Header Ads



சிங்களவர்கள் மஹிந்தவை ஆதரித்தாலும், நாம் ஆதரிக்க முடியாது - அமைச்சர் பௌசி


-அஸ்ரப் ஏ சமத்-

ஸ்ரீ.லங்கா சுதந்திரக் கட்சியின் முஸ்லீம் பிரிவின் நாடுமுழுவதிலும் 55 க்கும் மேற்பட்ட உள்ளுராட்சி சபைகளின் தலைவர்கள் நகர பிரதேச சபை உறுப்பிணர்கள்   இன்று அமைச்சர் ஏ.எச்.எம். பௌசி தலைமையில் அமைச்சரின் இல்லத்தில் கூட்டமொன்றை இன்று காலை நடைபெற்றது. 

இக் கூட்டத்தினபோது ஸ்ரீ.ல.சுதந்திரக் கட்சியின் தற்காலிக சபையொன்று தேர்ந்தெடுக்கப்பட்டது. இச் சபைக்கு தலைவராக அணர்த்த முகாமைத்துவ அமைச்சர் ஏ.எச்.பௌசி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இணைச் செயலாளராக சம்மாந்துறை பிரதேச சபைத் தலைவர் நௌசாட் மஜீட், புத்தளம் நகர சபைத ;தலைவர் கே.பாயிசும், உப தலைவராக வத்தளை நகர சபைத் தலைவர் நௌசாத், பொருளாளர்களாக அப்துல் சத்தார், மாத்தளை மாநகர சபைத் தலைவர் ஹில்மியும் தெரிவுசெய்ய்பட்டனர். 15  மாவட்டங்களிலிருந்து ஒவ்வௌhரு அமைப்பாளர்களும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

இக் கூட்டத்தில் அமைச்சர் பௌசி கருத்து தெரிவிக்கையில், 

கடந்த கால தேர்தலின் போது நாம் உச்சகட்ட நிலையில் நாம் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுக்கு  வெற்றிக்காக பாடுபட்டோம். ஆனால் தற்பொழுது  இக் கட்சியின் தலைவராக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் நாம் எதிர்காலத்தில் பொதுத் தேர்தல் , உள்ளுராட்சி தேர்தல்களின்போது ஸ்ரீ.ல.சுதந்திரக் கட்சியின் முஸ்லீம் பிரிவை மீள கட்டியெழுப்பல் வேண்டும். 

அதனுடாக நாம் இக் கட்சியின் தலைவர் மைத்திரிபால சிறிசேனாவின் தலைமையில் ஏனைய கட்சிகளை விட நாம் சக்திமிக்க ஒரு மக்கள் சக்தியாக திகழ வேண்டும். என வேண்டிக் கொண்டார். பெரும்பாண்மை மக்கள் மகிந்த ராஜபக்சவை எதிர்காலத்தில் ஆதரித்தாலும் நாம் ஒருபோதும் ஆதரிக்க முடியாது. அவர் அவசரப்படாமல் அவருக்குரிய 2 வருடத்தில் அவர் ஜனாதிபதியாக இருந்திருந்தால் நமது ஸ்ரீ.ல.சுதந்திரக் கடசியின் முஸ்லீம் பிரிவு இன்னும் பலம்பொருந்தியிருக்கும். மகிந்தவின் காலம் முடிந்து விட்டது எனவும் அமைச்சர் பௌசி கருத்து தெரிவித்தார்.

இந் நிகழ்வில் சகல மக்கள் பிரதிநிதிகளும் தமது பிரதேச பிரச்சினைகளை முன்வைத்தனர். ஏனைய கட்சிகளான முஸ்லீம் காங்கிரஸ், ஜ.தே.கட்சி, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஆகிய கட்சிகள் இந்த அரசாங்கத்தில் பாரிய அதிகாரத்தைக் கொண்டது. அத்துடன் அவர்களது சக்தியைவிட எமது சக்தி இந்த ஜனாதிபதித் தேர்தலில் 90 வீதம் மைத்திரிபால சிறிசேனாவுக்கே வாக்களித்தனர். 

மீண்டும் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தேர்தலில் போட்டியிட்டால் ஒரு போதும்  முஸ்லீம்களுக்கு அவருக்கு வாக்களிக்க மாட்டார்கள். ஆனால் பெரும்பாண்மை மக்கள் மகிந்த ராஜபக்சவுக்கு எமது வாக்குகள் உண்டு அதே அந்தந்த பிரநிதிகளும் இதனையே சொல்லுகின்றனர்.  இந் நிலையில் நாம் சிறந்து செயல்பட்டால் புத்தளம், கொழும்பு, குருநாகல் கண்டி போன்ற பிரதேசங்கள் எமது கட்சி ஊடாக பிரநிதிகளை தேர்ந்தெடுப்பதற்கு அமைச்சர் பௌசி தலைமையில் நாம் ஒன்றுபட்டு செயல்படுவோம் எனவும் தெரிவித்தனர்.

4 comments:

  1. மஹிந்தவின் மீதி இரண்டு வருடங்களும் இருந்திருந்தால் கட்சியின் முஸ்லிம் பிரிவு பலம் பெற்றிருக்குமாம் பௌசிக்கி நக்கின ருசி இன்னும் நாவுல வற்றல்ல போல இனியும் மஹிந்தவை ஆதரிக்க கூடாதாம் அவ்வளவு முஸ்லிம்களுடன் துவேசம் காட்டிய அரசாங்கத்தில் இருந்துகொன்டு முஸ்லிம்களின் பிரச்சினைகளை அந்நியர்களுக்கு மறைத்திருக்க வேண்டிய சந்தர்பத்தில் ஹஜ் ஏற்பாட்டு குளு தலைமை பதவிக்காக சண்டையிட்ட இவர்கள் மற்றும் தம்புள்ள பள்ளியில் குண்டு வெடித்த போது பட்டாசு தான் வெடித்தது என்று கூறிய மானங்கெட்ட இவர்கள் (பட்டாசு வெடிக்கும் இடமா பள்ளிவாசல்.இவரது வீட்டுக்குள் யாராவது வெடித்திருந்தால் சும்மாவா இருந்திருப்பார்)இன்னமும் கூட்டம் போட்டு பேசுறாங்களே இத என்னன்டுதான் சொல்ல.

    ReplyDelete
  2. மானம் கேட்ட நீங்கல்லாம் அரசியல்ல இருப்பதற்க்கு நல்லம் சும்மா இருக்குறது.பள்ளிகள் உடைக்கப்பட்ட பொது எங்கயும் பள்ளிகள் உடைக்கப்பட இல்லண்டு கத்தினீங்க.இப்ப தான் உங்களுக்கு விளங்குதோ மகிந்த கெட்டவன்னு.போங்கடா வேலைய பாத்துக்கொண்டு.
    பல குழுக்களாக பிரிந்து இருக்குறத விட முஸ்லீம் காங்கிரஸ்உடன் இணைந்து செயல் பட முயற்சி செய்யுங்கள்.

    ReplyDelete
  3. Ivenuhalai muslim entru solvethatke vedkamairukku

    ReplyDelete
  4. Be aware they are Mahinda supporters and rejected by our people and also self oppurtunists.

    ReplyDelete

Powered by Blogger.