Header Ads



எகிப்தில் இப்படியும் ஒரு திருமணம் (வீடியோ இணைப்பு)

எகிப்தில் வடக் கெய்ரோவில்உள்ள மெனோபியா  என்னும் பகுதியில் நேற்று அகமது ஷெஹட்டா - ஷாய்மா டெப் -25-23 என்ற மணமக்களின் திருமணம் நடைபெற்றுள்ளது.

ஆனால் இவர்களின் திருமணம் சற்று வித்தியாசமாக இருக்க வேண்டும் என்பதற்காக, அகமது தன் மனைவிக்கு சற்று அதிர்ச்சியை ஏற்படுத்தும் விதத்தில் செயல் ஒன்றை செய்துள்ளார்.

இவர்களின் திருமணம் நடந்து கொண்டிருக்கும் வேளையில், திடீரென ஐ.எஸ் வாதிகளை போல் வேடமிட்டு, முகமூடி அணிந்த நபர்கள் கையில் ஆயுதங்களுடன் வந்துள்ளனர்.

இதன்பின் இவர்களை சிறையில் அடைத்த அவர்கள் அரேபிய மொழிகளில் கோஷமிட்டுள்ளனர்.

அப்போது ஐ.எஸ்-யின் இஸ்லாமிய கீதம்(Islamic Anthem) பின்னணியில் ஒலித்துக் கொண்டே இருந்துள்ளது.

இதை பார்த்து முதலில் பயந்த ஷாய்மா, பிறகு தன் கணவர் விளையாட்டாகவே இவ்வாறு செய்துள்ளார் என்பதை புரிந்து கொண்டுள்ளார்.

தற்போது இணையதளத்தில் வெகு விரைவாக பரவி வரும் இந்த வீடியோவை பார்த்த பலர், அகமதின் செயலுக்கு பலத்த எதிர்ப்பினை தெரிவித்துள்ளனர்.

ஆனால் இதுகுறித்து ஷாய்மா கூறுகையில், ஐ.எஸ் வாதிகளை எதிர்க்கும் நோக்கத்திலேயே என் கணவர் இப்படி ஒரு ஏற்பாட்டை செய்தார் என்றும் அவரது செய்தது ஒன்றும் தவறில்லை எனவும் கூறியுள்ளார்.

No comments

Powered by Blogger.