Header Ads



19 தொடர்பில் புதிய சிக்கல் - இருமுறைகள் மைத்திரியும், ரணிலும் கலந்துரையாடினர், எதிர்கட்சியின் ஒத்துழைப்பு கிடைக்காது போகும் நிலை

19 வது அரசியல் அமைப்பு சீர்திருத்தத்தை நிறைவேற்றிக் கொள்வதற்காக எதிர்கட்சியின் ஒத்துழைப்பு கிடைக்காது போகும் நிலைமை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எதிர்கட்சியினர் அரசாங்கத்திடம் முன் வைத்த 8 யோசனைகளை அடுத்தே இந்த நிலமை ஏற்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

குறித்த யோசனையின் சிலவற்றிற்கு ஆளுந்தரப்பில் உரிய இணக்கப்பாடு ஏற்படவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த யோசனைகளில் அரசியல் யாப்பு சபையின் உறுப்பினர்களால் நாடாளுமன்ற உறுப்பினர்கள் நியமிக்கப்பட வேண்டும் என்ற யோசனை உள்ளடக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

19வது அரசியல் அமைப்பு சீர்திருந்தம் தொடர்பான விவாதங்கள் நாடாளுமன்றத்தில் இடம்பெற்று வரும் சந்தர்ப்பத்தில், இரு முறைகள் கட்சித் தலைவர்களின் கூட்டம் இடம்பெற்றன.

இதில் ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோர் கலந்து கொண்டிருந்ததாக hfm செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக நாடாளுமன்றில் கருத்து வெளியிட்ட முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச எதிர்கட்சி முன்வைத்த யோசனையை அரசாங்கம் ஏற்றுக்கொள்ள வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

இந்த யோசனையை முன்வைத்த நாடாளுமன்ற உறுப்பினர் ஜி.எல். பீரிசிடம் இது தொடர்பாக வினவியது.

இதற்கு பதிலளித்த அவர் குறித்த யோசனைகள் தொடர்பில் அரசாங்கம் தற்சமயம் ஆராய்ந்து வருவதாக குறிப்பிட்டார்.  

2 comments:

  1. Entire peoples of Sri Lanka who expect a good nation support this

    ReplyDelete
  2. Amendment of 19th has decide by general publics if our against politicians doesn't like the power of parliemtariens system.

    ReplyDelete

Powered by Blogger.