Header Ads



பொலன்­ன­று­வையில் தகர்க்­கப்­பட்ட கட்­டடம், பள்­ளி­வாசல் அல்ல - முஜிபுர் ரஹ்மான்

பொலன்னறு­வையில் பொதுக்­கட்­ட­ட­மொன்றை இடித்து தரை­மட்­ட­மாக்­கி­யமை கண்­டிக்­கத்­தக்­கது என தெரி­வித்த மேல்­மா­காண சபை உறுப்­பினர் முஜிபுர் ரஹ்மான், பொலி­ஸா­ருக்கு கூட அந்த அதி­காரம் கிடை­யாது என தெரி­வித்தார்.

பொலன்­ன­று­வையில் பள்­ளி­வாசல் தகர்க்கப்பட்­ட­தாக செய்­திகள் பர­வி­யுள்ள நிலையில், முஜிபுர் ரஹ்­மா­ன் இவ்­வாறு தெரி­வித்தார்.
அவர் மேலும் தெரி­விக்­கையில், 

பொலன்­ன­று­வையில் தகர்க்­கப்­பட்ட கட்­டடம் பள்­ளி­வாசல் அல்ல. அது ஆரம்­பத்தில் பொது கட்­ட­மா­கவே ஒரு தன்­னார்வ தொண்டு நிறு­வ­னத்­தினால் அமைக்­கப்­பட்­டது. பின்னர் இதில் இஸ்­லா­மிய நிலையம் அமைக்­கப்­போ­வ­தாக தெரி­விக்­கப்­பட்­டது, ஆனால் இதனை கட்­டு­வ­தற்­கான அனு­ம­தியை பிர­தேச சபை­யிடம் அவர்கள் கோரி­யி­ருக்­க­வில்லை. இந்­நி­லையில் இதனை பள்­ளி­வா­ச­லாக கட்­டு­வ­தற்கு முயற்­சிகள் மேற்­கொள்­ளப்­பட்­டுள்­ளன.  பிர­தேச மக்­களின் எதிர்ப்­பு­க­ளுக்­கு­ப் பின்னர் இதனை பிர­தேச சபையில் பதி­வ­தற்­கான நட­வ­டிக்கை சம்­மந்­தப்­பட்ட அரச சார்­பற்ற நிறு­வ­னத்­தினால் முன்­னெ­டுக்­கப்­பட்­டுள்­ளது. 

பல எதிர்ப்­பு­க­ளுக்கும் மத்­தியில் அமைக்­கப்­பட்ட இந்த கட்­டடம் பிர­தே­ச­வா­சி­களால் அகற்­றப்­பட்­டுள்­ளது. முதலில் இது சட்­ட­வி­ரோ­த­மான கட்­டடம் என்­பதை நாம் விளங்­கிக்­கொள்­ள­வேண்டும். என்­றாலும் இந்த கட்­ட­டத்தை அகற்­று­வ­தற்கு பொது மக்­க­ளுக்கோ பொலி­ஸா­ருக்கோ அனு­மதி கிடையாது. 

புதிய ஜன­நா­யக கூட்டணியின் ஆட்­சியில் சட்­டத்தை யாரும் கையில் எடுக்க முடி­யாது என நாம் தேர்தல் பிரச்­சாரக் கூட்­டத்­தின்­போதே தெரி­வித்து வந்தோம். இந்­நி­லையில் தற்­போது இவ்­வாறு சட்டம் தனி­ ந­பர்­களால் கையில் எடுக்­கப்­பட்­டுள்­ளது. இதற்கு அனு­மதி வழங்க முடி­யாது. அவ்­வாறு அனு­ம­தி­ய­ளித்தால், இதனை நல்லாட்சிக்கான பண்பு எனக் கூற முடியாது. இவ்வாறான கட்­ட­டத்­தை முறைப்­படி அகற்ற பிர­தேச சபைக்கு மட்­டுமே அதி­­காரம் உள்­ளது என்­றார்.

2 comments:

  1. So wt action has been taken Mr mpc

    ReplyDelete
  2. முதலில் உண்மையை மக்கள் திரிபுபடாமல் விளங்கிக்கொள்வது அவசியம். ஊடகங்கள் பொறுப்பாக நடந்துகொள்வது இதற்குப் பெரிதும் உதவும்.

    ReplyDelete

Powered by Blogger.