Header Ads



கட்சியை பாதுகாக்க மஹிந்தவுக்கு ஆதரவு, வழங்கவேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது - ரவூப் ஹக்கீம்

இனப்பிரச்சினைக்கு தீர்வு கண்டு நாட்டில் வாழும் சமூகத்தின் மத்தியில் நல்லிணக்கத்தை ஏற்படுத்த கடந்த அரசாங்கம் இதய சுத்தியோடு முயற்சிக்க வில்லையென ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீம், இலங்கை வந்துள்ள ஐ.நா. அரசியல் விவகாரங்களுக்கான உதவிச் செயலாளர் ஜெப்ரி பெல்ட்மனிடம் கூறினார்.

இதேவேளை இனப்பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்காக முன்னாள் ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்ட பாராளுமன்றத் தெரிவுக் குழுவில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் புறக்கணிக்கப்பட்டதாகவும், தெற்கில் இனவாதத்தை கட்டவிழ்த்துவிட்ட பொதுபலசேனாவிற்கு அரசாங்க உயர் மட்ட தரப்பினரிடமிருந்து அனுசரணை கிடைத்ததாகவும் அமைச்சர் ஹக்கீம், பெல்ட்மனிடம் சுட்டிக்காட்டினார்.

உதவிச் செயலாளர் ஜெப்ரி பெல்ட்மன், முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் நகர அபிவிருத்தி நீர் வழங்கல் மற்றும் வடி காலமைப்பு அமைச்சருமான ரவூப் ஹக்கீமை சனிக்கிழமை மாலை அவ ரது இல்லத்தில் வைத்து கலந்துரையாடி னார். சுமார் ஒரு மணித்தியாலங்கள் வரை நீடித்த இந்த சந்திப்பில் கடந்த அர சாங்கத்தின் போக்கு மற்றும் புதிய அர சாங்கம் மீது கொண்டுள்ள நம்பிக்கை ஆகியனக் குறித்து விரிவாக கலந்துரையா டப்பட்டது. மேலும் இனங்களிடையே நல்லிணக்கத்தை ஏற்படுத்த கடந்த அரசாங்கம் தவறியமைக்கான காரணம் குறித்தும் பெல்ட்மன் இச்சந்தர்ப்பத்தில் அமைச்சரிடம் கேள்விகளை எழுப்பினார்.

அவற்றிற்குப் பதிலளிக்கும் போது முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் ஹக்கீம் மேலும் தெரிவித்ததாவது,

எங்களது கட்சி பிளவுபடாது பாதுகாப்பதற்காகவும், நாம் பிரதிநிதித்துவப்படுத்தும் மக்களின் குறைந்தபட்ச தேவைகளையாவது நிறைவேற்றுவதற்காகவும் விருப்பக் குறைவோடாவது மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்க வேண்டிய நிர்ப்பந்தம் எங்களுக்கு ஏற்பட்டது.

யுத்தத்தை வெற்றிக் கொண்டு விட்டதாக இறுமாப்பில் இருந்த முனைய ஜனாதிபதி, இனங்களுக்கிடையிலான துருவப்படுத் தலைக் குறைப்பதற்கும், விரிசலை நீக்கு வதற்கும் என வெறும் கண் துடைப்பிற்காக சில காரியங்களைச் செய்தாரே தவிர உண்மையான இதய சுத்தியோடு எந்த விதமான பயனுள்ள முன்னெடுப்புகளையும் அவர் மேற்கொள்ளவில்லை.

இனப்பிரச்சினைக்கான தீர்வைக் காணப்பதற்காக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நியமித்த பாராளுமன்றத் தெரிவுக் குழுவில் அரசாங்கத்தின் பங்காளிக் கட்சியாக இருந்த, இந் நாட்டு முஸ்லிம்களின் அதிக பட்ச ஆணையைப் பெற்ற ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் இணைத்துக் கொள்ளப்படவில்லை. அதுமட்டுமல்லாது. சர்வகட்சி பிரதிநிதிகள் குழுவின் தலைவராக இருந்த இடதுசாரி அரசியல் தலைவர்களில் ஒருவரான பேராசிரியர் திஸ்ஸ விதாரண கூட அதில் இடம்பெறச் செய்யப்பட வில்லை. வேண்டுமென்றே நாம் முன் னைய அரசாங்கத்தினால் புறக்கணிக்கப் பட்டோம்.

சிறுபான்மைச் சமூகங்களுக்கு எதிராக தெற்கில் இனவாதம் கட்டவிழ்த்துவிடப் பட்டது. பொதுபலசேனா மற்றும் பேரின வாதச் சக்திகளுக்கு அப்போதைய அரசாங்க உயர்மட்டத்தினரின் அனுசரணை கிடைத்தது. அவர்கள் போஷித்து வளர்க்கப்பட்டனர். இனவாதம் மட்டு மல்லாது, ஊழல் மற்றும் மோசடிகள் நிறைந்த அப்போதைய அரசாங்கத்திற்கு முடிவு கட்டுவதற்கு சிறுபான்மையினர் உட்பட நாட்டு மக்க ளில் பெரும்பான்மை யானோர் முன் வந்தனர்.

மலர்ந்துள்ள புதிய ஆட்சியில் பாராளுமன்ற சமநிலைப் பேணுவதில் நிலவும் கருத்து வேறுபாடுகள், முந்திய ஜனாதிபதியின் விசுவாசிகளின் செயற்பாடுகள் என்பன சவாலாக இருந்த போதிலும், நூறு நாள் திட்டத்தின் பின்னர் பாராளுமன்றத் தேர்தலொற்றை நடாத்தி தேசிய அரசாங்கமொன்றை நிறுவி நாட்டில் நல்லாட்சியை ஏற்படுத்துவதில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோர் மிகவும் முனைப்பாகவுள்ளனர்.

நான் நீதியமைச்சராக பதவி வகித்த போது பாராளுமன்றத்தில் சட்டமாக்க முன்வந்த முக்கிய சட்டங்களை முன்னைய ஆட்சி தடுத்து நிறுத்தியது என்றார்.

5 comments:

  1. தலைவர் அவர்களே, சம்பந்தனை குரு என்கிறீர்கள்... உங்களை ஏகலைவன் என்கிறீர்கள் ஆனால் உங்களது நடவடிக்கைகள் அப்படி அமையவில்லையே. தவிசாளர் தாவுது பாலகுமாரின் புராணம் பாடுகிறார்.. ஒன்றுமே புரியுதில்லையே... அது சரி... கட்சி பிளவுபடாமல் இருப்பதற்கு.. என்று அடிக்கடி கூறுகிரீர்கள் அது எப்படி யார் யார் கட்சியை விட்டு போயிருப்பார்கள் என்பதை மக்களுக்கு கூற முடியுமா?? இனிமேலும் இப்படியான சூழ்னிலை உருவாகாதா? அல்லது உங்களை காப்பாற்றி கொள்ளவும்... பட்டம், பணம், பதவிகளுக்குமே சென்றீர்களா???

    தனது பொண்டாட்டி கள்ளப்புரிசனுடன் ஓடியதால் தானும் அவளுடன் சேர்ந்து ஓடினேன் என்று கூறுவது போல் உள்ளது அதாவது மனைவி பாலியல் தொழிலுக்கு சென்றாள் அதனால் அவளுடன் சேர்ந்து நானும் சென்றேன் என்று கூறுவது போல் உள்ளது உங்கள் கூற்று - இந்த கருத்துப் பட ராவய விக்டர் ஐவனும் கூறினார்.

    மக்களின் குறைந்த பட்ச தேவை எது என உங்களால் கூற முடியுமா? அவை நிறைவேரப்பட்டுள்ளதா? அல்லது உங்களினதும் உங்களின் அடிவருடிகளினதும் குறைந்த பட்ச தேவைகளுக்காக ராஜா பக்ச அரசாங்கத்தில் கடைசி காலம் வரை அனுபவித்து விட்டு வந்தீர்களே... எப்படி..????? மக்களுக்கு விளக்கும் கூற முடியுமா????

    இவ்வளவும் நடந்திருந்தும் தெரிந்திருந்தும் இன்னும் உங்களது கொள்கையற்ற அரசியலையும் உங்களது இயலாமையையும் திரும்ப திரும்ப உள்ளுரிலும் வெளிநாட்டில் இருந்து வரும் அரசியல் வாதிகளிடமும், தூதுவர்கலிடமும் ( diplomate ) கூறுகிரீர்களே.... இது முஸ்லிம் சமுகத்தின் அரசியல் பயணத்தை உரிமையை இருட்டடிப்பு செய்கிறீர்கள். இதுவல்ல கூறப்பட வேண்டிய விடயம். இவர்கள் மூலம் மத்தியில் உள்ள அரசாங்கத்துக்கு முஸ்லிம்களின் உரிமைகளுக்கு தேவைகளுக்கு பாதுகாப்புக்கு அழுத்தம் கொடுக்கப்பட வேண்டிய விடயங்கள் பேசப்பட வேண்டும்.

    என்னப்பா இந்த முஸ்லிம் சமூகத்தில் இந்த கட்சியின் தலைமையையும் அதன் அடிவருடிகளின் இயலாமையையும் சுயநல அரசியலையும் தட்டிக் கேட்பதற்கும் சமூகத்தை சரியான வழியில் இட்டு செல்வதற்கும் படித்தவர்கள், புத்தி ஜீவிகள், விரிவுரையாளர்கள், பட்டதாரிகள், பல்கலைகழக மாணவ மாணவிகள், சமூக சேவை ஆர்வலர்கள், சமூக பற்றுள்ள துடிப்புள்ள இளைஞ்சர்கள்.... இல்லையா???????????????

    Jaffna Muslim மும் இந்த சமூகத்துக்கு இதுவிடயமாக மக்களை விளிப்பூட்ட வேண்டும்.

    ReplyDelete
  2. Mr. Hakkem Please Don't Talk Your Bulshit Comments Ok Your Not Leader Your are The Actor We Can See What Is Happening Now

    ReplyDelete
  3. VELAIKARIKKU PILLAI CHATTAM

    ReplyDelete
  4. MR.HAKEEM IS A SUITABLE LEADER FOR SRILANKA MUSLIM CONGRESS.THERE IS NO ANY DHOUGHT FOR SRILANKA MUSLIMS, BUT, SOME PERSONS MAY WRITE IN A SEPARATE WAYS, WE DONT NEED ANY WORRIED ABOUT THAT.WISH HIM ALL THE SUCCESS IN THE FUTURE FOR ALL SRILANKA MUSLIMS

    ReplyDelete

Powered by Blogger.