Header Ads



போர் குற்றம் புரிந்த இஸ்ரேல் மீது, சர்வதேச நீதிமன்றத்தில் வழக்கு

போர் குற்றம் புரிந்ததாக இஸ்ரேல் மீது சர்வதேச குற்றவியல்கோர்ட்டில் முதன்மறையாக பாலஸ்தீனம் வழக்கு தொடர உள்ளது.

இஸ்ரேல்-பாலஸ்தீனம் இடையே கடந்த 1967-ம் ஆண்டு முதல் பிரச்னை இருந்து வருகிறது. பாலஸ்தீனம் தனிநாடு கோரிக்கையும் எழுந்துவருகிறது. பாலஸ்தீனத்தின் கட்டுப்பாட்டில் காஸா, மேற்குகரை, ரமல்லாஹ் ஆகிய பகுதிகள் மீது இஸ்ரேல் ராணுவம் தொடர்ந்து தாக்குதல் நடத்தி அங்கு குடியிருப்பவர்களை விரட்டியடித்தும் வருகிறது.

இந்நிலையில் பாலஸ்தீன விடுதலை இயக்கம் ,சர்வதேச குற்றவியல் கோர்ட்டில் வரும் ஏப். 1-ம் தேதி வழக்கு தொடர உள்ளது.

இந்த இயக்கத்தின் நிர்வாக கமிட்டி உறுப்பினர் ஒருவர் கூறுகையில், பாலஸ்தீனத்தின் காஸா பகுதியில் கடந்த ஆண்டு ஜுன் மாதம் முதல் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 2,200 அப்பாவி பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர். இது குறித்து முதற்கட்ட விசாரணை நடத்திட வேண்டும் என கடந்த ஜன.16-ம் தேதி சர்வதேச குற்றவியல் கோர்ட்டில் முறையிட்டோம். ஏற்கனவே பாலஸ்தீனம் கடும் நிதியில் சிக்கியுள்ளது. எனவே இஸ்ரேல் மீது போர் குற்றவிசாரணை நடத்திட கோரி ஏப்.1-ம் தேதி நெதர்லாந்தின் ஹோக் நகரில் உள்ள சர்வதேச குற்றவியல் கோர்ட்டில் வழக்கு தொடரப்படும் என்றார்.

இது குறித்து இஸ்ரேல் வெளியுறவு அமைச்சகம் பதில் கூற மறுத்துவிட்டது.

1 comment:

Powered by Blogger.