Header Ads



உலகையே வியப்பில் ஆழ்த்திய, புருனேய் நாட்டு மன்னருடைய, மகனின் தங்கத் திருமணம்

புருனேய் (Brunei) நாட்டு மன்னர் தனது மகனின் திருமணத்தை தங்கத்தால் இழைக்கப்பட்ட அரண்மனையில், ஆடம்பரமாக நடத்தி உலகையே வியப்பில் ஆழ்த்தியுள்ளார். உலக பணக்கார குடும்பங்களில் ஒன்றான புருனேய் நாட்டு மன்னர், தனது 6 வது மகனான அப்துல் மாலிக் (Abdul Malik-31) என்பவருக்கு திருமணம் நிச்சயத்திருந்தார்.

இதனை தொடர்ந்து நேற்று புருனேய் தலைநகரில் உள்ள Istana Nural Iman அரண்மனையில்,உலகமே வியக்கும் வகையில் ஆடம்பரமாக இந்த திருமணம் நடந்துள்ளது. தங்கத்தால் இழைக்கப்பட்ட அரண்மனையின் மையத்தில் வைக்கப்பட்டிருந்த விசேஷ நாற்காலிகளை நோக்கி மணமக்கள் நடந்து வருகின்றனர்.

மணமக்கள் இருவரும் அணிந்திருந்த திருமண ஆடைகள், அங்கு கூடியிருந்த அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது. தங்க ஆபரணங்களால் இளவரசரின் ஆடைகள் வடிவமைக்கப்பட்டிருந்தன. மேலும் வைரம், வைடூரியம், ரத்தின கற்கல், உள்ளிட்ட விலைமதிப்பற்ற ஆபரணங்களுடன் மணமகளான Haji Bolkiah(22) அரங்கிற்குள் வந்தார்.

மணமகள் அணிந்திருந்த வைரத்தால் செதுக்கப்பட்ட காலணிகள், காதணிகள் மற்றும் தங்க கொலுசுகள், விருந்தினர்களின் மனதை கொள்ளை அடிக்கும் விதமாக இருந்தது. இந்த திருமணத்தை அந்நாட்டு மன்னரான Hassanal Bolkiah, தனது மதச்சடங்குகளை உரிய முறையில் பின்பற்றி நடத்தி வைத்தார்.

இதில் மலேசிய நாட்டை சேர்ந்த அமைச்சர்கள், அரேபிய நாட்டு ஆளுனர் உள்ளிட்ட உலக முக்கிய தலைவர்கள் மற்றும் பணக்காரர்கள் பங்கேற்றனர்.

மேலும் அரண்மனையில் உள்ள சுமார் 1788 அறைகளும் தங்கத்தால் இழைக்கப்பட்டு விருந்தினர்களுக்கு தங்குவதற்காக வசதி செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

2 comments:

  1. 'வீண் விரயம் செய்வோர் ஷைத்தானின் சகோதரர்கள்' (அல்குர்ஆன்) உலகிலேயே இவர்கள் சுவன வாழ்வை அனுபவிக்க நினைக்கின்றனரா? ஒவ்வொரு மனிதனிடமும் மறுமையில் நான்கு வினாக்கள் கேட்கப்படும், அவற்றுக்கு பதில் கூறாமல் நகரமுடியாது, அவற்றுள் ஒன்று ''நீ எவ்வழியில் சம்பாதித்தாய்? எவ்வழியில் செலவு செய்தாய்?'' என்பதாகும். விபரீதம் தெரியாது இன்று பலர் சுகபோக எல்லையற்ற ஆடம்பர வாழ்க்கை வாழ்ந்து மகிழ்கின்றனர். ''இவ்வுலக வாழ்க்கை ஏமாற்றத்தை அன்றி வேறெதுவும் இல்லை'' (அல்குர்ஆன்)

    ReplyDelete
  2. unnungal paruhungal veenvirayam seiyaatheerhal.....

    ReplyDelete

Powered by Blogger.