Header Ads



தமிழ் ஆயுத குழுக்களினால் பாதிக்கப்பட்ட, முஸ்லிம்கள் சாட்சியமளிக்க முன்வந்தனர்

 -ஜென்ஸாபாபு  -
             
திருகோணமலை மாவட்டம் குச்சவெளி பிரதேச செயலகத்தில்  28ஆம் திகதி சனிக்கிழமையும், மார்ச் 1ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமையும்   காணமல் போனோர் தொடர்பான முறைப்பாடுகளை விசாரனை செய்யும்  ஜனதிபதி ஆணைக்குழு விசாரணைகளை ஆரம்பித்தது.

ஆயுதம் தாங்கிய தமிழ் போராளிகளினால் கடத்தப்பட்டுக் காணாமல் போய், கொலை செய்யப்பட்டவர்களில் சில தமிழ் முஸ்லிம் சிங்கள உறவுகள் பகிஸ்கரிப்பாளர்களின் கூட்டத்தில் பங்குபற்றாது  இவ் விசாரணைக்குழு முன் தோன்றி சாட்சியமளித்தனர். 

இதில் காசிம் நகர் கிராம சேவகர் பிரிவல் 15 குடும்பம், ஜாயநகரில் 6 குடும்பம், புல்மோட்டையில் 32 முஸ்லிம் குடும்பமும் அழைப்புக் கடிதத்துடன்  வந்திருந்தனர். சனிக்கிழமை 60 பேரும் ஞாயிற்றுக்கிழமை மதியம் வரை 47 பேர் சாட்சியமளித்துள்ளனர். திருகோணமலை மாவட்டத்தில் யுத்தத்தின் போது   ஆயதம் தரித்த தமிழ்  ஆயுததாரிகளினாலும் அரச இரானுவத்தினராலும், இந்திய இரானுவத்தினராலும், முஸ்லிம் பெயர் தாங்கிய ஆயதக்குழுக்களாலும், இனந்தெரியாத நபர்கள் என்ற பேரிலும் தாம் வெகுவாகப் பாதிக்கப்பட்டதாக ; குச்சவெளி பிரதேச தமிழ் முஸ்லிம்கள் தெரிவித்தனர் உயிராலும்,உடலாலும்,பொருலாளும் பாதிக்கப்பட்டுள்ள எமக்கு இந்த நல்லாட்சியில் ஏதாவது விமோசனம் கிடைக்க வேண்டுமென எதிர்பார்க்கின்றோம் என தன் மகனை 2008.ம் ஆண்டு இளந்த  அபுசாலிபு தெரிவத்தார்.

காணாமல் போண முஸ்லிம் உறவுகளைத் தேடி வந்திருந்த மிகவும் வயது முதிர்ந்த தாய்மார்கள் ஆணைக்குழு முன் தோண்றி  கண்ணீர்விட்டழுது சாட்சியமழித்தனர். தங்களுக்குச் சொந்தமான காணிகளை சிலர் அபகரித்துள்ளதாகவும், காணி ஆவணம் வழங்கு வதற்குகூட பிரதேச அதிகாரிகள் மறுத்து வருவதாகவும் இதன் போது தமது சொந்தப் பிரச்சினைகளையும் இங்கு தெரிவித்தனர். 

இதேநேரம் புல்மோட்டை, புடவைக்கட்டு,குச்சவெளி, இறக்க்கண்டி, நிலாவெளி, இக்பால்நகர்,ஜமாளியா ஆகிய கிராமங்களில் விடுதலைப் போராட்டத்தில் இணைந்து போராடிக் காணாமல் போன முஸ்லிம் இளைஞர்களின் தாய்,தந்தையரும் சாட்சியமளிக்க வந்திருந்தனர்.முன்னய அரசாங்க காலத்தில் தாங்களும் பழிவாங்கப்படுவோம் என்ற பயத்தினால்  இவர்களெல்லாம் எந்தப்பதிவும்; மேற்கொள்ளவில்லை  இளப்பீடு எதுவும் பெற்றுக் கொள்ளவும் இல்லை.என தம் பிள்ளைகளை இளந்த பெற்றோர்கள் தெரிவத்தனர். திங்கள் கிழமை திருகோணமலை பட்டணமும் சூழல் பிரதேச செயலகத்தில் விசாரணை தொடர்கிறது.


No comments

Powered by Blogger.