அதிபர் எம்.எச் நவாஸ் அவர்கள் தனது ஆரம்பக்கல்வியை மூதூர் மத்திய கல்லூரியிலும் உயர்தரக்கல்வியை வந்தாறுமூலை மத்திய கல்லூரியிலும் கற்றார்.

அட்டாளைச்சேனை ஆசிரிய கல்விக் கல்லூரியில் விஞ்ஞான பயிற்சி ஆசிரியராக வெளியேறிய எம்.எச் நவாஸ் அவர்கள் முதல் நியமனமாக மூதூர் பெரிய பாலம் GMMS இல் விஞ்ஞான ஆசிரியராக கடமையாற்றினார்.

அதன் பின்னர் 5 வருடங்களாக மருதமுனை அல்-மனார் மத்திய கல்லூரியிலும்,
கல்முனை ஸாஹிரா தேசியக்கல்லூரியில் சுமார் 13 வருடங்களும் சேவையாற்றியுள்ளார்.

அதன் பின்னர் 2004 தொடக்கம் 2009 வரை கல்முனை அல்பஹ்றியா மகா வித்தியாலயத்தில் பிரதி அதிபராகக் கடமையாற்றிய எம்.எச் நவாஸ் அவர்கள் அதே பாடசாலையின் அதிபராக 2009 தொடக்கம் 2012 வரை கடமையாற்றினார்.

அதன் பின்னர் 2013 தொடக்கம் 2015 ஏப்ரல் 24 வரை கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரியில் அதிபராகக் கடையாற்றி இன்று ஓய்வுபெறுகிறார்.

இவருடைய காலகட்டத்தில் க.பொ.த. சாதா­ர­ண­தரப் பரீட்சைப் பெறு­பேற்­றி­ன் அ­டிப்­ப­டையில் கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரியில் 11 மாணவர்கள் 9 பாடங்­க­ளிலும் ஏ சித்தி பெற்று அம்பாறை மாவட்டத்தில் சாதனை படைத்­துள்­ளனர்.
மற்றும்
19 மாணவிகள் 8 ஏ யும்,
14 மாணவிகள் 07 ஏ யும்,
12 மாணவிகள் 6 ஏ யும்,
11 மாணவிகள் 5 ஏ யும் பெற்றுள்ளனர்.

பரீட்சைக்குத்தோற்றிய 233 மாணவர்களில் 216 பேர் சித்தியடைந்துள்ளனர்.

மற்றும் அதிபர் எம்.எச் நவாஸ் அவர்கள் சாரணியத்தில் 1994 ம் ஆண்டு தருசின்னம் பெற்றவர்.

உதைபந்தாட்டத்தில் சிறந்து விளங்கும் அதிபர் எம்.எச் நவாஸ் கல்விச் செயற்பாடுகளுக் கப்பால் சென் ஜோன் அம்பியூலன்ஸ் சேர்விஸ்- சுப்ரின்டன் வழிநடத்தல்களினையும் வெற்றிகரமாகச் செய்து முடித்துள்ளார்.

2012 இல் தேசிய கல்வி நிறுவனத்தில் கல்வி முதுமானிப் பட்டம் பெற்ற இவருக்கு அன்மையில் பட்டமளிப்பு விழாவும் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.