Header Ads



வடக்கு மாகாண முஸ்லிம் பட்டதாரிகள் அமைப்பிடமிருந்து, முதலமைச்சர் விக்னேஸ்வரனுக்கு..!

வி.விக்னேஸ்வரன்
முதலமைச்சர்
வடக்கு மாகாணம்
முதலமைச்சர் செயலகம்

யாழ்ப்பாணம்

மேதகு முதலமைச்சர் அவர்கட்கு,

வடக்கு மாகாண பட்ட்தாரி ஆசிரியர் நியமன்ம் தொடர்பாக

நீண்டநாட்களாக வடக்கு மாகாண பட்டதாரி ஆசிரியர்கள் நியமனம் தொடர்பாக பல்வேறு எதிர்பார்ப்புகள் இருந்தபோதிலும் கடந்த 2015 மார்ச் 15ம் திகதி பட்டதாரி ஆசிரியர் நியமனங்களுக்கான பொதுத்தேர்வுப் பரீட்சை நடைபெற்றபோது நாம் மிகுந்த நம்பிக்கையுடன் அதனை எதிர்கொண்டோம். 30ற்கும் அதிகமான முஸ்லிம் பட்டதாரிகள் மேற்படி பரீட்சையில் தோற்றியிருந்தார்கள். இருப்பினும் 15 பட்டதாரிகளே அடுத்தகட்ட நேர்முகத் தேர்விற்குத் தகுதிபெற்றிருந்தார்கள். குறித்த 15 முஸ்லிம் பட்ட்தாரிகளும் தாம் நேர்முகப் பரீட்சைக்குத் தோற்றிய சந்தர்ப்பங்களில் ஒரு சில அசௌகரியங்களையும்இ அவநம்பிக்கையினை ஏற்படுத்தும் வார்த்தைப் பிரயோயகங்களையும் எதிர்நோக்கியதாக தெரிவித்திருந்தார்கள். இருப்பினும் இறுதி முடிவுகள் வெளியாகும் வரை எம்மால் எத்தகைய தீர்மானங்களையும் மேற்கொள்வது சாத்தியமானதாக இருக்கவில்லை. 

இப்போது இறுதி முடிவுகள் வெளியிடப்பட்டிருக்கின்றன; ஆசிரியர் நியமனங்களுக்காகத் தெரிவு செய்யப்பட்டுள்ள 248 பட்ட்தாரிகளுள் (2) இரண்டு பட்டதாரிகள் மாத்திரமே முஸ்லிம்கள் என்பதை அறிந்தபோது நாம் நேர்முகத் தேர்வில் எதிர்நோக்கியவைகளின் வெளிப்பாடுகளை எம்மால் உறுதிபடுத்த முடியுமாக இருந்தது. அமைந்திருக்கின்ற வடக்கு மாகாணசபை இனத்துவ முரண்பாடுகள்இ பாகுபாடுகளுக்கு அப்பால் மிகவும் நியாயத்தன்மையுடனும் நேர்மையான அமைப்பிலும் செயற்படுவதாகவே நாம் அறிந்திருக்கின்றோம். அவ்வாறான சூழ்நிலையில் இத்தகைய துர்ப்பாக்கியமான நிலை எப்படி இடம்பெற்றது என்கின்ற கேள்வி எமக்குள் எழுகின்றது.

நேர்முகத் தேர்வு அதிகாரிகளுள் எவருமே முஸ்லிம் அதிகாரிகள் இருக்கவில்லை என்பதும்; ஒரு பொதுவான நியமத்தின் கீழ் நேர்முகப்பரீட்சை இடம்பெறாமல் அதிகாரிகளின் எண்ணங்களின்படியே நேர்முகத்தேர்விற்கான நியமங்கள் தொழிற்பட்டன என்பதும் இவ்விடத்தில் சுட்டிக்காட்டபடவேண்டியதாகும். (நேர்முகத் தேர்வில் அதிகாரிகள் எம்மிடம் கேட்ட கேள்விகள் தெரிவித்த கருத்துகளில் இருந்தே இதனை நாம் அனுமானிக்கின்றோம்) எனவே எமக்கான நேர்முகப்பரீட்சைகள் நியாயமானவையாக இருக்கவில்லை என்பதும்இ எமது நியமனங்களில் இனத்துவ ரீதியான பாகுபாடுகள் காட்டப்பட்டிருக்கின்ற என்பதும் எமது அவதானங்களாக இருக்கின்றன. எனவே நாம் அநீதிக்கு உட்பட்டிருக்கின்றோம் என்பதே எமது நிலைப்பாடாகும்.

ஒரு நீதியரசர் என்கின்றவகையில் எமக்கு உரிய நீதி கிடைக்கும் என்ற நோக்கில் இவ்விடயத்தை உங்களின் கவனத்திற்கு கொண்டுவருகின்றோம். எமது நியமனங்கள் மீள்பரீசிலனைக்கு உட்படுத்தப்படவேண்டும் என்பதோடுஇ வடக்கு மாகாணத்தில் மீளக்குடியேறுகின்ற மக்கள் என்றவகையில் ஆகக்குறைந்தது 5மூ ஒதுக்கீடாவது முஸ்லிம்களுக்கு நியமனங்களின்போது  வழங்கப்படவேண்டும் என்பது எமது வேண்டுகோளாகும். எனவே எமது மிகவும் நியாயமான இக்கோரிக்கையினை உரியமுறையில் பரிசீலித்து நடவடிக்கை எடுக்குமாறும்இ எமக்கு நீதியினைப் பெற்றுத்தருமாறும் மிகவும் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றோம்.

நன்றி
இவ்வண்ணம் 

யு.ர்.ஆ.உஸ்மான்
செயலாளர்
வடக்கு மாகாண முஸ்லிம் பட்ட்தாரிகள் அமைப்பு

1 comment:

Powered by Blogger.