Header Ads



''ரொட்டி தகரத்தை சூடாக்கி கொடுத்தது, ரொட்டி சுடுவதற்கே அன்றி, தகட்டின் சூட்டில் குளிர் காய்வதற்கு அல்ல'' - மைத்திரிக்கு, சோபித தேரர் எச்சரிக்கை


-gtn-

சமூக நீதிக்கான மக்கள் அமைப்பின் தலைவர் மாதுலுவாவே சோபித தேரர் புதிய அரசாங்கத்திற்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ஜனாதிபதி தேர்தல் காலத்தில் அளிக்கப்பட்ட வாக்குறுதிகள் அனைத்தும் நிறைவேற்றப்படாவிட்டால், பாதக விளைவுகளை எதிர்நோக்க நேரிடும் என அவர் தெரிவித்துள்ளார்.

ரொட்டி தகரத்தை சூடாக்கி கொடுத்தது ரொட்டி சுடுவதற்கே அன்றி , தகட்டின் சூட்டில் குளிர் காய்வதற்கு அல்ல என்பதனை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நினைவில் நிறுத்திக்கொள்ள வேண்டுமென அவர் தெரிவித்துள்ளார்.

தேசிய நிறைவேற்றுப் பேரவையின் அழைப்பாளராக தாம் நியமிக்கப்பட்டுள்ளதாக ஊடகங்களில் அறியக் கிடைத்தாலும் இதுவரையில் எந்தவொரு அமர்விற்கும் எவ்வித அழைப்புக்களுக்கும் கிடைக்கவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.

17ம் திருத்தச் சட்டத்தை மீள அமுல்படுத்தல், நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை ரத்து செய்தல் ஆகியனவே அரசாங்கம் அளித்த முக்கியமான வாக்குறுதிகள் என அவர் தெரிவித்துள்ளார்.

பொதுத் தேர்தல் நடத்தப்படுவதற்கு முன்னதாக இந்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட வேண்டியது அவசியமானது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

1 comment:

  1. திரு. சோபித தேரர் அவர்களே!

    'இதைவிட பொருத்தமாகச் சொல்வதற்கு ஏதும் உள்ளதா' என்று கேட்குமளவுக்கு மிகச்சரியாகக் கூறியிருக்கின்றீர்கள்.

    உங்களது நையாண்டியிலுள்ள மக்களின் ஆதங்கம் ஜனாதிபதிக்கு புரியும் என்று நம்புவோம்.

    ReplyDelete

Powered by Blogger.