Header Ads



'முஸ்லிம்கள் தவறாக நடத்தப்பட்டுள்ளார்கள்' - மஹிந்த ராஜபக்ஸ குற்றச்சாட்டு

-gtn-

இலங்கையில் ஒரு கிளர்சி சதி இடம்பெற்றிருக்கின்றது. இதன் பின்னணியில் ரோ (இந்தியாவின் புலனாய்வுப் பிரிவு) இருந்துள்ளது” என முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ சீற்றத்துடன் தெரிவித்திருக்கின்றார்.

“கிழக்கு மாகாணத்திலுள்ள முஸ்லிம்களும், வடபகுதி மக்களும் சர்வதேச சக்திகளால் தவறாக நடத்தப்பட்டுள்ளார்கள்” எனவும் பாகிஸ்தானிலிருந்து வெளிவரும் பிரபல ஆங்கிலத் தினசரியான ‘டோன்’  பத்திரிகைக்கு மகிந்த ராஜபக்ஸ தெரிவித்தார்.

தங்காலையிலுள்ள தன்னுடைய கால்டன் இல்லத்தில் வைத்து டோன் பத்திரிகையாளருக்கு மகிந்த பேட்டியளித்தார். 

விடுதலைப் புலிகளின் ஆயுதப் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டுவருவதற்கு பாகிஸ்தான் இலங்கைக்கு உதவியதாகத் தெரிவித்த ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸஷ, “அமெரிக்கா, ஐரோப்பா, மேற்கு நாடுகளைப் பாருங்கள். அவர்கள் எமது நண்பர்களல்ல” எனவும் குறிப்பிட்டார்.

“பாகிஸ்தான் எமக்கு உதவியது. விஷேடமாக முஸாரப் உதவினார். இப்போது எமது நாட்டில் என்ன நடைபெற்றிருக்கின்றது எனப் பாருங்கள்? இங்கு ஒரு சதி இடம்பெற்றிருக்கின்றது. இதன் பின்னணியிர் ரோ (இந்திய புலனாய்வு நிறுவனம்) இருந்துள்ளது” எனவும் மகிந்த ராஜபக்ஸ சீற்றத்துடன் குற்றஞ்சாட்டினார்.

தேர்தலில் கிடைத்த தோல்வி பற்றி குறிப்பிட்ட மகிந்த ராஜபகஸஷ, “கிழக்கு மாகாணத்திலுள்ள முஸ்லிம்களும், வடமாகாண மக்களும் சர்வதேச சக்திகளால் தவறாக வழிநடத்தப்பட்டுள்ளார்கள்” எனக் குறிப்பிட்டார்.

பாகிஸ்தான் மக்களுக்கு ஏதாவது செய்தி சொல்ல வரும்புகின்றீர்களா எனக் கேட்கப்பட்டபோது, “இந்தக் கிளர்சிச் சதி விரைவில் முடிவுக்கு வந்துவிடும் என நம்புகின்றோம்” எனத் தெரிவித்தார்.

“இப்போதும் நீங்கள் ஜோதிடத்தை நம்புகின்றீர்களா?” எனக் கேட்கப்பட்டபோது, “இப்போது நான் நம்பவில்லை” எனக் கூறி பலமாகச் சிரித்தார்.

5 comments:

  1. உமக்கு அனைத்தும் தெரியும். உனது ஆசீர்வாதத்துடன் தான் முஸ்லிம்களுக்கு எதிரான அனைத்து நடவடிக்கையும் நடந்தது.

    உம்மை போன்றுதான் தலைவர் ஹக்கீமுக்கும் அவரது அடிவருடிகளுக்கும் நடக்கும். தற்போது இவர்கள் முஸ்லிம் மக்களினதும் புத்தி ஜீவிகளினதும் மிகவும் உன்னிப்பான கவனிப்பில் உள்ளார்கள்.

    ReplyDelete
  2. BBS created problems for muslims but firmer president did not take any action against bbs. That's why he was defeated

    ReplyDelete
  3. Same thing will happen to slmc in future

    ReplyDelete
  4. போதும் போதும் ஒண்ட வேலயப் பார்த்துக்கிட்டு சும்மா இரு. முஸ்லிம்களைக் கொன்றொழிக்க ஞானசாரைக்கு இடமளித்த நீ முதலைக் கண்ணீர் வடிக்காதே.

    ReplyDelete
  5. Dear Bro Lankacool,

    Assalamu Alaikkum,

    Let me first of all apologize for not being able to writ in Tamil hope you will be able to understand English.

    You are a typical Muslim emotional thinker and this has become the curse of our community.

    If you believe that SLMC is necessary will you please enlighten me on the following.

    1. What are the objective/s of the SLMC
    2. What are the achievements of the SLMC since its founding
    3. How has it contributed to the welfare of the community
    4. Is “Muslim Politics” rather religion based Politics necessary for SL particularly for SL Muslims
    5. Is not the SLMC the predecessor for BBS and the rest of such religion based political parties
    6. Should not we, the SL Muslims, be more rational than emotional
    Will any kind hearted Bro enlighten me and many other brothers and sisters who are cynical about “Religion based politics”

    Abdul

    ReplyDelete

Powered by Blogger.