Header Ads



அம்மாடியோவ்...?

இங்கிலாந்தின் நியூ ஹேம்ப்ஷயரில் உள்ள மர்லான் மற்றும் லிசா க்ரெனான் தம்பதியர் சக நண்பர்களிடம் தங்களது பிரியத்துக்குரிய செல்ல நாயை அறிமுகப்படுத்துகின்றனர். எனினும், அவர்களது நண்பர்களால் அதை நாய் என்று நம்பவே முடியவில்லை. ஒரு வளர்ந்த குதிரையைப் போல் இருக்கும் பிட்புல் இனத்தை சேர்ந்த பிரம்மாண்டமான அந்த நாய்க்கு என்ன பெயர் வைத்திருக்கிறீர்கள்? என்று நண்பர்கள் திகைப்புடன் கேட்கின்றனர். 

சற்றும் தாமதிக்காமல் “ஹல்க்” என்று மர்லான் கூறுகிறார். “பின்ன இவனுக்கு வேற என்ன பெயர் வைக்க முடியும்?” என்று நாக்கு நுனி வரை வெளிவந்த வார்த்தையை எச்சில் கூட்டி விழுங்கியவாறு மனதுக்குள் சிரிக்கின்றனர் விருந்தினர்கள். தினமும் 2 கிலோ மாட்டிறைச்சியை ‘ஸ்னாக்ஸ்’ ஆக மட்டும் சாப்பிடும் ஹல்க்குக்கு பிரதான உணவாக வேளை தவறாமல் புரோட்டீன் கலந்த உணவு வகைகள் வரிசையாக பிளேட்களில் அணிவகுத்தபடி இருக்கும். 

உலகின் அதிக எடை கொண்ட பிட் புல்லாக நம்ம ஹல்க்தான் வருவான் என்று மர்லான் நண்பர்களிடம் அடித்துக் கூறுகிறார். காரணம் பிறந்து 17 மாதங்களே ஆன ஹல்க்கின் தற்போதைய எடை 80 கிலோ. ஹல்க் இன்னும் வளருவான். இரண்டு கால்களை தூக்கியபடி நிமிர்ந்து நிற்கும் போது தனது எஜமானியை விட உயரமாக இருக்கும் ஹல்க்கை பார்த்தாலே அடி வயிறு கலங்குவதாக அக்கம்பக்கத்தில் இருப்பவர்கள் தெரிவிக்கின்றனர்.

ஆனால் மர்லனோ, “வீட்டில் தனியாக இருக்கும் எனது மூன்று வயதுக்குழந்தை ஜோர்டானுக்கு காவலாக ஹல்க்கை தைரியமாக நம்பி விட்டுப்போவேன். ஹல்க்குக்கு பிடித்தமான விளையாட்டே ஜோர்டானை முதுகில் தூக்கி வைத்துக்கொண்டு வீட்டை ரவுண்ட் அடிப்பதுதான்” என்கிறார். அம்மாடியோவ்...?

No comments

Powered by Blogger.