Header Ads



ஒரு வாக்கு போட்டால் 75 இலட்சம் ரூபாய்..!

-நஜீப் பின் கபூர்-

எந்த நாட்டில் இந்த கதை என்று மூக்கில் விரல் வைக்கின்றீர்களா? அப்படி ஒன்றும் பெரிதாக இந்த நாட்டைத் தேடிப்பிடிக்க நீங்கள் சிரமப்பட வேண்டியதில்லை. நாடு நம்ம நாடுதான்.

தற்போது கதிர்காம புனித ஸ்தானத்தை நிருவகிப்பதற்கான நிருவாகியைத் தெரிவு செய்வதற்காக அதாவது கதிர்காம தியவட (பொறுப்பாளர்) நிலமையைத் தெரிவு செய்வதற்கான தேர்தல் நடக்கின்றது. வருகின்ற 28ம் திகதி அதாவது  நாளை இந்நத் தேர்தல் நடக்க இருக்கின்றது.

இதில் போட்டியிடுகின்றவர்கள் தற்போது தமது  விரட்டி அவர்களின் பின்னால் ஓடிக் கொண்டிருக்கின்றார்கள். இந்தத் தேர்தலில் வாக்குரிமையுள்ளவர்களின் எண்ணிக்கை 17 பேர்.
மொனராகலை மாவட்டத்திலுள்ள பிரதேச செயலாளர்கள் இதில் வாக்களிக்கும் உரிமையைப் பெற்றிருக்கின்றார்கள். அதன்படி 11 வாக்குகள்.

பிரதேசத்திலுள்ள முக்கிய பௌத்த விகாரைகளின் பீடாதிபதில்கள் 5பேருக்கும் வாக்குரிமை இருக்கின்றது. அத்துடன் தற்போது பதில் கடமை புரிகின்ற தியவட நிலமைக்கு இதில் வாக்குறிமை இருக்கின்றது. அப்படியாகவுள்ள மொத்த 17 வாக்குகளைக் கொள்ளையடிக்க தற்போது பண மழை அங்கு பொழிய ஆரம்பித்திருக்கின்றது.

வேட்பாளராக களத்தில் இருக்கும் ஒரு வேட்பாளர் ஒரு வாக்கைப் பெற 75 இலட்சம் வழங்க இருப்பதாகவும் மற்றுமொரு வேட்பாளர் 40 இலட்சம் ரூபாய் வரை வழங்க இருப்பதாகவும் ஊடகங்களில் பகிரங்கமாக பேசப்படுகின்றது.

எனவே அப்படியானால் கதிர்காமப் புனித ஸ்தானத்தின் வருவாய் என்னவாக இருக்க வேண்டும் என்று யோசித்துக் கொள்ள முடியும்! கடந்த முறை தமக்குத் தேவையான விதத்தில் சட்டங்களை இயற்றிக் கொண்டு தற்போதய சபாநாயகரின் மகன் சசிந்திர ராஜபக்ஷ இந்தப் பதவிக்குக் கொண்டுவரப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.