Header Ads



மாணவர்களை கடத்தி, பெற்றோரிடம் கப்பம் கோரிய கடற்படை பிரிவு

கடற்படை முன்னாள் பேச்சாளர் டி.கே.பி. தசநாயக்க தலைமையிலான குழு விசேட கடற்படைப் பிரிவு போன்று இயங்கி 10 மாணவிகளை கடத்தி அவர்களின் பெற்றோர்களிடம் கப்பம் பெற்றுள்ளதாக விசாரணை மூலம் தெரிய வந்துள்ளது. இந்த குழுவிடம் இருந்து காணாமல் போன 5 மாணவர்களின் அடையாள அட்டைகள் மீட்கப்பட்டுள்ளதோடு கடந்தப்பட்ட மாணவர்கள் உயிருடன் உள்ளனரா கொல்லப்பட்டுள்ளனரா என தகவல் தெரியாதிருப்பதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரிசாந்த ஜெயகொடி தெரிவித்தார்.

மாணவர்கள் கடத்தப்பட்ட சம்பவம் தொடர்பான பல தகவல்கள் அம்பலமா கியுள்ளதாக குறிப்பிட்ட அவர் இது குறித்து மேலும் கூறியதாவது,

2008/09 ஆம் ஆண்டு காலப்பகுதியில் உயர்தர மற்றும் பல்கலைக்கழக மாணவர்கள் காணாமல் போனது குறித்த தகவல் பொலிஸ¤க்கு கிடைத்தது. முன்னர் கடற்படை தளபதியாக இருந்த கரந்தெனியவினால் பொலிஸ் மா அதிபருக்கு இது குறித்து அறிவிக்கப்பட்டிருந்தது. திருகோணமலையிலும் கொழும்பிலும் கடற்படை விசேட பிரிவு இயங்கி வந்துள்ளது. இதனடிப்படையிலே பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்தனர்.

இந்த சம்பவம் தொடர்பில் முன்னாள் கடற்படை பேச்சாளர் உட்பட 7 கடற்படை சிப்பாய்களிடம் வாக்கு மூலம் பெறப்பட்டுள்ளது. வேன் மற்றும் வாகனங்களிலே இம்மாணவர்கள் கடத்தப்பட்டுள்ளனர். இவர்களில் அநேகர் பணக்கார வீட்டு பிள்ளைகளாவர்.

இவர்கள் தமது பெற்றோருடன் தொலைபேசியில் பேச வைக்கப்பட்டுள்ள தோடு பின்னர் பல இலட்சம் ரூபா கப்பமாக பெறப்பட்டுள்ளது. ஆனால் எந்த மாணவரும் விடுவிக்கப்படவில்லை. காணாமல் போனவர்களில் கூடுதலானவர்கள் கொழும்பு பிரதேச மாணவர்களாகும்.

No comments

Powered by Blogger.