Header Ads



80 குடும்பங்களை சேர்ந்த 200 பேர், நேற்று இஸ்லாத்தை ஏற்றனர் - ஊர் எல்லைக்கு 'சீல்' வைத்த போலீசின் திட்டம் தூள் தூள்

-Fahad Ahmed PM-

தடையை மீறி இஸ்லாத்தை ஏற்ற 'வால்மீகி' மக்கள் !

ஊர் எல்லைக்கு 'சீல்' வைத்த போலீசின் திட்டம் தூள் தூள் !

ராம்பூரின் அனைத்து எல்லைகளுக்கும் 'சீல்' வைத்து போலீஸ் கட்டுப்பாட்டில் சுற்றிவளைக்கப்பட்ட நிலையிலும், தடைகளை தகர்த்தெறிந்து 'வால்மீகி' கிராம மக்கள் இஸ்லாத்தை ஏற்றனர்.

தங்கள் குடியிருப்புக்களை ஊரைவிட்டு அப்புறப்படுத்தும் நகராட்சி நிர்வாகத்தை கண்டித்தும், தீண்டாமை கொடுமையிலிருந்து விடுதலை பெறும் நோக்கத்தில், ஒட்டுமொத்த 'வால்மீகி' கிராம மக்களும் இஸ்லாத்தை ஏற்பதாக அறிவிப்பு செய்ததால்பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

உத்தரப்பிரதேச மாநிலம், ராம்பூர்-வால்மீகி கிராமத்தை சேர்ந்த 80 குடும்பங்களை சேர்ந்த 200 பேர், நேற்றைய தினம் (ஏப்ரல் 14), இஸ்லாத்தை ஏற்பதாக அறிவிப்பு செய்ததையடுத்து, ஊர் முழுவதையும் போலீஸ் சுற்றிவளைத்துக்கொண்டது.

வெளிநபர்கள் எவரும் ஊருக்குள் நுழைந்துவிடாதபடி அனைத்து வழிகளுக்கும் 'சீல்' வைக்கப்பட்டதால், மேற்படி மக்களுக்கு இஸ்லாத்தை அறிமுகப்படுத்தி வழிக்காட்ட முஸ்லிம் எவரும் வராததால், வெள்ளை தொப்பிகளை அணிந்து, தாங்கள் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டதாக தாங்களாகவே அறிவித்தனர் வால்மீகி மக்கள்.

எங்களை கண்ணியமாக வாழவிடாமலும், சமத்துவ மார்கமான இஸ்லாத்தை ஏற்கவிடாமலும் தடுக்கும் அரசு நிர்வாகத்தின் அச்சுறுத்தல் காரணமாக நாங்கள் அனைவரும் தற்கொலை செய்துக் கொள்வோம் என்று ஜனாதிபதிக்கு கடிதம் எழுதியுள்ளனர், வால்மீகி தலித் மக்கள்.

நன்றி: மறுப்பு தளம்.

3 comments:

  1. May Allah Bless them for accepting the ONE and ONLY True religion which purely direct worship to one and only TRUE GOD.

    But please let them know that, Committing suicide is a big sin in this religion. too.

    ReplyDelete

Powered by Blogger.